முஸ்லிம் அதிகார அலகு எனும் முஸ்லிம் பெரும்பான்மை

0 669
  • ஏ.ஜே.எம். நிழாம்

வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்டால் கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் 34 வீதத்­தி­லி­ருந்து 12 வீத­மாகக் குறைந்து விடு­வார்கள். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பிர­தேச அதி­காரப் பர­வலே என்­பதால் முஸ்­லிம்­க­ளுக்கும் அதில் பங்கு இருக்க வேண்டும். எனவே தமி­ழரின் சுய நிர்­ண­யத்­துக்கும் இறை­மைக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் புறம்­பாக அவர்­களைப் போல் முஸ்­லிம்­களும் தனித்­து­வ­மாக வாழ கிழக்கில் ஒரு மாகாணம் அமைக்­கப்­பட வேண்டும் என அஷ்ரப் கோரினார்.

மாநிலம், மாகாணம், பிராந்தியம், அலகு என்­றெல்லாம் பல்­வேறு சம­யங்­களில் அவர் இது­பற்றிக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அவ­ரது கணிப்பில் எல்லாம் ஒன்­றையே குறிக்­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமா அது இல்லை ஏனைய மாகா­ணங்­களில் உள்­ள­துபோல் எல்லா இன­மக்­களும் வாழலாம். முஸ்­லிம்­களே அதில் பெரும்­பான்­மை­யாக வாழ்­வார்கள் எனவும் குறிப்­பிட்டார். அது மத­ரீ­தி­யான இஸ்­லா­மிய பகு­தியா? முஸ்லிம் அதி­கார அலகு எனவும் அதைக் குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­களே. ஷரீஆ அடிப்­ப­டை­யி­லான நிலப்­ப­கு­தியா எனவும் கேட்­கப்­பட்­ட­போது இல்லை சமூ­கத்தின் தனித்­து­வத்தைக் குறிக்­கவே முஸ்லிம் என்றேன். நிர்­வாக உரி­மையைக் குறிக்­கவே அதி­காரம் என்றேன். ஒரு சிறு நிலப்­ப­ரப்பு என்­பதைக் குறிக்­கவே அலகு என்றேன் எனக்­கூ­றினார். இதன் பரப்­ப­ளவு எப்­படி? இது எப்­படி அமை­ய­வேண்டும் என்­பது பற்­றி­யெல்லாம் புதிய தலை­மு­றைக்குத் தெரி­யாது. காரணம் அஷ்­ரபின் அடிச்­சு­வட்டில் வந்தோர் இதைக் கூறிக்­காட்­டவே இல்லை.

பலர் சம்­மாந்­துறை, பொத்­துவில், கல்­முனை ஆகிய நக­ரங்­களை இணைத்துக் கல்­மு­னையைத் தலை­ந­க­ராகக் கொண்டு அவர் கோரிய கரை­யோர மாவட்­டமே முஸ்லிம் அதி­கார அலகு என நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அதில் நானும் விதி­வி­லக்­கா­க­வில்லை. அஷ்­ரபின் நெருங்­கிய நண்­ப­ரான எம்.ரி.ஹஸ­ன­லியைத் தொடர்பு கொண்ட பிற­குதான் சரி­யான விளக்­கத்தை என்னால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. முஸ்லிம் அதி­கார அல­கு­பற்றி கடந்­த­முறை நான் வழங்­கிய தரவு திருத்­தப்­ப­ட­வேண்­டி­ய­தாகும். இதுதான் உண்மை விளக்கம்.

கிழக்கு மாகா­ணத்தில் திகா­ம­டுல்ல, மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை என மூன்று மாவட்­டங்கள் இருக்­கின்­றன அல்­லவா? நிலத்­தொ­டர்­பற்ற முறையில் அம்­மூன்று மாவட்­டங்­க­ளி­லு­முள்ள முஸ்லிம் நக­ரங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே முஸ்லிம் அதி­கார அலகு அமைய வேண்டும். இதற்கு நிலத்­தொ­டர்­பற்ற முறையில் இந்­தி­யாவில் அமைந்­துள்ள பாண்­டிச்­சேரி எனும் மாகா­ணத்தை அஷ்ரப் உவ­மை­யாகக் காட்­டி­யி­ருந்தார்.

