கண்டி வன்முறைகளை மறக்கலாமா?

0 797
  • எம்.எஸ்.குவால்தீன்

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வன்­மு­றைச்­சம்­பவம் மறைக்­கவோ, மறக்­கவோ முடி­யாத இனங்­க­ளுக்­கி­டையே நல்­லு­ற­விற்கு ஒரு களங்­கத்தை ஏற்­ப­டுத்­திய மாறாத வடு­வா­கவும் வர­லாற்றில் பதிந்த ஒரு துயரச் சம்­ப­வ­மா­கவும் இடம்பெற்று இன்­றுடன் (05/03/19) ஓராண்டு நிறை­வ­டை­கி­றது.

திகன வன்­முறைச் சம்­பவம் இலங்கை மக்கள் மத்­தியில் மட்­டு­மல்ல உலக நாடு­களே அறிந்து கொண்ட கவ­லைக்கும் கண்டனத்­திற்கும் உரிய ஒரு சம்­ப­வ­மாகும்.

இந்த வன்­முறைச் சம்­ப­வத்­தின்­போது இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் கண்டி மாவட்­டத்தில் 527 முஸ்லிம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­ட­துடன் 2635 பேர் நிர்­க்க­திக்­குள்­ளா­கினர். இருவர் காயங்­க­ளுக்­குள்­ளாகி 30 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­தன. 259 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேதத்­திற்­குள்­ளா­கின. ஒரு பள்­ளி­வாசல் முற்­றாக சேத­ம­டைந்­த­துடன் 16 பள்­ளி­வா­சல்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­தி­ருந்­தன. 37 வர்த்­தக நிலை­யங்கள் (கடைகள்) முற்­றாக சேத­ம­டைந்­தன. 180 கடைகள் பகு­தி­ய­ளவில் சேதத்­திற்­குள்­ளா­கி­யி­ருந்­தன. 41 வாக­னங்கள் முற்­றாக எரிந்து சேத­ம­டைந்­த­துடன் 41 வாக­னங்கள் பாதி­ய­ள­விலும் சேத­ம­டைந்­தி­ருந்­தன.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இந்த வன்­முறை இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் பெப்­ர­வரி மாதம் (2018) 22 ஆம் திகதி இரவு தெல்­தெ­னிய நகரில் அமைந்­துள்ள எரி­பொருள் நிலை­யத்­திற்கு முன்­பாக நான்கு முஸ்லிம் இளை­ஞர்கள் பயணித்த முச்­சக்­கர வண்டி ஒன்­றுடன் லொறி மோதிய சம்­பவம் தொடர்­பாக லொறி சாரதியுடன் வாக்­கு­வா­தப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாக்­கு­வாதம் முற்­றிய நிலையில் கைக­லப்பு ஏற்­பட்டு சாரதி காயத்­திற்­குள்­ளா­கி­யுள்ளார்.

இதனால் லொறியின் சாரதி தெல்­தெ­னிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு கண்டி போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்டார்.

இங்கு சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு வந்த நிலையில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி லொறியின் சாரதி கண்டி வைத்­தி­ய­சா­லையில் மர­ண­ம­டைந்தார்.

தெல்­தெ­னிய அம்­பாளை (Ambala) கிரா­மத்தைச் சேர்ந்த எச். குமா­ர­சிறி (வயது 48) என்­ப­வரே இவ்­வாறு மர­ண­ம­டைந்­த­வ­ராவார்.

இச்­சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்த தெல்­தெ­னிய பொலிசார் திகன – கெங்­கல்ல – அம்­ப­க­ஹ­வத்த பிர­தே­சங்­களைச் சேர்ந்த நான்கு (முச்­சக்­க­ர­வண்டி சார­திகள்) முஸ்லிம் இளை­ஞர்­களை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து தெல்­தெ­னிய நீதி­மன்­றத்தில் நீதிவான் எச்.எம். பரீக்டீன் முன்­னி­லையில் ஆஜர் செய்­த­போது நீதிவான் இவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டி­ருந்தார்.

இந்­நி­லையில் லொறி சார­தியின் மர­ணத்­திற்கு முஸ்லிம் இளை­ஞர்­களே காரணம் என தெரி­விக்­கப்­பட்டு திகன பிர­தேச முஸ்­லிம்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட போவ­தாக வதந்­திகள் பர­வி­ய­தாக தெரி­விக்­கப்­பட்டு முஸ்­லிம்கள் அச்சம் கொண்­டி­ருந்த நிலையில் 04 ஆம் திகதி இரவு மெத­ம­ஹா­நு­வர, அம்­பாளை சந்­தியில் அமைந்­தி­ருந்த முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான எரி­வாயு (கேஸ்) விற்­பனை செய்யும் பாரிய வர்த்­தக நிலையம் தாக்­கப்­பட்டு தீவைக்­கப்­பட்­டது.

இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து பொலிசார் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சந்­தே­கத்தின் பேரில் 24 பேரை கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் படுத்­தி­ய­தை­ய­டுத்து அவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

இதன் பின்னர் இறந்த லொறிச்­சா­ர­தியின் பிரேத அடக்கம் 05 ஆம் திகதி (மார்ச் 2018) நடை­பெற்­றது.

