தமிழ்த்தரப்பு உடன்படாத எதையும் முஸ்லிம்களால் சாதிக்க முடியாதா?

0 776
  • வை.எல்.எஸ்.ஹமீட்

ஆளும் கட்­சியில் பங்­கேற்கும் ஒரு சிறிய அல்­லது சிறு­பான்மைக் கட்­சியின் பலம் என்­பது ஆட்­சியின் பிர­தான கட்­சியின் பாரா­ளு­மன்றப் பலம் அல்­லது பல­வீ­னத்தில் தங்­கி­யுள்­ளது. உதா­ர­ண­மாக மஹிந்­தவின் ஆட்­சியில் சிறு­பான்மைக் கட்­சி­களின் பலம் குன்­றி­யதாய் இருந்­தது. காரணம் அவரின் சொந்த பாரா­ளு­மன்ற பலம் தேவைக்­க­தி­க­மா­கவே இருந்­தது. மறு­புறம் சந்­தி­ரிக்­காவின் ஆட்சி முஸ்லிம் காங்­கி­ரஸில் தங்­கி­யி­ருந்­தது. அத­னால்தான் மறைந்த தலை­வரால் சாதிக்க முடிந்­தது.

இலங்கை வர­லாற்றில் ஆளும் கட்சி இம்­முறை இருந்­தது போன்று பல­வீ­ன­மாக ஒரு­போதும் இருந்­த­தில்லை. அதன் முழுப்­ப­லமும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளா­கவே இருக்­கின்­றன. குறிப்­பாக முஸ்லிம் கட்­சிகள் பிர­தான பாத்­தி­ரத்தை வகிக்­கின்­றன. அது அண்­மையில் கவிழ்க்­கப்­பட்ட ஆட்­சியை மீண்டும் தூக்கி நிறுத்­து­வதில் மிகவும் துல்­லி­ய­மாகப் புலப்­பட்­டது. ஆனாலும் சாதித்­த­தெ­து­வு­மில்லை.

ஓர் அடை­யா­ளத்­திற்­கா­வது அகற்­றப்­பட்ட ஒரு அலு­வ­ல­கத்தைக் கூட மீளக் கொண்­டு­வர முடி­ய­வில்லை.

மறு­புறம், ஆட்­சியின் ஆரம்­பத்தில் த.தே.கூ. இன் தேவை அர­சாங்­கத்­திற்கு இருக்­க­வில்லை. காரணம் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியும் ஆட்­சியில் பங்­கா­ளி­யாக இருந்­தது. ஆனாலும் அர­சியல் ராஜ­தந்­தி­ரி­யான ரணில், மைத்­தி­ரியை நிரந்­த­ர­மாக நம்­ப­மு­டி­யாது என்­பதை ஆட்­சியின் ஆரம்­பத்­தி­லேயே புரிந்­து­கொண்டார். அதனால் எண்­ணிக்­கையின் அடிப்­ப­டையில் அன்று அவ­சி­ய­மில்­லாத போதும் த.தே.கூ. ஐயும் ஒரு பங்­காளிக் கட்­சி­யா­கவே நடாத்­தினார்.

ஆட்சி தொடங்கி ஒரு வருடம் செல்­வ­தற்­குள்­ளேயே மைத்­திரி, ஐ.தே. கட்­சியை விமர்­சிக்க ஆரம்­பித்தார். இந்­நி­லையில் மைத்­திரி தொடர்­பான தனது சந்­தே­கத்தை ஊர்­ஜி­தப்­ப­டுத்திக் கொண்ட ரணில் த.தே. கூட்­ட­மைப்பை கெட்­டி­யாகப் பிடித்­துக்­கொண்டார்.

மறு­புறம், மீண்டும் ஜனா­தி­ப­தி­யாகும் கனவில் மிதக்க ஆரம்­பித்த மைத்­திரி த.தே கூட்­ட­மைப்பை அனு­ச­ரித்துப் போகத் தொடங்­கினார். இதன் விளை­வாக பல தசாப்­தங்­க­ளாக இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­திய காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்­டன. இவ்­வாறு த.தே.கூ. இரு­பு­றமும் சாதனை அர­சி­யலில் கோலோச்ச ஆரம்­பித்­தது.

நாம் நேரடி ஆத­ரவு கொடுத்தும் இது­வரை சாதித்­த­தெ­து­வு­மில்லை. இழந்­த­வற்றின் பட்­டி­யல்தான் நீண்­டு­கொண்டு செல்­கின்­றது.