வட­மா­காண முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் விரும்­பினால் இத­னோடு இணைந்து கொள்­ளலாம். இன்றேல் தமிழ் மக்­க­ளோடு சேர்ந்து வாழ்ந்­து­கொள்­ளலாம் எனவும் அவர் குறிப்­பிட்டார். இது­பற்றி பல­சுற்று பேச்­சு­வார்த்­தை­களை தமிழ் தரப்­பி­ன­ரோடு நடாத்­தி­யி­ருந்தார். எனினும் தமிழ் ஆயுதப் போரா­ளி­க­ளிடம் சுயா­தீ­னத்தை இழந்­தி­ருந்த அவர்­களால் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடி­யா­தி­ருந்­தது. மறு­புறம் தமிழ்­ப­கு­தி­களில் ஆயுதக் கலா­சாரம் பர­வி­யி­ருந்­ததால் நிரா­யுத பாணி­க­ளான முஸ்­லிம்­களால் முஸ்லிம் அதி­கார அல­கையும் கரை­யோர மாவட்­டத்­தையும் கோரும் சூழ்­நிலை இருக்­க­வில்லை.

தற்­போது தமிழ்ப் போரா­ளி­களின் ஆயுதப் போராட்டம் முடி­வுற்று மீண்டும் ஜன­நா­யக தமிழ்த்­த­லை­வர்கள் வந்­தி­ருக்­கி­றார்கள். அவர்கள் சுய­நிர்­ணய இறைமைக் கோரிக்­கையைக் கைவிட்­டு­விட்டு சமஷ்டித் தீர்­வுக்குள் ஒரே நாட்டில் வாழ்­வ­தற்கும் இசைந்­துள்­ளார்கள். பிரி­வினை கோர­மாட்டேன் என சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்­றத்தில் சபதம் செய்­துள்ளார். சமஷ்டி, யாப்­புக்கு முர­ணல்ல என உயர்­நீ­தி­மன்றம் பொருட்­கோ­டலும் செய்­தி­ருக்­கி­றது.

அதன்­படி மாகாண சமஷ்டி, யாப்­புக்கு முர­ணல்ல என்­றி­ருப்பின் முஸ்­லிம்­க­ளுக்­கான மாகா­ணமும் யாப்­புக்கு முர­ணல்ல. சமஷ்டி, பிரி­வி­னை­யல்ல என்றால் முஸ்லிம் அலகும் பிரி­வி­னை­யா­காது. எனவே, நில­ரீ­தி­யி­லான அதி­காரப் பர­வலைப் பகிர்ந்­து­கொண்டு தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் நிலத்­தொ­டர்­பற்ற முறையில் தத்­த­மக்­கு­ரிய தீர்­வு­களைக் கண்­டு­கொள்ள இணங்­க­வேண்டும். மேலா­திக்க உணர்­வின்றி கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்­க­ளையும் மறந்து புதிய முறையில் அணுக வேண்டும்.

காரணம், தமி­ழரைப் பகைத்துக் கொண்டு முஸ்­லிம்­க­ளாலோ முஸ்­லிம்­களைப் பகைத்துக் கொண்டு தமி­ழர்­க­ளாலோ வடக்கு கிழக்கில் நிரந்­த­ர­மாக வாழ முடி­யாது. பிட்டும் தேங்­காயும் போன்று வாழ்ந்த இவ்­விரு சமூ­கங்­களும் இடையில் பிணங்கிக் கொண்­டதால் தான் பேரின வானரம் இடையில் புகுந்து அப்பம் பங்­கிட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. இதற்கு இசைந்தால் இரு பூனை­க­ளுக்கும் எந்த அளவும் எஞ்­சாது என்­பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயு­த­மி­ருக்கும், அழி­வுற்ற விரக்­தியும் இருக்­கும்­வரை சூழ­லுக்­கேற்ற மன நிலைக்கு வரு­வது கடி­ன­மே­யாகும். உயர்வுச் சிக்கல், தாழ்­வுச்­சிக்கல் என்­றெல்லாம் இருக்கக் கூடாது.