இச்­சா­ர­தியின் பிரேத பெட்­டியை சுமந்து கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு கண்­டனம் தெரி­வித்து அம்­பா­ளை­யி­லி­ருந்து கெங்­கல்ல வரை சுமார் 22 கிலோ­மீட்டர் தூரம் பெரு­ம­ளவு மக்கள் வரப்­போ­வ­தாக வதந்­திகள் பர­வின.

இதனால் தெல்­தெ­னிய பொலிசார் இவ்­ஊர்­வ­லத்தை தடுக்கும் நோக்கில் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்­றனர். நீதிவான் இப்­பி­ரே­தத்தை இறந்த லொறிச் சார­தியின் வசிப்­பி­ட­மான அம்­பாளை மயா­னத்­தி­லேயே அடக்கம் செய்­யப்­பட வேண்டும், அதனை எடுத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் நோக்கில் ஊர்­வ­ல­மாக எடுத்துச் செல்­லக்­கூ­டாது என உத்­த­ர­வினை பிறப்­பித்­தி­ருந்தார்.

என்­றாலும் இக்­கட்­ட­ளையை மீறி ஊர்­வலம் ஒன்று இடம்­பெறப் போவ­தாக 05 ஆம் திகதி காலையில் திகன பிர­தே­சங்­களில் காட்­டுத்தீ போல் வதந்­திகள் பர­வின.

இத­னை­ய­டுத்து முஸ்­லிம்கள் அச்சம் கொண்டு பர­ப­ரப்­ப­டைந்­த­துடன் பதற்­றத்­துடன் பலர் வயோ­தி­பர்­க­ளையும் சிறு­வர்­க­ளையும் நோயா­ளர்­க­ளையும் அழைத்துக் கொண்டு வீடு­க­ளையும் வர்த்­தக நிலை­யங்­க­ளையும் உடை­மை­க­ளையும் கைவிட்டு உயிர்­களைப் பாது­காத்துக் கொள்ளும் நோக்கில் பிற பகு­தி­களில் அமைந்­துள்ள தங்கள் உற­வு­களின் வீடு­க­ளையும் உத­வி­க­ளையும் நாடி விரைந்­தனர்.

ஆனாலும் அன்­றைய (05/03/2018) தினம் காலைப்­பொ­ழுது கடந்து சற்று நேரத்தில் திக­னை­யி­லி­ருந்து இளைஞர் கோஷ்­டிகள் திரண்டு முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள், வாக­னங்கள் போன்ற உடை­மை­களைத் தாக்­கியும் தீ வைத்து எரித்தும் சேதப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையை மேற்­கொண்­டனர்.

இதனால் திகன – பள்­ளக்கால் – கெங்­கல்ல – பல­கொல்ல எங்கு பார்த்­தாலும் முஸ்­லிம்­களின் வீடுகள் உடைக்­கப்­பட்டு தீ வைக்­கப்­பட்டு அவைகள் எரி­ம­லைகள் போன்று தீ சுவா­லை­க­ளுடன் எரி­வதைக் காண­மு­டிந்­தது.

இதன்­போதே பள்­ளக்கால் (திகன) மஸ்­ஜிதுல் லாபீர் பள்­ளி­வா­ச­லினுள் பாத­ணி­க­ளுடன் புகுந்த வன்­மு­றை­யா­ளர்கள் புனித குர்­ஆன்­க­ளையும் உடை­மை­க­ளையும் நடு­வீ­திக்கு வீசி பள்­ளி­வா­ச­லையும் உடை­மை­க­ளையும் சேதப்­ப­டுத்தி எரித்­தனர்.

இதன்­போது அங்கு அவ்­வீ­தியில் அமர்ந்­தி­ருந்த பல வீடு­க­ளுக்கு தீ வைத்­த­போதே எரியும் வீட்டில் சிக்­கிய சம்சுதீன் அப்துல் பாசித் (24 வயது) என்ற இளைஞன் எரியும் வீட்­டி­லி­ருந்து தப்­பிக்க முடி­யாத நிலையில் முச்சுத் திணறி உயி­ரி­ழந்த துயர சம்­பவம் நிகழ்ந்­தது.

இந்த வன்­முறைச் சம்­பவம் உட­ன­டி­யாக தடுக்­கப்­ப­டாத நிலையில் ஹரிஸ்­பத்­துவ– பூஜா­பிட்­டிய- மெத­தும்­பர– குண்­ட­சாலை– பாத்­த­தும்­பர குண்­ட­சாலை– கங்­க­வட்ட கோறளை- அக்­கு­றணை– யட்டி நுவர – கண்டி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் பர­வி­யது.

