அரசியலில் களமிறங்க கோத்தா தீர்மானம்

மஹிந்த-மைத்திரி இணக்கத்துடன் இரகசிய நகர்வுகள்

0 502

மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை கொண்டு அதற்­க­மைய தாம் அர­சியல் களத்தில் இறங்­கவுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் தனது தலை­மையில் அடுத்த தேர்­தல்­களை சந்­திக்க ‘வியத்­மக’ அமைப்பினூ­டாக புதிய வேலைத்­திட்­டத்தை கையாள தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், இந்த நகர்­வு­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரி­வித்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவும் இதற்கு இருப்­ப­தாக அவர் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­ட­னான தனிப்­பட்ட சந்­திப்­பொன்றில் தெரி­வித்­துள்ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக அமெ­ரிக்க விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் நாடு திரும்­பி­யி­ருந்தார். இந்­நி­லையில் அவர் ‘வியத்­மக’ அமைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­டனும் சில முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­டனும்  தனிப்­பட்ட சந்­திப்­பொன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். தற்­போ­தைய அர­சியல் களம் குறித்து அதில் முக்­கி­ய­மான கலந்­து­ரை­யாடல் ஒன்­றி­னையும் அவர் முன்­னெ­டுத்­துள்ளார். இதில் தமது அடுத்த கட்ட அர­சியல் பயணம் குறித்தும் பேசி­யுள்ளார்.

இதன்­போது தாம் அடுத்த கட்ட அர­சியல் நகர்­வு­களை இலக்கு வைத்து பய­ணிக்க வேண்டும் எனவும், கூட்­ட­ணி­யா­கவோ அல்­லது தமது அணி­யா­கவோ கள­மி­றங்கி அதி­கா­ரங்­களை கைப்­பற்றும் முயற்­சி­களை கையாள வேண்டும் என கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ள­துடன் மக்கள் மத்­தியில் தம் மீதான அபிப்­பி­ரா­யங்­களை பெற்­றுக்­கொண்டு அதில் சாத­க­மான தன்­மைகள் காணப்­ப­டும்­பட்­சத்தில் அடுத்த கட்ட அர­சியல் பய­ணத்தை முன்­னெ­டுக்க முடியும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் தமது தலை­மையில் முன்­னோக்கிச் செல்­லக்­கூ­டிய சாத­க­மான கார­ணி­களை அமைத்­து­கொண்டால் தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மஹிந்த ராஜபக் ஷ அதற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்க தயா­ராக உள்­ள­தா­கவும் தாம் இரு­வரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அந்த சந்­திப்பின் போது குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ரவு தமக்கு இருப்­பதை குறிப்­பிட்­டுள்ள முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும் ஆரம்­பத்தில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தா­கவும் அதில் சாத­க­மான பதில்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ள­துடன் அதே நிலைப்­பாட்டில் இன்றும் ஜனா­தி­பதி உள்ளார் எனவும் தெரி­வித்­துள்ளார்.

சில தினங்­க­ளுக்கு முன்னர் சில முக்­கிய உறுப்­பி­னர்­களை மாத்­திரம் அழைத்து புதுவருட நிகழ்வொன்றை நடாத்தியுள்ள நிலையில் அந்த நிகழ்விலேயே இந்த விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதும் ‘வியத்மக’  அணியினர் வெகு விரைவில் புதிய வேலைத்திட்டங்கள் சிலவற்றை ஆரம்பிக்க இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.