இந்தப் பின்­ன­ணி­யில்தான் சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி கோரிக்கை விவ­கா­ரமும் பார்க்­கப்­பட வேண்டும். கல்­முனைப் பட்­டின சபை­யுடன் அன்று இணைக்­கப்­பட்ட மூன்று கிராம சபை­களில் ஒன்றைப் பிரிப்­பதால் ஏற்­படும் சமூக சம­நிலை மாற்றம் கார­ண­மாக அவ்­வாறு இணைக்­கப்­பட்ட மூன்று சபை­க­ளையும் கல்­மு­னையில் இருந்து ஏக காலத்தில் வேறாக்­கு­மாறு கல்­முனை மக்கள் கோரு­கின்­றனர். இதற்கு யாரும் எதிர்ப்பு இல்லை.

அதா­வது சாய்ந்­த­ம­ரு­துக்கு தனிச்­சபை வழங்­கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. நான்­காகப் பிரிக்­கவும் யாரும் எதிர்ப்பு இல்லை. தமிழ்­த­ரப்பு கூட எதிர்ப்பு இல்லை.

அவ்­வா­றாயின் என்ன பிரச்­சினை?

பிரச்­சினை நான்­காகப் பிரிப்­பதில் அல்ல. மாறாக அவ்­வாறு பிரிக்கும் போது முன்னாள் கல்­முனைப் பட்­டின சபையின் எல்­லையில் தாள­வட்­டு­வானில் இருந்து கடற்­க­ரைப்­பள்ளி வீதி­வரை 2/3 பங்கு தூரத்தை முழு­சாக தமக்கு வழங்­க­வேண்டும், என்­கின்ற தமிழ்­த­ரப்பின் நியா­ய­மற்ற கோரிக்­கை­யாகும்.

1987ஆம் ஆண்டு திரு.பிரே­ம­தாச பிர­தே­ச­சபைத் திட்­டத்தைக் கொண்­டு­வந்து இவற்றை இணைக்­காமல் இருந்­தி­ருந்தால் இன்­று­வரை அதே எல்­லை­கள்தான் இருந்­தி­ருக்கும். சாய்ந்­த­ம­ருது மக்கள் எவ்­வாறு அன்­றி­ருந்த கிராம சபையை தமக்கு மீண்டும் கோரு­கின்­றார்­களோ அது எவ்­வாறு சக­ல­ருக்கும் நியா­ய­மாகத் தெரி­கின்­றதோ அதே போன்­றுதான் கல்­முனை மக்கள் அன்­றைய பட்­டின சபையைக் கோரு­கின்­றார்கள். ஆனால் கல்­முனை மக்­களின் 2/3 பகுதி கர­வாகு வடக்கு கிரா­ம­ச­பைக்கு புதி­தாக வர­வேண்­டு­மென்ற தமிழ்த்­த­ரப்பின் கோரிக்­கைதான் பிரச்­சி­னை­யாகும்.

முத­லா­வது தமிழ்த்­த­ரப்பின் இந்த நியா­யமற்ற கோரிக்கை தொடர்­பாக அவர்­க­ளுடன் பேசு­வதே தவறு. (துர­திஷ்­ட­வ­ச­மாக நம்­ம­வர்­கள்தான் அவர்­க­ளுடன் பேச­வேண்­டு­மென்று பிரே­ரித்­தி­ருக்­கின்­றார்கள், என்­பது மிகவும் அதிர்ச்­சி­யா­னது). அவர்கள் வழ­மைபோல் அவர்­க­ளது தடைக்­கற்­களை போடு­கின்­றார்கள். நாங்­களும் கையா­லா­கா­த­வர்­க­ளாக கூட்டம் போட்டுப் பேசு­கின்றோம். போதா­தென்று குழு அமைத்து இன்னும் பேசப் போகின்றோம்.

நாம் புதிதாய் ஏதா­வது கேட்­கின்­றோமா? இந்த ஆட்­சியில் பங்­கா­ளிகள் நாங்கள். கவிழ்ந்த ஆட்­சியை மீட்டுக் கொடுப்­பதில் பிர­தான பங்­க­ளித்­தவர் நாங்கள். இன்று ஆட்­சியைத் தக்­க­வைத்துக் கொண்­டி­ருப்­பவர் நாங்கள். எங்­களை வைத்து தேசிய அர­சாங்கம் அமைக்க முடி­யுமா? என்று சிந்­திக்­கின்ற அளவு அரசில் பலம்­பொ­ருந்­தி­ய­வர்கள் நாங்கள். ஆனால் எங்­களால் எதையும் சாதிக்­க­மு­டி­யாது.

