மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்க வேண்டும்

புதிய ஆளு­நர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி

0 493

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்­கு­வ­தோடு அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­வ­தற்­காக அனைத்து புதிய ஆளு­நர்­களும் நேர­டி­யாகத் தலை­யி­டு­வார்கள் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஆளு­நர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மாவட்ட ரீதி­யா­கவும் ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­னாலும் செயற்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்கள் தொடர்­பிலும் இந்த சந்­திப்­பின்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

பொதுமக்­களை பொரு­ளா­தார ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் மேம்­ப­டுத்தி சுபீட்­ச­மிக்க சிறந்த குடி­மக்­களை உரு­வாக்கும் நோக்­குடன், பல்­வேறு விசேட செயற்­றிட்­டங்கள் ஜனா­தி­ப­தியின் வழி­காட்­டலின் கீழ் ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் தற்­போது செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

நாட்டின் இளைஞர் சமு­தா­யத்தை போதைப்­பொருள் பாவ­னை­யி­லி­ருந்து விடு­விப்­ப­தற்­கான போதைப்­பொருள் ஒழிப்பு தேசிய செயற்­றிட்­டமும் பொது­மக்­களை வறு­மை­யி­லி­ருந்து மீட்­ப­தற்­கான கிராம சக்தி தேசிய செயற்­றிட்­டமும் அவற்றுள் பிர­தா­ன­மா­னவை. நாட்டின் பிள்­ளை­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்­காக “சிறு­வர்­களை பாது­காப்போம்” தேசிய செயற்­றிட்­டமும் சுற்­றாடல் பாது­காப்­பிற்­கான சுற்­றாடல் பாது­காப்பு தேசிய செயற்­றிட்டம், தேசிய உணவு உற்­பத்தி செயற்றிட்டம், சிறு­நீ­ரக நோய் நிவா­ரண தேசிய செயற்­றிட்டம் ஆகி­யன ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் நாட­ளா­விய ரீதியில் செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ஏனைய செயற்­திட்­டங்­க­ளாகும்.

ஜன­வரி 21 முதல் 28 வரை­யான காலப்­ப­குதி தேசிய போதைப்­பொருள் ஒழிப்பு வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், போதைப்­பொருள் பாவ­னையால் ஏற்­படும் சீர்­கே­டுகள் தொடர்பில் சமூ­கத்தை விழிப்­பூட்டும் பல வேலைத்­திட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்றுள் பாட­சாலை மாண­வர்கள், அரச அதி­கா­ரிகள் மற்றும் பொது மக்­களை இலக்­கா­கக்­கொண்டு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் உரிய அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்த ஜனா­தி­பதி, அவ் வேலைத்­திட்­டங்­களில் தமது தனிப்­பட்ட கவ­னத்தைச் செலுத்தி பங்­க­ளிப்­பு­களை வழங்­கு­மாறு ஆளு­நர்­க­ளி­டமும் மாகாண பிர­தான செய­லா­ளர்கள் உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி, தான் சுகா­தார அமைச்­ச­ராக பணி­யாற்­றிய கால­கட்­டத்தில் போதைப்­பொ­ரு­ளுக்கு எதி­ராக தம்மால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­களின் கார­ண­மாக ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் இலங்­கையில் போதைப்­பொ­ருட்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­ட­திட்­டங்கள் காணப்­ப­டு­வ­தாக தெரி­வித்தார். அத்­த­கைய சட்­டங்­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­துடன், போதைப்­பொ­ரு­ளினால் ஏற்­படும் சவால்­களை வெற்­றி­கொள்­வ­தற்­காக தனது ஆட்சிக் காலத்­திற்குள் சாத்­தி­ய­மான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்ள தான் தயா­ராக உள்­ள­தாக தெரி­வித்தார்.

வட, கிழக்கு மாகா­ணங்­களில் போதைப்­பொருள் பாவ­னையை தடுப்­ப­தற்­காக அர­சாங்­கத்­தினால் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், அவற்றின் முன்­னேற்றம் தொடர்­பா­கவும் இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது மீளாய்வு செய்­யப்­பட்­டது.

பெப்­ர­வரி மாதம் 18 முதல் 23ஆம் திகதி வரை­யான காலத்தை தேசிய கிராம சக்தி வார­மாக பிர­க­டனம் செய்து 4000 கிரா­மங்­க­ளுக்கு கிரா­ம­சக்தி செயற்­றிட்­டத்தை கொண்டு செல்லும் நோக்­கத்­தோடு பல வேலைத்­திட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. அந்த வேலைத்­திட்­டங்கள் தொடர்­பிலும் ஆளு­நர்கள் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.