ஹஜ் கோட்டா அதிகரிப்பும் யாத்திரிகர்களின் தயக்கமும்

ஹஜ் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்

0 716
  • ஏ.ஆர்.ஏ. பரீல்

இவ்­வ­ருடம் இலங்­கைக்­கான ஹஜ் கோட்டா 500 ஆல் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்ற மகிழ்ச்­சி­யான செய்தி கிடைத்­துள்ள அதே­வேளை, சவூதி அரே­பி­யாவில் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான கட்­ட­ணங்கள் 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன என்ற செய்­தியும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

அத்­தோடு சவூதி அரே­பியா வற்(VAT) வரி­யையும் 5 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது என்ற தக­வல்கள் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரி­களை கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ள­துடன் அசௌ­க­ரி­யங்­க­ளுக்­குள்­ளாக்­கி­யுள்­ளன. கடந்த 14 ஆம் திகதி சவூதி அரே­பியா ஜித்­தாவில் சவூதி அரே­பிய ஹஜ், அமைச்­ச­ருக்கும், இலங்­கையின் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் இடையே இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போதே இத்­த­க­வல்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

ஹஜ் முஸ்­லிம்­களின் இறுதிக் கட­மை­யாகும். பொரு­ளா­தார வளமும், உடல் ஆரோக்­கி­ய­முமுள்ள ஒவ்­வொரு முஸ்லிம் ஆணுக்கும், பெண்­ணுக்கும் ஹஜ் கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டில் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம், அரச ஹஜ் குழு மற்றும் ஹஜ் முக­வர்கள் ஆகிய தரப்­புகள் ஒன்­றி­ணைந்தே ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றன. ஒவ்­வொரு வரு­டமும் சவூதி ஹஜ் அமைச்­சினால் இலங்­கைக்கு வழங்­கப்­படும் ஹஜ் கோட்டா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளி­டையே பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கின்­றன.

2015 ஆம் ஆண்டில் புதிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­டதும் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கென தனி­யான ஓர் அமைச்சு ஒதுக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராக எம்.எச்.ஏ. ஹலீம் நிய­மிக்­கப்­பட்டார். அவரால் ஹஜ் கோட்டா பகிர்வு முறையில் மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்­டன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன் கரு­தியே இம்­மாற்­றங்கள் கொண்டு வரப்­பட்­டன. ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தாம் விரும்பும் ஹஜ் முக­வர்­களைத் தெரிவு செய்து கொள்­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஹஜ் முக­வர்­களின் பெயர், விப­ரங்கள், அவர்­க­ளது ஹஜ் கட்­ட­ணங்கள் என்­பன பத்­தி­ரி­கைகள் வாயி­லாக விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்­டன. இந்தப் பணி­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மேற்­கொண்­டது. இதனால் கட்­டணம் அற­விடல் மற்றும் வழங்­கப்­படும் சேவைகள் தொடர்பில் ஹஜ் முக­வர்­க­ளி­டையே போட்­டி­யேற்­பட்­டது. ஹஜ் கட்­ட­ணங்­க­ளிலும் வீழ்ச்­சி­யேற்­பட்­டது.

சிறந்த சேவை­களை வழங்கும் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மான ஹஜ் முக­வர்­களை நாடியே ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் சென்­றனர். ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் உச்ச நீதி­மன்றம் ஏற்­க­னவே சில விதி­மு­றை­களை வழங்­கி­யி­ருந்­தது. நீதி­மன்றம் வழங்­கிய ஹஜ் வழி­மு­றைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக ஹஜ் முக­வர்கள் சிலர் வழக்கும் தாக்கல் செய்­துள்­ளனர். ஹஜ் கோட்­டாவை பழைய முறைப்­ப­டியே பகிர்ந்­த­ளிக்கும் படி உத்­த­ர­விடும்படியே நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது என்­றாலும் புதிய முறை­யி­லான கோட்டா பகிர்வு முறையே தற்­போது அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா சவூதி ஹஜ் அமைச்­சினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான ஒப்­பந்­தத்தில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமும், சவூதி ஹஜ் அமைச்­சரும் சவூ­தியில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். சவூதி அரே­பியா ஒவ்­வொரு நாட்­டி­னதும் முஸ்லிம் சனத் தொகைக்­கேற்­பவே ஹஜ் கோட்­டாவை ஒதுக்­கு­கி­றது. இதன் அடிப்­ப­டையில் சில வரு­டங்­க­ளுக்கு முன்பு இலங்­கைக்கு 2240 ஹஜ் கோட்­டாவே வழங்­கப்­பட்­டது. என்­றாலும் கடந்த வருடம் சவூதி மன்­னரின் அங்­கீ­கா­ரத்­துடன் இலங்­கைக்கு 2800 ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டது. இவ்­வ­ருடம் 3000 ஹஜ் கோட்டா வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அமைச்சர் ஹலீம் சவூதி ஹஜ் அமைச்­ச­ரிடம் விடுத்த வேண்­டு­கோ­ளி­னை­ய­டுத்து ஹஜ் கோட்டா 3500 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே வேளை  ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­த­வர்­களில் அநேகர் ஹஜ் கட­மையில் ஆர்­வ­மற்­ற­வர்­க­ளாக இருப்­ப­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்­துள்ளார்.

