20 ஆவது திருத்தம் சிறுபான்மைக்கு பாதிப்பு

0 699

மக்கள் விடு­தலை முன்­னணி, பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்த்­தி­ருத்­தத்­துக்கு தற்போது ஆத­ரவு திரட்டும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளது. நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை­மையை நீக்கி பாரா­ளு­மன்ற முறை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே 20 ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வரப் பட­வுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் இந்தப் பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு அக்­கட்சி பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் சந்­தித்து இது­தொ­டர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடாத்­த­வுள்­ளது. இன்று எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் ஜய­திஸ்ஸ தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு ஐக்­கிய தேசி­யக்­கட்சி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ் தேசிய முன்­னணி மற்றும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளான அமைச்­சர்கள் ரிசாத் பதி­யுதீன், ரவூப் ஹக்கீம் உட்­பட அமைச்சர் மனோ கணேசன் ஆகி­யோ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிப்­ப­தற்கு தனது முழு­மை­யான ஆத­ர­வினை வழங்­குவ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். பொது­ஜன பெர­மு­னவின் முக்­கிய தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இக்­க­ருத்­தினை வெளி­யிட்­டி­ருந்தார். அவரை மீண்டும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யா­த­வாறு 19 ஆவது திருத்தம் தடுக்­கி­றது. இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை இல்­லாமல் செய்­து­விட்டால் நிறை­வேற்று அதி­கா­ரத்­துடன் கூடிய பிர­தமர் பத­விக்கு வந்து ஆட்­சியில் அம­ரலாம் என்­பது அவ­ரது திட்­ட­மாக இருக்­கலாம்.

இதே­வேளை ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்கும் சரி­யான தருணம் இது­வல்ல. ஒரு சிலரின் தனிப்­பட்ட தேவை­க­ளுக்­கா­கவே இது முன்­னெ­டுக்­கப்­பட வுள்­ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப்­ஹக்கீம் தெரி­வித்­துள்ளார். தனது கட்சி இதற்கு ஆத­ர­வ­ளிக்­க­மாட்­டாது எனவும் தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை இல்­லாமல் செய்­வது சிறு­பான்மைச் சமூ­கத்­துக்கு பாதிப்­பாக அமையும் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழு­வுக்கு அக்­கட்சி வழங்­கிய இடைக்­கால அறிக்­கையில் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை இல்­லாமற் செய்­வதை ஆத­ரிக்க முடி­யாது எனத் தெரி­வித்­துள்­ளது.

இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­கத்தின் பாது­காப்­புக்கும், உரி­மை­க­ளுக்கும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை அவ­சி­ய­மாகும். ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையே எமக்கு பாது­காப்­பா­ன­தாக அமையும்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்­சவும் 20 ஆவது திருத்­தத்தை எதிர்த்­துள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இதற்கு ஆத­ரவு வழங்­கினால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்தும் கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருந்தும் வில­கிக்­கொள்­வ­தாகத் தெரி­வித்­துள்ளார். பொது­ஜன பெர­முன கட்­சியும் இதற்கு எதிர்­ப்புத் தெரி­வித்­துள்­ளது.

20 ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு வலுப்பெற்றுவரும் நிலையில் இத்திருத்தத்தை 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது சந்தேகமே.

நிறை­வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக அமையும். எனவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.