துப்பாக்கிகளை உள்நாட்டில் தயாரிக்க சவூதி அரேபியா விரைவில் நடவடிக்கை

0 464

ரஷ்­யாவில் தயா­ரிக்­கப்­படும் கலஷ்­னிகேவ் ஏகே – -103 ரகத் துப்­பாக்­கி­களைத் தயா­ரிப்­ப­தற்கு சவூதி அரே­பியா விரைவில் அங்­கீ­காரம் வழங்­கு­மென ரஷ்ய அர­சாங்­கத்­தினால் செயற்­ப­டுத்­தப்­படும்  பாது­காப்பு நிறு­வ­ன­மான ரொஸ்டெக் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.

இம்­மாத இறு­தி­யின்­போது ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென  ரொஸ்டெக் நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் சேர்ஜி செமன்­ஸோவை மேற்­கோள்­காட்டி ரஷ்­யாவின் ஸ்புட்னிக் செய்தி முக­வ­ரகம் தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் இடம்­பெற்­று­வரும் சர்­வ­தேச பாது­காப்பு கண்­காட்­சியின் போதே செமன்­ஸோவின் இக் கருத்து வெளி­யி­டப்­பட்­டது.

சவூதி அரே­பியா சுமார் 90 வீதம் – துப்­பாக்­கி­களைத் தயா­ரிக்க விரும்­பு­கின்­றது, ஆனால் நாம் அத­னை­விடக் குறைவான எண்ணிக்கையான துப்பாக்கிகளையே தயாரிக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.