மாறாத வடுக்­களை நீக்கி முஸ்­லிம்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்ட ஜன­நா­யக தமிழ்த் தலை­வர்கள் போதிய முயற்­சியைச் செய்­தாக வேண்டும். சம­மான தீர்­வுக்கு உத்­த­ர­வாதம் வழங்­கு­வதன் மூலமே இத்­த­கைய நிலைப்­பாட்டை அடை­யலாம். அதா­வுல்­லாஹ்வும் ஹிஸ்­புல்­லாஹ்வும் ரிஷாத் பதி­யு­தீனும் கிழக்கைத் தனி­யாக்க வேண்டும் எனக் கோரி­னாலும் அஷ்­ரபின் விருப்பம் அது­வல்ல. இணைந்த வடக்கு – கிழக்கில் ஓர் அதி­கார அலகைக் கிழக்கில் நிலத்­தொ­டர்­பற்று ஈட்டிக் கொள்­வ­தே­யாகும். வடக்கும்– கிழக்கும் இணைந்­தால்தான் அது சாத்­தி­யப்­படும். கிழக்கு தனி­யா­கி­விட்டால் காலப்­போக்­கில் தெற்கு வாழ் பெரும்­பான்­மை­யினர் திட்­ட­மிட்டு குடி­யேற்­றப்­பட்டு முழு கிழக்கும் கப­ளீ­கரம் செய்­யப்­பட்டு விடும். முஸ்லிம் அதி­கார அலகு இல்­லாமல் வடக்­கையும் கிழக்­கையும் இணை­ய­விட்டால் தமிழ் குடி­யேற்­றங்­களும் பர­வ­லாக நிகழ்ந்து முஸ்­லிம்கள் சித­றுண்டு போகலாம். அத­னால்தான் முஸ்லிம் அதி­கார அலகின் மூலம் முஸ்­லிம்­களின் தனித்­துவ பாது­காப்பு இருப்பை உறு­திப்­ப­டுத்திக் கொண்டு கிழக்கில் தமிழர் பர­வ­லா­வ­தற்கு வகை செய்தார். இதன் மூலமே பேரினக் குடி­யேற்­றத்தை வகை செய்தார். இதன் மூலமே பேரினக் குடி­யேற்­றத்தை கிழக்­கி­லி­ருந்து முற்­றிலும் ஒழிக்க முடியும்.

அரசு தரப்­பா­கவே ஒரு­முறை ஹக்கீம், பிர­பா­க­ரனை நேரில் கண்­டி­ருந்தார். அரசு சொன்­ன­தற்­காகப் பிர­பா­க­ர­னையே கண்ட அவர் அஷ்ரப் அகால மரண மடைந்து 18 ஆண்­டுகள் கழிந்தும் கூட அவ­ரது இலட்­சியக் கன­வான கரை­யோர மாவட்­டத்தை அர­சு­க­ளுடன் பேசித் தர­வில்­லை. அதற்கும் உரிய அமைச்­ச­ராக முன்பு அதா­வுல்­லாஹ்வும் இருந்­தி­ருக்­கிறார் அதைச் செய்­ய­வில்­லை.