தயா­க­மகே எதிர்த்தால் பறி­போன ஒரு அலு­வ­ல­கத்தைக் கூட கொண்­டு­வர முடி­யாது. இரா­ணுவம் பிடித்த காணி­களே அடுத்த பக்கம் விடு­விக்­கப்­படும் போது தேசத்­திற்கு மகுடம் கண்­காட்­சிக்­கான வாகனத் தரிப்­பி­டத்­திற்­காக கொடுத்த ‘கரங்கா’ காணி­க­ளையே மீட்­க­மு­டி­யா­த­வர்கள் நாங்கள்.

இந்த இலட்­ச­ணத்தில் அன்­றி­ருந்த சபையைக் கேட்­கின்றோம்.

தமிழ்­த­ரப்­பினர் எதிர்க்­கின்­றார்கள். எனவே, எங்­களால் எதுவும் செய்­ய­மு­டி­யாது. 100% முஸ்­லிம்கள் வாழும் வீதிக்கு தமிழர் எதிர்க்­கின்­றார்கள் என்­ப­தற்­காக தாம் விரும்பும் பெய­ரையே வைக்க முடி­யா­த­வர்கள் நாங்கள்.

முஸ்லிம் முத­ல­மைச்­ச­ருக்­காக கோசம் எழுப்­பினோம். முஸ்லிம் முத­ல­மைச்­சரும் வந்தார்.

ஒரு வீதியின் பெயர் மாற்­றத்­திற்கு ஒரு கையொப்பம் வைக்க கைப்­பலம் இல்­லாத முஸ்லிம் முத­ல­மைச்சுப் பதவி.

முஸ்லிம் ஆளுநர் வந்­ததும் சந்­தோ­ஷத்தால் ஆர்ப்­ப­ரித்தோம். அவ­ரு­டைய பேனையும் இவ்­வீதிப் பெயர் மாற்­றத்­திற்­காக கையொப்பம் வைக்கத் தயங்­கு­கி­றது. ஏற்­க­னவே ஆளு­ந­ருக்­கெ­தி­ராக பல ஹர்த்­தால்­களைச் செய்து ஆளு­ந­ருக்கு செய்­தியைச் சொல்லி விட்­டார்கள். “கவனம் , நாம் விரும்­பாத எதையும் நீங்கள் செய்­ய­மு­டி­யாது” என்று.

சண்­முகா வித்­தி­யா­லய ஆசி­ரியை விவ­காரம், மனித உரிமை ஆணைக்­குழு , அடிப்­படை உரிமை மீறல் எனத் தெரி­வித்­ததன் பின்னும் அந்த ஆசி­ரி­யை­களின் அடிப்­படை உரி­மையைக் கூட உறு­திப்­ப­டுத்த முடி­யாத அர­சியல் பல­வீனர் நாங்கள்.

அவ்­வா­றாயின் தமிழர் எதிர்க்­கின்ற எதையும் நாம் சாதிக்க முடி­யாதா? எதிர்க்­கட்­சியில் இருந்து கொண்டு மறை­முக ஆத­ரவை வழங்கிக் கொண்டு அவர்­க­ளுக்குத் தேவை­யா­ன­வற்றை சாதித்துக் கொண்டு தாம் விரும்­பா­த­வற்றை முஸ்­லிம்கள் சாதிப்­பதைக் கூட தடுக்­கு­ம­ளவு பலம் அவர்­க­ளுக்­கி­ருக்கும் போது நேரடி ஆத­ரவு வழங்கும் நாம் கல்­முனைப் பட்­டின சபையைக் கூட மீண்டும் பெற்­றுக்­கொள்ள வக்­கற்ற நிலையில் இருக்­கின்­றோமே! எந்த முகத்­துடன் வந்து அடுத்த தேர்தல் மேடையில் வீர­வ­சனம் பேசப் போகின்றோம்.

