இந்தியா தாக்கினால் பதிலடி வழங்குவோம்

ஆதா­ர­மின்றி குற்­றம்­சாட்ட வேண்டாம் என்­கிறார் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான்

0 641

இந்­தியா எங்­களைத் தாக்­கினால், நாங்­களும் பதி­லடி கொடுப்போம். காஷ்மீர், புல்­வாமா தாக்­குதல் குறித்து எந்­த­வி­த­மான உறு­தி­யான ஆதா­ரங்­களும் இன்றி இந்­திய அரசு எங்கள் மீது  குற்றம் சாட்­டு­கி­றது.  இது குறித்து இந்­திய அரசு தெளி­வான, உறு­தி­யான ஆதா­ரங்­களை வழங்­கினால் நாங்கள் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தயா­ரா­க­வுள்ளோம் என பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்­வாமா மாவட்­டத்தில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஜெய்ஷ் இ முக­மது தீவி­ர­வாத அமைப்பின் உறுப்­பி­னர்கள், இந்­திய சி.ஆர்.பி.எப். வீரர்கள் பய­ணித்த பஸ் வண்டி மீது தற்­கொ­லைப்­படைத் தாக்­குதல் நடத்­தினார். இந்தத் தாக்­கு­தலில், 40 இந்­திய வீரர்கள் கொல்­லப்­பட்­டனர். இந்தத் தாக்­கு­த­லுக்கு பாகிஸ்தான் ஆத­ரவு பெற்ற ஜெய்ஷ் இ முக­மது தீவி­ர­வாத அமைப்­புதான் காரணம் என்றும், பாகிஸ்­தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு பின்­ன­ணியில் இருப்­ப­தா­கவும் இந்­தியா குற்றம் சாட்டி வரு­கி­றது. இந்­நி­லையில் இந்­தி­யாவின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் நேற்­றைய தினம் ஊட­கங்­களில் தோன்றி உரை­யாற்­று­கை­யி­லேயே பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இதன்­­போது அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,  ”புல்­வா­மாவில் கடந்த 14 ஆம் திகதி இந்­திய சிஆர்­பிஎப் வீரர்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் பாகிஸ்தான் நல­னுக்­காக நடத்­தப்­பட்­டது அல்ல. தீவி­ர­வா­தத்தால் நாங்­களும் பாதிக்­கப்­பட்­டுள்ளோம். எல்­லையில் ஊடு­ருவல் மூலம் 70 ஆயிரம் பாகிஸ்தான் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஆதலால், தீவி­ர­வாதம் குறித்து நாங்கள் முழு­மை­யாக அறிந்­துள்ளோம். ஆனால், எந்­த­வி­த­மான உறு­தி­யான ஆதா­ரங்கள் இன்றி இந்­திய அரசு எங்கள் மீது புல்­வாமா தாக்­கு­த­லுக்கு குற்றம் சாட்­டு­கி­றது. புல்­வாமா தாக்­குதல் குறித்து இந்­திய அரசு தெளி­வான, உறு­தி­யான ஆதா­ரங்­களை அளித்தால், நாங்கள் உரிய நட­வ­டிக்கை எடுக்­கிறோம்.

இந்­தி­யா­விலும் பாகிஸ்­தா­னிலும் அமை­தியும், ஒற்­று­மையும் நிலவ வேண்டும். இந்­தியா தங்­களின் உள­வுத்­து­றையை முழு­மை­யாகப் பயன்­ப­டுத்தி, புல்­வாமா தாக்­குதல் குறித்த ஆவ­ணங்­களைத் திரட்­டினால், இந்­தி­யா­வுக்கு முழு­மை­யாக ஒத்­து­ழைத்து  விசா­ரணை நடத்தி, தாக்­கு­த­லுக்­கான கார­ணங்­களைக் கண்­டு­பி­டிக்க நாங்கள் உத­வு­கிறோம்.

தீவி­ர­வா­தத்தை நாங்கள் பூண்­டோடு அழிக்க முயல்­கிறோம். தீவ­ர­வா­தத்தால் நாங்­களும் இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளையும், கோடிக்­க­ணக்­கி­லான டொலர்­க­ளையும் இழந்­து­விட்டோம். கடந்த 15 ஆண்­டு­க­ளாக தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ராக நாங்கள் போராடி வரும் போது, எவ்­வாறு தீவி­ர­வா­தத்தால் நாங்கள் பய­ன­டைந்­தி­ருக்க முடியும்? காஷ்மீர் விவ­கா­ரத்தில் இரு நாடு­களும் அமைதிப் பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காண முடியும். ராணு­வத்தின் அடக்­கு­மு­றையால் ஒரு­போதும் நீண்­ட­கா­லத்­துக்கு தீர்வு காண முடி­யாது. வெற்­றி­க­ர­மான வழியும் அல்ல.இந்த விஷ­யத்தில் இந்­தியா சுய­ப­ரி­சோ­தனை செய்ய வேண்டும். ஆப்­கா­னிஸ்தான் விவ­காரம் போன்று காஷ்மீர் விவ­கா­ரமும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்க்க முடியும்.

