இம்ரான் கானின் கருத்துக்கு இந்தியா பதிலளிப்பு

0 587

எங்­க­ளது பாது­காப்புப் படைகள் மீது புல்­வா­மாவில்  மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை ஒரு பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாக ஏற்­றுக்­கொள்­வ­தற்கு பாகிஸ்தான் பிர­தமர் மறுப்­பது குறித்து நாங்கள் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை என இந்­திய அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

”இந்­தியா எங்­களைத் தாக்­கினால், நாங்­களும் பதி­லடி கொடுப்போம். காஷ்மீர், புல்­வாமா தாக்­குதல் குறித்து எந்­த­வி­த­மான உறு­தி­யான ஆதா­ரங்­களும் இன்றி இந்­திய அரசு எங்கள் மீது  குற்றம் சாட்­டு­கி­றது.  இது குறித்து இந்­திய அரசு தெளி­வான, உறு­தி­யான ஆதா­ரங்­களை வழங்­கினால் நாங்கள் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க தயா­ரா­க­வுள்ளோம்”  என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்தார். இதற்கு பதி­ல­ளிக்கும் வகையில் இந்­திய அர­சாங்கம் வெ ளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மற்றும் பாகிஸ்தான் என்­ப­வற்­றுக்­கி­டையில் ஏதேனும் தொடர்பை மறுப்­ப­தென்­பது பாகிஸ்தான் அடிக்­கடி கூறி வரு­கின்ற ஒரு சாட்­டாகும். ஜய்ஷ் இ-மு­ஹம்மட் இயக்கம் மற்றும் அவ்­வாறே இந்தக் கொடூ­ர­மான குற்­றத்தை நடத்­திய பயங்­க­ர­வாதி ஆகி­ய­வர்­களின் பொறுப்புக்  கோரல்­க­ளையும் பாகிஸ்தான் பிர­தம மந்­திரி நிரா­க­ரித்­துள்ளார். ஜய்ஷ்.இ-மு­ஹம்மட் மற்றும் அதன் தலைவர் மஸூட் அசார் பாகிஸ்­தா­னையே தள­மாகக்  கொண்டு இயங்­கு­கின்­றனர் என்­பது நன்­க­றி­யப்­பட்ட ஒரு உண்­மை­யாகும். பாகிஸ்தான் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இவை போது­மான ஆதா­ரங்­க­ளாகும்.

இந்­தியா ஆதா­ரங்­களை வழங்­கினால் இந்த விட­யத்தை விசா­ரணை செய்­வ­தாக பாகிஸ்தான் பிர­தமர் முன்­வந்­துள்ளார். இது ஒரு நொண்டிச் சாக்­காகும். 26/11 அன்று பயங்­க­ர­மான மும்பாய்த் தாக்­கு­தலின், ஆதாரம் பாகிஸ்­தா­னுக்கு வழங்­கப்­பட்­டது. இருந்தும், கடந்த 10 வரு­டங்­க­ளுக்கும் மேலாக அது தொடர்­பான வழக்கு எந்த வித­மான முன்­னேற்­றத்­தையும் காண்­பிக்­க­வில்லை. அதனைப் போன்றே, பத்­தன்கொட் விமானத் தளத்தின் மீதான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பா­கவும், அங்கு ஒரு முன்­னேற்றம் காண்­பிக்­கப்­ப­ட­வில்லை. பாகிஸ்­தானின் வர­லாற்றுப் பதி­வு­களைப் புரட்டும் போது “உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்ட நட­வ­டிக்கை” என்­ப­தற்­கான வாக்­கு­று­திகள் ஒரு வெற்று உறுதி மொழி­க­ளா­கவே உள்­ளன.

ஒரு புதிய சிந்­த­னையின் அடிப்­ப­டையில் பிர­தம மந்­திரி “நயா பாகிஸ்தான்” எனக் குறிப்­பிட்­டுள்ளார். இந்த “நயா பாக்­கிஸ்தான்” என்­பதன் கீழ் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் ஐக்­கிய நாடு­க­ளினால் தடை­செய்­யப்­பட்ட ஹபீஸ் ஸயீத் போன்ற பயங்­க­ர­வா­தி­க­ளுடன் மேடை­களைப் பகி­ரங்­க­மா­கவே பகிர்ந்து கொள்­கின்­றனர்.

பயங்­க­ர­வாதம் பற்றிப் பேசு­வ­தற்கு தனது தயார்­நி­லையை அறி­வித்­துள்ள பாகிஸ்தான் பிர­தம மந்­திரி பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­துள்ளார். பயங்­க­ர­வாதம் மற்றும் வன்­முறை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்­ட­தான ஒரு சூழலில் ஒரு விரி­வான இரு­த­ரப்புப் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்கு இந்­தியா தயார் என மீண்டும் மீண்டும் குறிப்­பிட்டு வந்­துள்­ளது.

பாகிஸ்தான் பயங்­க­ர­வா­தத்­திற்கு மிகவும் பாதிக்­கப்­பட்ட ஒரு நாடு எனத் தெரி­வித்து வரு­கி­றது. இது உண்மை நிலை­யி­லி­ருந்து மிகவும் வேறு­பட்­ட­தாகும். உண்­மையில் பாகிஸ்தான் பயங்­க­ர­வா­தத்தின் ஒரு மத்­திய புள்ளி என்­பதை சர்­வ­தேச சமூகம் நன்கு அறிந்­துள்­ளது.

பயங்­க­ர­வாதத் தாக்­கு­த­லிற்­கான இந்­தி­யாவின் பதி­லி­றுப்பு எதிர்­வரும் பொதுத் தேர்­த­லினால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தாக பாகிஸ்தான் பிர­தம மந்­திரி கோடிட்டுக் காட்­டி­யி­ருப்­பது வருந்­தத்­தக்க ஒன்­றாகும். இந்­தியா இந்தத் தவ­றான குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்­கின்­றது. இந்­தி­யாவின் ஜன­நா­யகம் உல­கத்­திற்­கான ஒரு மாதிரி என்­ப­துடன் இதனை பாகிஸ்தான் ஒரு போதும் விளங்கிக் கொள்­ள­மாட்­டாது. சர்­வ­தேச சமூ­கத்தை தவ­றாக இட்டுச் செல்வதை பாகிஸ்தான நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் மற்றும் புலவாமா பயங்கரவாதத் தாக்குதலில் குற்றமிழைத்தவர்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து கொண்டு செயற்படுகின்ற ஏனைய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்ததும் மற்றும் காணக்கூடியதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.