கிரா­மப்­புற பெண்­களின் கல்­விக்கு ஆத­ரவு கோரி பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி மொரோக்கோ விஜயம்

0 532

கிரா­மப்­புற பெண்­களின் கல்வி வளர்ச்­சிக்கு ஆத­ரவு திரட்­டு­வ­தற்­காக பிரித்­தா­னிய இள­வ­ரசர் ஹரி மற்றும் அவ­ரது மனைவி மேகன் மேர்கில் மொரோக்­கோ­விற்குச் சென்­றுள்­ளனர்.

12 முதல் 18 வய­திற்­குட்­பட்ட பெண்கள் மத்­தியில் பாட­சாலைக் கல்­வியின் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் வகையில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்றின் அழைப்­பை­யேற்றே இள­வ­ரசர் ஹரி தம்­ப­திகள் மொரோக்­கோ­விற்கு விஜயம் செய்­துள்­ளனர்.

இந்த விஜ­யத்தின் போது பாட­சா­லையில் இடை­வி­ல­கலைக் குறைக்கும் வகை­யி­லான செயற்­றிட்­டங்கள் மற்றும் பால்­நி­லைக்­கல்வி தொடர்­பான விட­யங்கள், குறித்த மாண­வர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

இள­வ­ரசர் ஹரி தம்­ப­திக்கு அட்லஸ் மலைத்­தொ­டரில் வசிக்கும் குறித்த கிரா­மங்­களைச் சேர்ந்­த­வர்கள் பிரிட்­டனின் கொடி­களை அசைத்து அவர்களுக்கு வரவேற்பளித்தனர்.

இளவரசர் ஹரி மொரோக்கோவின் தலைநகர் ரொபாட்டில் இடம்பெறும் குதிரைச்சவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஹரி தம்பதிகள் சிறப்பு தேவைகளுடைய குழந்தைகளுடன் இணைந்து சமையல் நிகழ்ச்சி மற்றும் இளைய தொழில் முயற்சியாளர்களுடன் சந்திப்புக்களில் கலந்து கொண்டார்கள் மேலும் இவ்விஜயத்தின் போது ரொபாட்டின் அரண்மனையில் இடம்பெறவுள்ள வரவேற்பு நிகழ்வில் மொரோக்கோ அரச குடும்பத்தினரைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.