3000 ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தங்­க­ளது பய­ணத்தை, மீள­ கை­ய­ளிக்­கத்­தக்க பதிவுக் கட்­ட­ண­மாக 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்­யு­மாறு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் வேண்­டப்­பட்­டார்கள். அதற்­கான கடி­தங்­களும் திணைக்­க­ளத்தால் அனுப்பி வைக்­கப்­பட்­டன. உறுதி செய்­வ­தற்கு கால எல்லை வழங்­கப்­பட்­டது. ஆனால் 3000 விண்­ணப்­ப­தா­ரி­களில் சுமார் 700 பேரே தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். ஹஜ் யாத்­தி­ரைக்­காக விண்­ணப்­பித்து விட்டு ஏன் அவர்கள் பய­ணத்தை உறுதி செய்­ய­வில்லை என்­பதை அரச ஹஜ் குழுவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் கண்­ட­றிய வேண்டும்.

2018 ஆம் ஆண்டு ஹஜ் பய­ணத்தை மீள கைய­ளிக்­கத்­தக்க பதி­வுக்­கட்­டணம் 25 ஆயிரம் ரூபாவைச் செலுத்தி உறுதி செய்து கொண்­டுள்ள விண்­ணப்­ப­தா­ரிகள் 700 பேர் காத்­தி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது பய­ணத்தை மீண்டும் உறுதி செய்­யு­மாறு அவர்­களும் வேண்­டப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் திணைக்­களம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்த நிலு­வை­யி­லுள்ள அனை­வ­ருக்கும் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­ட­ணத்தைச் செலுத்தி பய­ணத்தை உறுதி செய்யும் படி அவர்கள் வேண்­டப்­பட்­டுள்­ளனர். 4000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு எதிர்­வரும் 28 ஆம் திக­திக்கு முன்பு பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு திணைக்­களம் கோரி­யுள்­ளது.

ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­த­வர்கள் தங்­க­ளது பய­ணத்தை உறுதி செய்­வதில் இவ்­வாறு தயக்கம் காட்­டு­வ­தற்­கான உண்­மை­யான காரணம் என்ன என்­பதை திணைக்­களம் கண்­ட­றிய வேண்டும். திணைக்­களம் தற்­போது யாத்­தி­ரி­கர்­களைத் தெரிவு செய்யும் முறை­மையில் ஏதேனும் குறை­பா­டுகள் உள்­ள­னவா என்­பதை மீள் பரி­சீலனை செய்ய வேண்டும்.

ஹஜ் கட­மைக்­காக சிர­மம்­பா­ராது ஆர்­வ­முடன் விண்­ணப்­பித்­த­வர்கள் தங்கள் பய­ணத்தை உறுதி செய்­வதில் அக்­க­றை­யின்றி இருக்­கி­றார்கள். என்றால் இதன் பின்­ன­ணியில் நியாயமான கார­ணங்கள் இருக்க வேண்டும்.

25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்­து­வது இறுதி நேரத்தில் ஹஜ் வாய்ப்பு கிட்­டாமல் போகலாம் என்ற அச்சம் அதி­க­ரித்த ஹஜ் கட்­டணம், ஹஜ் முக­வர்கள் மீதான நம்­பிக்­கை­யின்மை என்­பன கார­ண­மாக இருக்­கலாம். இதே­வேளை ஹஜ் கோட்டா பகிர்வில் அர­சியல் செல்­வாக்கு செலுத்­தப்­ப­டு­வ­தா­கவும் ஹஜ் முக­வர்கள் சிலர் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள்.

