சிரி­யாவில் இர­சா­யனத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது உறுதி

0 445

2018 ஆம் ஆண்டு சிரி­யாவின் கிழக்கு கௌட்­டாவில் அமைந்­துள்ள டௌமா மாவட்­டத்தில் குளோரின் இர­சா­ய­னத்தை ஆய­ுத­மாகப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் மேற்­கொண்­ட­மைக்­கான ஆதா­ரங்­களைக் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­தது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நச்சு இர­சா­ய­னங்­களை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழு தனது விசா­ர­ணை­களின் இறுதி அறிக்­கை­யினைச் சமர்ப்­பித்­துள்­ளது.

குற்­றச்­சாட்டு தொடர்பில் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழுவின் செயற்­பா­டுகள் சம்­பவ இடங்­க­ளுக்கு விஜயம் செய்து சுற்­றாடல் மாதி­ரி­களைச் சேக­ரித்தல், சாட்­சி­க­ளிடம் நேர்­கா­ணல்­களை மேற்­கொள்­ளுதல் மற்றும் தர­வு­களைச் சேக­ரித்தல் போன்­ற­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இருந்­த­தென இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பு தனது அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.

சம்­ப­வத்தை நேரில் கண்ட சாட்­சி­களின் வாக்­கு­மூ­லங்கள், சுற்­றாடல் மற்றும் உயி­ரியல் மருத்­துவ மாதி­ரி­களின் பகுப்­பாய்வு பெறு­பே­றுகள் மற்றும்  நச்சுத் தன்­மை­யியல் மற்றும் காற்றுப் பரவல் பகுப்­பாய்­வுகள் மற்றும் சாட்­சி­க­ளி­ட­மி­ருந்து பெறப்­பட்ட மேல­திக டிஜிட்டல் தக­வல்கள் உள்­ளிட்ட பல உள்­ளீ­டு­களும் பகுப்­பாய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டௌமா இர­சா­ய­னத்தை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் மேற்­கொண்­டமை சம்­பந்­த­மான குற்­றச்­சாட்டு தொடர்பில் சேக­ரிக்­கப்­பட்ட மேற்­கு­றித்த அனைத்துத் தக­வல்­க­ளையும் மதிப்­பீடு செய்து பகுப்­பாய்வு செய்­ததில் 2018 ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி நச்சு இர­சா­யனம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­மைக்­கான நியா­ய­பூர்­வ­மான ஆதா­ரங்­களை உண்­மை­களைக் கண்­ட­றியும் குழு சமர்ப்­பித்­துள்­ள­தாக அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்­கூ­று­க­ளைக்­கொண்ட குளோ­ரி­னை­யொத்த மீள்­தாக்க குளோரின் கொண்ட நச்சு இரசா­யனம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மை­யினை குறித்த அறிக்கை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வ­றிக்கை இர­சா­யன ஆயு­தங்கள் தொடர்­பான பிர­க­ட­னத்தின் தரப்பு நாடு­க­ளுக்கு பகி­ரப்­பட்­டுள்­ள­தோடு, அவ்­வ­றிக்கை தொடர்பில் ஹேக்கில் அமைந்­துள்ள இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பின் தலை­மை­யகத்தில் குறிப்­புக்­களைப் பெற்றுக் கொள்­ள­வுள்­ளது. இவ்­வ­றிக்கை ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டெஸ்ஸின் ஊடாக ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபைக்கும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

டௌமாவில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதம் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழு தனது இடைக்­கால அறிக்­கை­யினைச் சமர்ப்­பித்­தி­ருந்­தது.
-Vidivelli.lk

Leave A Reply

Your email address will not be published.