காணாமல் போனோரின் பிரச்சினை: தீர்வுகள் எட்டப்படும் வரை கொடுப்பனவை அதிகரிக்குக

சபையில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி வலியுறுத்து

0 620

காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் வரை அவர்­களின் உற­வு­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள  ஆறா­யிரம் ரூபா கொடுப்­ப­னவை  அதி­க­ரித்து வழங்க வேண்­டு­மென கமத்­தொழில்,  நீர்ப்­பா­சனம் மற்றும் கிரா­மியப் பொரு­ளா­தார இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலி சபையில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற 2019 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் மல­சல கூடங்கள் இல்­லாமல் மக்கள் வாழ்­கின்­றனர்  என  சபையில் நாம்  பேசு­வ­தை­யிட்டு வெட்­கப்­ப­ட­வேண்டும். எனினும் இந்த  வரவு செல­வுத்­திட்­டத்த்தில் மல­சல கூட வச­தி­களை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில்  3600 மல­சல கூடங்­களை அமைக்க இந்­திய அரசு முன்­வந்­துள்­ளது. இதற்­காக இந்­திய அர­சுக்கு நன்றி தெரி­விக்­கின்றோம். இவ் வரவு செல­வுத்­திட்­டத்தில் காணாமல் போனோரின் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் வரை அவர்­களின் உற­வு­க­ளுக்கு 6000 ரூபா கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த அறி­விப்பு இது­வாகும். எனினும் இத்­தொகை போதாது. 6000 ரூபா கொடுப்­ப­னவை மேலும் அதி­க­ரிக்க வேண்டும். அத்­துடன் மேல­தி­க­மாக  ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி நிவா­ரணம் வழங்­கப்­ப­டு­மெ­னவும் இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. சமுர்த்­தியைப் பொறுத்­த­வ­ரையில் அது இன்­னமும் வடக்கு, கிழக்கு மாகா­ணத்தை முழு­மை­யாகச் சென்­ற­டை­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டை முன்­வைக்­கிறேன். எனவே இந்த 6 இலட்சம் பேரில் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட வேண்டும். இதே­வேளை வடக்­கி­லி­ருந்து வெளி­யே­றிய முஸ்லிம் மக்­களின் மீள் குடி­யேற்றம் தொடர்­பிலும் இவ்­வ­ரவு செல­வுத்­திட்­டத்தில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதனால் இடம்­பெ­யர்ந்­துள்ள முஸ்லிம் மக்­க­ளுக்கு புது நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது. அதே­வேளை வடக்கு மக்­க­ளுக்கு 15000 வீடுகள் அமைத்­துக்­கொ­டுக்­கவும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது. வடக்கு மக்­களின் வீட்டுத் தேவை­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் இது மிகவும் சிறிய தொகை­யாகும்.

கொழும்­புக்­குப்பை கூளங்­களை புத்­தளம் அறு­வாக்­காட்­டுக்கு கொண்டு சென்று கொட்டும் அரசின் திட்­டத்தை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம் .இத்­திட்­டத்­துக்­காக அரசு 7000 மில்­லியன் ரூபாவை செல­வி­ட­வுள்­ளது. கொழும்புக் குப்­பை­களை புத்­தளம் அறு­வாக்­காட்­டுக்கு கொண்­டு­செல்லும் திட்­டத்தின் பின்னால் பாரிய வர்த்­தகம் உள்­ளது. கொழும்புக் குப்­பை­களை 300கிலோ­மீற்­ற­ருக்கு அப்பால் ஏன் கொண்டு செல்­ல­வேண்டும்? கொழும்­பி­லி­ருந்து புத்­தளம் அறு­வாக்­காட்­டுக்கு குப்பை கொண்டு செல்­வ­தற்­கான வாகனக் கூலி­க­ளி­லி­ருந்து இவ்­வர்த்­தகம் ஆரம்­பிக்­கின்­றது.

இத்­திட்­டத்தின் மூலம் யாருக்கு தர­குப்­பணம் கொடுக்­கப்­போ­கின்­றீர்கள், யாரை வளப்­ப­டுத்தப் போகின்­றீர்கள் எனப் பிர­த­ம­ரிடம் கேட்க விரும்­பு­கின்றோம். குப்­பை­களை ப்பயன்­ப­டுத்தி மின்­சாரம் பெறக்­கூ­டிய வழி­மு­றைகள் இருந்தும் அவ்­வாறு செய்­யாது புத்­தளம் அறு­வாக்­காட்­டுக்கு தின­மொன்­றுக்கு 1200 மெற்­றிக்தொன் குப்­பை­களை கொண்டு சென்று கொட்டும் திட்­டத்தின் பின்­னணி என்ன? இவ்­வி­ட­யத்தில் விட­யத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மனி­தா­பி­மா­னத்­துடன் செயற்­பட வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்றோம். உங்­களால் இக்­குப்­பைப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாது விட்டால் அந்த வேலையை எம்­மிடம் ஒப்­ப­டை­யுங்கள். நாங்கள் உங்­க­ளுக்கு அந்தக்குப்பைகளிலிருந்து மின்சாரம் பெற்றுத்தருகின்றோம் கொழும்புக் குப்பைகளை புத்தளம் அறுவாக்காட்டுக்கு கொண்டுவரும் அரசின் திட்டம் தங்களை அழிக்கும் திட்டமென அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அப்பகுதியில் 95 வீதமானவர்கள் முஸ்லிம் மக்கள். எனவே தயவு செய்து இந்த அநியாயத்தை செய்யாதீர்கள். இதனை செய்ய நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.