பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை

துருக்கி ஜனாதிபதி அர்துகான் தெரிவிப்பு

0 635

கடந்த சனிக்­கி­ழமை இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்­ற­மான நெஸ்­ஸெட்டின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களை துருக்­கிய ஜனா­தி­பதி அர்­துகான் இஸ்­தான்­பூலில் வர­வேற்றார்.

துருக்­கிய ஜனா­தி­ப­திக்கும் இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடை­யே­யான கலந்து­ரை­யாடல் தரப்யா ஜனா­தி­பதி வளா­கத்தில் (ஹூபர் வில்லா) மூடிய கத­வு­க­ளுக்குப் பின்னால் சுமார் 90 நிமி­டங்கள் வரை நடை­பெற்­றது என ஜனா­தி­ப­தியின் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இக் கலந்­து­ரை­யா­டலின் போது பலஸ்­தீன மற்றும் அதன் மக்கள் தொடர்­பான ஆத­ரவு நிலைப்­பாட்­டி­லி­ருந்து ஒரு­போதும் பின்­வாங்­கப்­போ­வ­தில்லை எனத் தெரி­வித்த அர்­துகான், ஆக்­கி­ர­மிப்பை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கும், சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­த­வ­தற்கும் முடி­யு­மான அனைத்­தையும் துருக்கி மேற்­கொள்ளும் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

காஸாவில் டெல் அவிவின் அடக்­கு­மு­றைகள் அதே­போன்று யூத தேசத்தின் சட்­டத்­திற்கு எதி­ரா­கவும், துருக்­கிக்கு எதி­ரான அடிப்­ப­டை­யற்ற கட்­டுக்­க­தை­க­ளுக்கு எதி­ரா­கவும் இஸ்­ரே­லிய சட்­ட­மன்­றத்தில் பலஸ்­தீ­னர்­களின் மன­வு­ணர்­வினைப் பிர­தி­ப­லிக்கும் சேவை­யினை வழங்கி வரு­கின்­ற­மைக்­காக நெஸ்ஸெட் உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்­றி­க­ளையும் தெரி­வித்தார்.

இஸ்­ரேலை யூத நாடாக வரை­யறை செய்யும் சர்ச்­சைக்­கு­ரிய சட்டம் பலஸ்­தீன குடி­மக்­களின் உரி­மை­களை மலி­னப்­ப­டுத்தும் செயற்­பா­டாகும் எனத் தெரி­வித்த அவர், அக்­கு­ழு­வினர் ஒற்­று­மை­யு­டனும், இணக்­கப்­பாட்­டு­டனும் பணி­யாற்ற வேண்டும் எனவும் கேட்­டுக்­கொண்டார்.

அர­ச­க­ரும மொழி­யாக இருந்த அரபு மொழியை நீக்­கி­விட்டு ஹீப்ரு மொழியை மாத்­திரம் அர­ச­க­ரும மொழி­யாக இஸ்ரேல் சட்­ட­மன்றம் அங்­கீ­க­ரித்­துள்ள அதே­வேளை, இணைந்த ஜெரூ­ச­லத்தை அதன் தலை­ந­க­ராகக் கொண்டு அரபு மொழிக்கு விசேட அந்­தஸ்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்தச் சட்டம் ஏலவே இஸ்­ரே­லிய யூதர்­க­ளாலும், அர­சாங்­கத்­தி­னாலும் பாகு­பாடு காட்­டப்­பட்டு வரும் அரே­பிய மக்கள் தாம் இரண்டாம் தரப் பிர­ஜை­க­ளாக கரு­தப்­ப­டு­வ­தாக அம் மக்கள் உணரும் நிலையில் மேலும் தனி­மைப்­ப­டுத்தும் ஆபத்தைக் கொண்­டுள்­ளது.

இஸ்­ரே­லியக் குடியுரிமையினைக் கொண்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலின் மொத்த சனத்தொகையில் 21 வீதமாகக் காணப்படுவதோடு, இஸ்ரேலிய அரபுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் இஸ்ரேலிய பாராளுமன்றமான நெஸ்ஸெட்டில் உறுப்பினர்களையும் கொண்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.