புதிய அர­சியல் யாப்பை நிறை­வேற்­று­வது தொடர்­பாக இரண்­டொரு நாட்­க­ளுக்கு முன்பு த.தே.கூட்­ட­மைப்பு ஜனா­தி­ப­தியைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது. அச்­சந்­திப்­புக்கு பிர­த­ம­ரையும் நமது இரு பெருந்­த­கை­க­ளையும் அவர்கள் அழைத்துச் சென்­றி­ருக்­கின்­றார்கள்.

அங்கு த.தே.கூட்­ட­மைப்பினர் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். புதிய யாப்பில் மூன்று விட­யங்கள் இருக்­கின்­றன. அவை­யா­வன அதி­கா­ரப்­ப­கிர்வு, தேர்தல் முறை மாற்றம், ஜனா­தி­ப­திப்­ப­தவி ஒழிப்பு என்­ப­ன­வாகும். இதில் தேர்தல் முறை மாற்றம், ஜனா­தி­பதி பதவி ஒழிப்புத் தொடர்­பாக ஆளுநர் தரப்­பிற்குள் சில எதிர்ப்­புகள் இருக்­கின்­றன. ஆனால் அதி­காரப் பகிர்­விற்கு யாரும் எதிர்ப்பு இல்லை. எனவே, அதனை முதலில் நிறை­வேற்­றுவோம், என்று பிரே­ரித்­தி­ருக்­கின்­றார்கள்.

இது தொடர்­பாக நால்வர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அதில் ஒருவர் சுமந்­திரன், மூவர் சிங்­க­ளவர். ஒரு முஸ்­லிம்­கூட இல்லை. அவ­சி­ய­மில்­லையே! புதிய நகல் யாப்­பிற்கு யாரும் எதிர்ப்­பில்லை, என்று அவர்கள் சொன்ன போது அதற்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்­கத்­தானே நமது பெருந்­த­கைகள் சென்­றி­ருக்­கின்­றார்கள். நகல்­யாப்பு அதி­கா­ரப்­ப­கிர்வில் நமக்கு பிரச்­சி­னையே இல்­லையா?

அது ஒரு புற­மி­ருக்­கட்டும். அதி­கா­ரப்­ப­கிர்வை நிறை­வேற்ற ஜனா­தி­ப­தியின் சம்­ம­தத்­தைப்­பெற பிர­த­ம­ரையும் உங்­க­ளையும் அவர்­களால் அழைத்துச் செல்ல முடிந்­தி­ருக்­கி­றது. இந்த முச­லியில் பறி­போன ஒரு இலட்சம் ஏக்கர் காணியை மீட்க பிர­த­மரை ஜனா­தி­ப­தி­யிடம் அழைத்­துச்­செல்ல உங்­களால் முடிந்­ததா? ஆகக்­கு­றைந்­தது அமைச்­ச­ர­வை­யி­லா­வது பேச­மு­டிந்­ததா?

இவ்­வாறு தேர்தல் மேடை­களில் வீர­வ­சனம். சாதித்­த­தெ­து­வு­மில்லை என்­கின்ற வர­லாறு தொட­ர­மு­டி­யுமா? தொடர அனு­ம­திக்க முடி­யுமா?

இனியும் கூட்­டங்கள் வைத்து கோமா­ளித்­தனம் செய்­வதை நிறுத்­துங்கள். ஐந்து வரு­டங்கள் ஏமாற்­றி­விட்டு இப்­பொ­ழுதான் பேச ஆரம்­பித்­தி­ருக்­கின்­றீர்­களா? பம்மாத்­துக்கள் இனியும் வேண்டாம்.

த.தே.கூட்­ட­மைப்பு எதிர்த்தால் இந்த அரசில் முஸ்­லிம்­க­ளுக்கு எது­வித நியா­யமும் கிடைக்­காதா? என்று அர­சிடம் கேளுங்கள். உட­ன­டி­யாக கல்­முனை மாந­கர சபையை 1987 இருந்­ததைப் போன்று நான்­காகப் பிர­க­ட­னப்­ப­டுத்தச் சொல்­லுங்கள்.

சண்­முகா பாட­சா­லையில் அவ்­வா­சி­ரி­யைகள் மீண்டும் கடை­மை­யாற்­று­வ­தற்­கான உத்­த­ரவை உட­ன­டி­யாக விடு­க்கச் சொல்­லுங்கள். கரங்கா காணியை இனியும் தாம­தியாமல் விடு­விக்கச் சொல்­லுங்கள். பறி­போன அலு­வ­ல­கங்­களை அவ­ச­ர­மாக திருப்பித் தரச்­சொல்­லுங்கள். ஏனைய பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்கச் சொல்­லுங்கள்.

