அம்பாறை பள்ளியை பாதுகாக்கவே புதிய நிர்வாகம்

வக்பு சபை திட்டவட்டம்

0 508

அம்­பா­றையில் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இடம் பெற்ற வன்­செயல்களினால் தாக்கி சேத­மாக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்ளி வாசலை எதிர்காலத்தில் பாது­காப்­ப­தற்­கா­கவே 2018 ஆம் ஆண்டு புதிய நிர்­வாக சபை­யொன்று வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டது. புதிய நிர்­வாக சபையில் அம்­பாறை நகரில் வாழும் முஸ்­லிம்­களும் அரச நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும் முஸ்­லிம்­களும் உள்­வாங்கப் பட்­டனர். முன்­னைய நிர்­வாக சபையில் இவ்­வா­றா­ன­வர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்க வில்லை. என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்தார்.

அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்டு சில மாதங்­க­ளுக்குள் புதிய நிர்­வாக சபை நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் பழைய நிர்­வாக சபை விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டுள்­ளமை பற்றி வின­வி­ய­போதே வக்பு சபையின் தலைவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் பழைய நிர்­வாக சபைக்கு எதிரான முறைப்­பா­டு­களும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. பள்ளி வாச­லுக்கு அருகில் வாழும் முஸ்­லிம்­களை நிர்­வா­கத்தில் உள்­வாங்­கினால் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­கு­த­லி­லி­ருந்து பள்­ளி­வா­ச­லைப்­பா­து­காக்­கலாம் எனக்­க­ரு­தியே புதிய நிர்­வாக சபை நிய­மிக்­கப்­பட்­டது.

புதிய நிர்­வாக சபைக்கு எதி­ராக பழைய நிர்­வாக சபை வக்பு ட்ரிபி­யு­னலில் மேன்­மு­றை­யீடு செய்­த­த­னாலே வக்பு ட்ரிபி­யுனல் பள்­ளி­வா­ச­லுக்கு ஐவர் கொண்ட கமிட்­டியை நியமித்தது.

வக்பு சபை தனிநபர்களின் நலன்களைக் கருதுவதில்லை. பள்ளிவாசலின் எதிர்காலம் கருதியே தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றார்..

Leave A Reply

Your email address will not be published.