புல்­வாமா தாக்­கு­த­லுக்குப் பழி­வாங்­குவோம் என்று இந்­திய அர­சியல் தலை­வர்கள் பேசு­வதை நான் ஊட­கங்கள் வாயி­லாக அறி­கிறேன். அவ்­வாறு பாகிஸ்தான் மண்ணில் இந்­தியா தாக்­குதல் நடத்­தினால், நாங்கள் அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுத்து தகுந்த பதி­லடி கொடுப்போம்.

போரைத் தொடங்­கு­வது எங்கள் கையில் இல்லை, தொடங்­கு­வது எளி­தா­னது. ஆனால், முடிப்­பது கடி­ன­மா­னது, அது எங்கள் கைகளில் இல்லை.  இந்த ஆண்டு இந்­தி­யாவில் தேர்தல் நடக்க உள்­ளது. எங்கள் மீது குற்­றம்­சாட்டி, எளி­தாக வாக்­கு­களைப் பெறலாம் என்று நினைக்­கி­றார்கள்.  இந்த பிராந்­தி­யத்தில் ஸ்திரத்­தன்மை நிலவ நாங்கள் விரும்­பு­கிறோம். ஆனால், காஷ்­மீரில் எந்தத் தாக்­குதல் நடந்­தாலும் அதற்கு பாகிஸ்­தானே பொறுப்பு என்று எங்கள் மீது இந்­தியா குற்றம் சாட்டி, எங்­களை மீண்டும் மீண்டும் கசை­ய­டிக்கு ஆளாக்­கு­கி­றது.பாகிஸ்தான் மண்ணை யாரா­வது தீவி­ர­வாதச் செயல்கள் செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­தினால், அவர்கள் எங்­க­ளுக்கு எதி­ரிதான். எங்கள் நல­னுக்கும் எதி­ரா­ன­துதான்” என இம்ரான் கான் மேலும் தெரி­வித்தார்.

அதி­க­ரிக்கும் பதற்ற நிலை

புல்­வாமா தாக்­கு­தலைத் தொடர்ந்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது.

பாகிஸ்தான் தனது மண்ணில் தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ரவு அளிப்­பதை நிறுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்­திய இந்­திய மத்­திய அரசு, பாகிஸ்­தா­னுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வகையில், அந்­நாட்­டுக்கு வழங்­கிய வர்த்­தக ரீதி­யான நட்பு நாடு அந்­தஸ்தைப் பறித்­தது. இறக்­கு­மதிப் பொருட்­க­ளுக்கு 200 சத­வீதம் வரி­வித்­தது.

மேலும், பிர­தமர் மோடி இந்­திய இரா­ணு­வத்­துக்கு முழு அதி­காரம் அளித்து, சுதந்­தி­ர­மாகச் செயல்­பட அனு­ம­தித்­துள்­ள­தாகத் தெரி­வித்தார். இதை­ய­டுத்து நேற்று முன்­தினம் புல்­வா­மாவில் நடந்த துப்­பாக்கிச் சண்­டையில் ஜெய்ஷ் இ முகம்­மது அமைப்பின் உறுப்­பி­னர்கள் கொல்­லப்­பட்­டனர். மேலும், மீண்டும் ஒரு சர்­ஜிகல் ஸ்டிரைக் நடத்த இரா­ணுவம் ஆயத்­த­மாகி வரு­வ­தற்­கான சூழல் நில­வு­கி­றது.  டெல்­லியில் உள்ள  பாகிஸ்தான் துணை தூதரை அழைத்து இந்­திய வெளி­யு­ற­வுத்­துறை கண்­டித்­தது. ஆனால், புல்­வாமா தாக்­கு­த­லுக்கும் தங்­க­ளுக்கும் எந்­த­வி­த­மான தொடர்பும் இல்லை. உறுதியான ஆதாரங்களை அளியுங்கள் என்று பாகிஸ்தான் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதற்கிடையில் இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பதற்றத்தை தணிப்பதற்கு உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வேண்டுகோளை முன்வைத்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரைஷி ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.