எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வரவு – செலவுத் திட்டம்

0 690

பாரா­ளு­மன்­றத்தில் வர­வு –­ செ­ல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. தற்­போது வர­வு –­ செ­ல­வுத்­திட்ட விவாதம் நடை­பெற்று வரு­கி­றது. மக்கள் நிவா­ர­ணங்கள் நிறைந்த வர­வு–­செ­ல­வுத்­திட்­ட­மொன்­றி­னையே எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்­தார்கள். அவர்­க­ளது எதிர்­பார்ப்­புகள் கானல் நீரா­கி­விட்­டது என்றே கூற வேண்டும்.

வர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்தில் அரச ஊழி­யர்­களின் மாத சம்­பளம் 2500 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­தோடு பாது­காப்பு படை­யி­ன­ருக்­கான கொடுப்­ப­ன­வுகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் அத்­தி­யா­வ­சிய உணவுப் பொருட்­களின் விலை­களில் எவ்­வித குறைப்­பு­களும் இடம்­பெ­ற­வில்லை. நாடு தொடர்ந்தும் கடன் சுமைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தே­யன்றி வர­வு – ­செ­லவுத் திட்­டத்தில் மக்கள் நலன்­க­ரு­திய திட்­டங்கள் எதுவும் இல்­லை­யென மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

வர­வு –­ செ­ல­வுத்­திட்­டத்தைத் தோற்­க­டிப்போம் என எதிர்க்­கட்சி சூளு­ரைத்­துள்­ளது. இதே­வேளை, ஜனா­தி­ப­திக்­கான வர­வு–­செ­ல­வுத்­திட்­டத்தின் ஒதுக்­கீ­டு­க­ளுக்கு எதிர்த்து வாக்­க­ளிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளார்கள்.

1977 ஆம் ஆண்­டு­களில் ஜே.ஆர். ஜய­வர்­தன காலத்தில் திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை கடைப்­பி­டிக்­கப்­பட்­டது என்­றாலும், பொரு­ளா­தா­ரத்தில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் எதுவும் நிக­ழ­வில்லை.

இன்று எமது நாட்டின் பொரு­ளா­தாரக் கொள்கை என்ன? என்று கேள்­வி­யெ­ழுப்ப வேண்­டி­யுள்­ளது. புதிய நவீன பொரு­ளா­தாரம் என்று தெரி­விக்­கப்­பட்­டாலும் நவீன பொரு­ளா­தா­ர­மாக தெரி­ய­வில்லை. எமது இன்­றைய பொரு­ளா­தாரம் வரிகள் மூலம் வரு­மா­னத்தைத் தேடிக் கொள்­வ­தாக அமைந்­துள்­ளது. வரி­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பொரு­ளா­தாரக் கொள்­கை­க­ளுடன் எம்மால் நீண்ட தூரம் பய­ணிக்க முடி­யாது.

எமது நாட்டில் இல­வசக் கல்வி தொடர்ந்தும் அமுலில் உள்­ளது. இல­வச வைத்­திய சேவைகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. பொது போக்­கு­வ­ரத்துச் சேவையும் நடை­மு­றையில் உள்­ளது. இந்தச் சேவை­க­ளுக்­காக அர­சாங்கம் கோடிக்­க­ணக்­கான ரூபாய்­களைச் செல­வி­டு­கி­றது. இந்தச் செல­வனங்­களை ஈடு செய்­வ­தற்­கா­கவே மக்கள் மீது வரிச்­சுமை ஏற்­றப்­ப­டு­கி­றது. அபி­வி­ருத்­தி­ய­டைந்­துள்ள அநேக நாடு­களில் இவ்­வா­றான இல­வச சேவைகள் அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அந்­நா­டு­களின் மக்­க­ளது வாழ்க்கைத் தரம் உயர்ந்­த­தாக இருக்­கி­றது. அவர்­க­ளது பொரு­ளா­தார நிலை உயர்­நி­லையில் இருப்­பதே இதற்குக் காரணம். அதனால் அவர்கள் அனைத்து சேவை­க­ளையும் பணம் செலுத்­தியே பெற்றுக் கொள்­கின்­றனர்.

ஆனால் எமது நாட்டின் நிலைமை வேறு. எமது மக்­களின் பொரு­ளா­தார நிலைமை கீழ் மட்­டத்­தி­லேயே இருக்­கி­றது. அத­னாலே அவர்கள் நிவா­ர­ணங்­களை எதிர்­பார்க்­கி­றார்கள். நிவா­ர­ணங்­க­ளுடன் கூடிய வர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்­தையே அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். அதனால் மக்­க­ளுக்கு நாம் கல்வி, சுகா­தாரம் போன்­ற­வற்றை இல­வ­ச­மா­கவே வழங்­கு­கிறோம். அதற்குப் பெரும­ளவு நிதியை செல­வி­டு­கிறோம். இத­னாலே வரிகள் விதிக்க வேண்­டி­யுள்­ளது என நாட்டின் நிதி­ய­மைச்சர் கூறு­வா­ரென்றால் அது அவரின் இய­லா­மையை பறை­சாற்­று­வ­தா­கவே அமையும்.

நாட்டின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து வர­வு – ­செ­ல­வுத்­திட்­டத்தில் கூடி­ய­தொகை துண்டு விழாது கொள்­கை­களை வகுப்­பது நிதி­ய­மைச்­சரின் பொறுப்­பாகும். மக்கள் ஏன் நிவா­ர­ணங்­களை எதிர்­பார்க்­கி­றார்கள் என்­பதை ஆட்­சி­யா­ளர்கள் சிந்­தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் இது தொடர்பில் ஆட்­சி­யா­ளர்கள் கவனம் செலுத்­து­வ­தில்லை. அவ்­வாறு சிந்­திப்­பார்கள் என்றால் மக்கள் மீது இந்­த­ள­வுக்கு வரி சுமத்த மாட்­டார்கள்.

நாங்கள் பாரிய கடன் சுமையில் இருக்­கிறோம் என்­பது உண்மை. வர­லாற்றில் அதி­க­ளது கடன் செலுத்த வேண்­டி­ய­வ­னாக அ­மைச்சர் என்ற வகையில் நான் இருக்­கிறேன்.

1640 பில்­லியன் டொலர் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதில் 80 வீதம் மஹிந்த ராஜபக் ஷ பத­விக்­கா­லத்தில் பெற்றுக் கொண்ட கடன்­க­ளாகும். 6 பில்­லியன் டொலர்கள் இந்த வருடம் கடன் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதில் 2 பில்­லியன் டொலர்கள் செலுத்­தப்­பட்­டு­விட்­டது. இன்னும் 4 பில்லின் டொலர் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. எதிர்­வரும் இரு வரு­டங்கள் மிகவும் சுமை கூடிய வருடங்களாகும். கடனை எவ்வாறு செலுத்துவது என்று நாங்கள் இப்போதிலிருந்தே திட்டமிடுகிறோம். கடன் செலுத்தப்படாவிட்டால் முழு நாடும் ஸ்தம்பித்து போய்விடும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் அமைய வேண்டும். தேர்தலை இலக்காகக் கொண்டதாக அல்லது மேல் மட்ட வர்க்கத்தினருக்குப் பயன்தரும் வகையிலான வரவு –செலவுத்திட்டம் நாட்டினை தொடர்ந்தும் கடன் சுமைக்கே தள்ளிவிடும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.