ஹஜ் விஷேட சட்டம்

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன் கரு­தியும், ஹஜ் முக­வர்­களின் ஊழல்­களைத் தடுப்­ப­தற்­கா­கவும் அமைச்சர் ஹலீம் ஹஜ் சட்ட மூல­மொன்­றினை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­க­வுள்ளார். இந்­தச்­சட்ட வரைபு ஹஜ் முக­வர்கள், துறைசார் நிபு­ணர்கள் மற்றும் பொது மக்­களின் கருத்­து­க­ளையும் உள்­ள­டக்­கியே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. சட்ட மூல­மொன்­றினை இயற்­று­வ­தற்கு அமைச்­ச­ர­வையும் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இச்­சட்ட மூலம் விரைவில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட வேண்டும். அவ்­வாறு நிறை­வேற்­றப்­பட்டால் ஹஜ் ஏற்­பா­டு­களில் நிலவும் அர­சியல் தலை­யீடு மற்றும் சில  ஹஜ் முக­வர்­களின் செல்­வாக்கு என்­ப­ன­வற்­றுக்கு முடிவு கட்ட முடியும்

வரிகள் அதி­க­ரிப்பு

கடந்த 14 ஆம் திகதி சவூதி அரே­பியா ஜித்­தாவில் இடம்­பெற்ற அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் சவூதி ஹஜ் அமைச்­சருக்­கி­டை­யி­லான கலந்­து­ரை­யா­டலின் போது சவூதி அரே­பி­யாவில் ஹஜ்­ஜா­ஜி­களின் போக்­கு­வ­ரத்­துக்­காக அற­வி­டப்­படும் கட்­டணம் ஒரு­வ­ருக்கு 1029 சவூதி ரியா­லி­லி­ருந்து 1449 சவூதி ரியா­லாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்­தோடு 5 வீத வற் வரியும் மேல­தி­க­மாக அற­வி­டப்­ப­ட­வுள்­ளது. இது ஜித்தா, மக்கா, மதீனா, அரபா, முஸ்­த­லிபா, மினா, ஜித்­தா­வுக்­கி­டை­யி­லான போக்­கு­வ­ரத்து கட்­ட­ண­மாகும்.

அத்­தோடு முஅல்லிம் கட்­ட­ணமும் இவ்­வ­ருடம் 5 வீதத்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மேல­தி­க­மாக 5 வீதம் வற் வரியும் அற­வி­டப்­ப­ட­வுள்­ளது. ஹஜ்­ஜா­ஜிகள் மினாவில் தங்­கு­வ­தற்கு இரண்டு தட்டு கட்­டி­லுக்­கென தலா ஒரு­வ­ருக்கு 180 ரியால்கள் அற­வி­டப்­ப­ட­வுள்­ளன. இதற்கு மேல­தி­க­மாக வற் வரியும் அற­வி­டப்­ப­ட­வுள்­ளது. சவூதி அரே­பி­யாவில் இவ்­வாறு வரிகள் அற­வி­டப்­ப­ட­வுள்­ளமை நிச்­ச­ய­மாக ஹஜ் கட்­ட­ணத்தில் பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தும். அத்­தோடு தற்­போது இலங்கை ரூபாவின் பெறு­மதி குறைந்து அமெ­ரிக்க டொலரின் பெறு­மதி அதி­க­ரித்­தி­ருக்­கி­றது.

2018 ஆம் ஆண்டு ஹஜ் கால­கட்­டத்தில் ஒரு அமெ­ரிக்க டொலரை கொள்­வ­னவு செய்ய 142 ரூபாய்­களே செலுத்த வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் இன்று 180 ரூபாவை செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் இவ்­வ­ருடம் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ளும் யாத்­தி­ரி­கர்கள் ஹஜ் பய­ணத்­துக்­காக கூடிய கட்­ட­ணத்தைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளதால் விமான டிக்கட்டுகளுக்கும் கடந்த வருடங்களை விட கூடுதலான தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 92 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நேர்முகப்பரீட்சையொன்று நடத்தப்பட்டே இத்தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஹஜ் கட்டணம்

இவ்வாறான சூழ்நிலை யில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் கட்டணமொன்றை நிர்ணயிப்பதுடன் வழங்கப்பட வேண்டிய சேவைகளையும் குறிப்பிட்டு ஹஜ் முகவர்களுடன் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும்.

கட்டணங்கள் சாதாரண சேவை, விஐபி (VIP) சேவை என தரப்படுத்தப்பட்டு அதற்கேற்றவாறு நிர்ணயிக்கப்படலாம்.

அத்தோடு முதற் தடவையாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கும், வயது முதிர்ந்த யாத்திரிகர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஹஜ் முகவர்கள் ஹஜ் ஏற்பாடுகளை ஒரு புனித பணியாக முன்னெடுக்க வேண்டுமேயன்றி வர்த்தக நோக்கோடு இலாப மீட்டும் தொழிலாக மேற்கொள்ளக் கூடாது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.