இவை எதையும் சாதிக்க உங்­க­ளுக்குத் திறன் இல்­லை­யாயின் தய­வு­செய்து இனியும் தாம­தி­யாமல் அரசை விட்டு வெளி­யே­றுங்கள். மக்கள் அச­மந்­த­மா­ன­வர்கள். இவற்­றை­யெல்லாம் கண்­டு­கொள்ள மாட்­டார்கள் என்று தொடர்ந்தும் தப்­புக்­க­ணக்குப் போடா­தீர்கள்.

வீறு­கொண்­டெழும் சமூ­கத்தின் முன் வீண­ரா­கி­வி­டா­தீர்கள். எழுச்சி காணப்­போகும் சமு­தா­யத்தை என்­றென்றும் ஏமாற்ற முடி­யு­மென கனவு காணா­தீர்கள். சாது­வான சமூகம் மிரண்டால் காடு தாங்­காது, என்­பதைப் புரிந்­து­கொள்­ளுங்கள். சமூ­கத்தின் விலா­சத்தை உறு­திப்­ப­டுத்­துங்கள். தவறின் நீங்கள் விலா­ச­மற்றுப் போய்­வி­டு­வீர்கள்.

த.தே.கூட்­ட­மைப்­புக்கு கூறு­கின்றோம்

நீங்கள் ஒரு புறம் பேரி­ன­வா­தத்­திற்­கெ­தி­ராக போரா­டிக்­கொண்டு மறு­புறம் இன்­னு­மொரு சமூ­கத்தை தொடர்ந்தும் நசுக்க முற்­ப­டா­தீர்கள். அன்று ஆயுத இயக்­கங்கள் பேரி­ன­வா­தத்­திற்­கெ­தி­ராக தூக்­கிய துப்­பாக்­கியை அப்­பாவி முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக நீட்­டி­னார்கள். அப்­போது தற்­காப்­பிற்­காக 500 முஸ்லிம் பொலி­ஸாரைக் கூட நிய­மிப்­பதை எதிர்த்­தீர்கள்.

அன்­றி­லி­ருந்து இன்­று­வரை முஸ்­லிம்கள் தேவைப்­படும் போது தமிழ் பேசும் சமூ­க­மாக குறிப்­பி­டு­வதும் சாத்­தி­ய­மான போதெல்லாம் அவர்­களை நசுக்­கு­வ­து­மான உங்கள் சிற்­றி­ன­வா­தத்­திற்கு முற்­றுப்­புள்ளி வையுங்கள். தேசிய அர­சி­யலில் தமிழர் எப்பக்கமோ அதற்கெதிரான பக்கத்திற்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும், என்கின்ற கட்டாய சூழ்நிலையை முஸ்லிம்கள் விதியாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தாதீர்கள்.

இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் உங்களது முஸ்லிம் விரோத நிலைப்பாட்டிற்கு முன்னால் கையாலாகதவர்களாக இருக்கலாம்.

அதற்காக காலம் மாறாது என நினைக்காதீர்கள். காலம் மாறி காத்திரமானவர்களை நீங்கள் சந்தித்தால் கடந்தகாலத் தவறுகளுக்காகவும் நீங்கள் கவலைப்பட நேரிடும்.

இன்னும் நாம் உங்களுக்கு “ஒலிவ்” கிளையையே நீட்டுகிறோம்.

இந்த இரு சமூகங்களும் சமாதானமாக வாழ வழிவிடுங்கள். 1987ஆம் ஆண்டு இருந்ததுபோன்று கல்முனையை இருக்க விடுங்கள்! எங்கள் பெண்களின் கௌரவமான ஆடையை சண்முகா பாடசாலையில் அணிய அனுமதியுங்கள்!!

நாங்கள் வாழும் வீதிக்கு நாங்கள் விரும்பும் பெயர் வைக்கும் போது அதில் தலையிடாதீர்கள் முஸ்லிம்கள் அடுத்த சமூகங்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்ததுமில்லை. செய்யவேண்டிய அவசியமுமில்லை. அதேநேரம் அடுத்தவர்களால் அநியாயம் செய்யப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்கவும்முடியாது, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.