இதனால் 17 பள்­ளி­வா­சல்­கள், 289 வீடு­களும், 217 வர்த்­தக நிலை­யங்­களும், 13 கார்­கள், 24 முச்­சக்­கர வண்­டி­கள், 28 மோட்டார் சைக்­கிள்­கள், 5 லொறி­கள், 7 வேன்­கள், 2 பஸ் வண்­டி­கள், 3 மிதி வண்­டி­கள் என்பன எரித்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

இது­தொ­டர்­பான அறிக்­கை­களை திகன வன்­மு­றையால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரண இணைப்புச் சபையின் அலு­வ­லகம் தயா­ரித்­துள்­ள­தாக இதன் அலு­வ­லக செய­லாளர் மௌலவி அப்துல் கப்பார் தெரி­வித்தார்.

இது இவ்­வா­றி­ருக்க இவ்­வன்­முறை இடம்­பெற்று வந்த தினங்­க­ளில் 7 ஆம் திகதி (07.03.18) கண்டி ஹீரஸ்­ஸ­க­லயைச் சேர்ந்த மௌலவி சத­க­துல்லா (முன்னாள் சமய ஆசி­ரியர்– அகில இலங்கை சமா­தான நீதவான்– முஸ்லிம் விவாக பதி­வாளர்– காதி­நீ­திவான்) இவர் அக்­கு­றணை பிர­தே­சத்­துக்குச் சென்­று­விட்டு திரும்பிக் கொண்­டி­ருந்த போது பஸ் வண்­டியில் அம்­ப­தென்ன என்ற இடத்தில் வைத்து சிலரால் தாக்­கப்­பட்­டுள்ளார். இதனால் தலையில் பலத்த காய­ம­டைந்து இரத்தம் வடிந்து கொண்­டி­ருந்த நிலையில் கண்­டியில் இறங்கி கண்டி லயின் பள்ளி (பெரிய பள்­ளி­வாசல்) வாசல் அருகில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த தன் மோட்டார் சைக்­கிளில் ஏறி ஹீரஸ்­ஸ­க­லயில் உள்ள தம் வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.

இவரை இந்­நி­லையில் கண்ட குடும்­பத்­தினர் உட­ன­டி­யாக கண்டி போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்.

இவ­ரது தலையில் விசேட சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் பூரண குண­ம­டை­யாத நிலையில் வீட்­டிற்கு மாற்­றப்­பட்டார். பேச முடி­யா­மலும் கோமா நிலை­யிலும் இருந்த இவரை குணப்­ப­டுத்த குடும்­பத்­தினர் வீட்­டிற்கு விசேட வைத்­தி­யர்­களை அழைத்து பெரும் பணச்­செ­லவில் மருந்து வகை­களைப் பெற்­றுக்­கொ­டுத்தும் சிகிச்சைப் பணி­களை மேற்­கொண்டு வந்­தனர். எனினும் இவை பய­ன­ளிக்­காத நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.12.2018) உயி­ரி­ழந்தார். 27 ஆம் திகதி காலை இவ­ரது ஜனாஸா கண்டி கட்­டுக்­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இதே­வேளை இந்த வன்­முறைச் சம்­ப­வங்­களால் பாதிக்­கப்­பட்ட இடங்­களை, வீடுகள் உடை­மைகள் என்­ப­வற்றை பிர­தமர், அமைச்­சர்கள் என பல­த­ரப்­பட்­ட­வர்­களும் சென்று பார்­வை­யிட்­டனர்.

இம்­மக்­க­ளுக்கு நிவா­ரண வச­தி­களை செய்து கொடுப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. அரசு சிறு சிறு உத­வி­களை வழங்­கி­ய­போதும் உரிய நஷ்­ட­ஈ­டுகள் உரிய வகையில் பெற்றுக் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்றும் பாதிக்­கப்­பட்ட மக்­களில் பலர் தெரி­வித்­தனர்.

என்­றாலும் கண்டி ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் பரோ­ப­கா­ரி­களின் உத­வி­களால் பெரும்­பா­லானோர் வீடு­களை, கடை­களை புனர்­நிர்­மாணம் செய்­து­கொண்­டுள்­ளனர்.

கடும் சேதத்­திற்­குள்­ளான பள்­ளக்கால் (திகன) மஸ்­ஜிதுல் லாபீர் பள்­ளி­வா­சலை புன­ர­மைப்புச் செய்ய பள்­ளி­வா­சலின் நிர்வாகம் பல முயற்­சி­களை மேற்­கொண்டு வந்­த­ நிலையில் அதற்கு பல்­வேறு இடை­யூ­று­களும் தடை­களும் ஏற்­பட்­டு­வந்த போதும் கடந்த 9 மாதங்­களின் பின்னர் கடும் பிர­யத்தனத்தின் மூலம் அதனை புன­ர­மைப்புச் செய்ய அனு­மதி கிட்­டி­யுள்­ள­தாக

இச்சம்பவங்களில் லொறி சாரதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதியும் வன்முறைக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் மகாசோன் பலகாய தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க, கும்புரேகம சோபித்த தேரர், உட்பட 3 நபர்களுக்கு எதிராக உள்ள வழக்கு ஜுலை மாதம் 08 ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்ளது. இது போன்ற இனங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எந்த ஒரு இனத்துக்கும் ஏற்படக்கூடாது. முஸ்லிம் மக்கள் இன்று விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.