தற்­போது அஷ்­ரபின் கட்­சியால் வந்த ஹரீஸ் எம்.பி. அப்­பொ­றுப்­புக்கு வந்­தி­ருக்­கிறார். அதற்கு ராஜாங்க அமைச்­ச­ராக வந்­துள்ள இவரால் அது முடி­யுமா? இன்னும் ஒரு வரு­டமே அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு இருக்­கி­றது அதற்குள் கரை­யோர மாவட்­டத்தை சாதிப்­பாரா-? கல்முனையே கரை­யோர மாவட்­டத்தின்  தலை­நகர் என அஷ்ரப் குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்கு அமைச்சர் தயா­க­மகே இட­ம­ளிப்­பாரா? ஹரீ­ஸுக்கு கெபினட் அந்­தஸ்தும் இல்­லை. தமி­ழ­ருக்கு சமஷ்டி மாகாணம் அமை­வ­தா­யினும் முஸ்­லிம்­க­ளுக்கு அதி­கார அலகு அமை­வ­தா­யினும் மத்­திய அரசு பல்­லின வடிவில் அமைந்­தி­ருக்க வேண்டும். பேரின மத்­திய அர­சாயின் சிறு­பான்­மை­க­ளுக்­கான பிர­தேச அதி­காரப் பர­வலின் இருப்பு நிச்­ச­ய­மற்­ற­தா­வ­தோடு நிர்­வாக ஊடு­ரு­வலும் ஏற்­பட்டு விடலாம்.

உத்­தேச புதிய யாப்பில் ஏக்­கீய ராஜ்ய (ஒற்­றை­யாட்சி) எனும் சிங்­களச் சொல்­லுக்கு ஒத்­தொ­ரு­மித்த எனும் தமிழ்ச் சொல்லே பயன்­ப­டுத்­தப்­படும் எனவும் இது சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டுமே உரிய நாடு எனும் அர்த்­தத்தைக் குறிக்­காது பிரி­யாத பிளவு படாத பிரிக்­கப்­பட முடி­யாத எனும் அர்த்­தங்­க­ளையே குறிக்கும் எனவும் இடைக்­கால அறிக்­கைக்குப் பின் குறிப்­பிட்­டி­ருந்­தார்கள்.

எனினும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கண்­டியில் ஒரு கூட்­டத்தில் இது பற்றி அண்­மையில் பேசு­கையில்;

முழு­மை­யான ஏக்­கீய ராஜ்ய என்றே குறிப்­பிட்­டி­ருந்தார். சுமந்­திரன் எம்.பி. ஒன்­றையும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரி­யெல்ல வேறொன்­றையும் குறிப்­பி­டு­கின்­ற­ரார்­களா? அண்­மையில் கண்­டிக்குப் போன பிர­தமர் ரணில் தலைமை பிக்­கு­க­ளிடம் உத்­தேச புதிய யாப்பில் பௌத்த மத சாசன முன்­னு­ரி­மைகள் தக்­க­வைக்­கப்­படும் என உறுதி கூறி­னார். இடைக்கால அறிக்­கையில் அத்­த­கைய முன்­னு­ரி­மைகள் இடம்­பெற்­றி­ருக்­க­வில்­லையா? தற்­போ­தி­ருக்கும் யாப்­பிலும் கூட இத்­த­கைய முன்­னு­ரி­மை­க­ளோடு ஏக்­கீய ராஜ்ய (ஒற்­றை­யாட்சி) எனும் சொல் காணப்­ப­டவே செய்­கின்­றது. எனினும் இந்த யாப்பு சமஷ்­டிக்கு முர­ணல்ல என உயர்­நீ­தி­மன்றம் பொருட்­கோடல் செய்­தி­ருக்­கி­றது. பிரி­வினை கோர மாட்டேன் என சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்­றத்தில் சப­தமும் செய்­தி­ருக்­கிறார். பிற­கென்ன? ஆங்­கி­லேயர் தந்த சோல்­பரி யாப்பு மத, இன சார்­பற்ற பல்­லின வடிவில்தான் இருந்­தது. 1972 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட குடி­ய­ரசு யாப்பு தான் பேரினம் சார்ந்து பௌத்த மத சாசன முன்­னு­ரி­மை­களை இயற்றி சிறு­பான்­மைக்­காப்­பீ­டான 29 ஆம் ஷரத்­தையும் நீக்­கி­யது. இதையே 1978 ஆம் ஆண்டின் நிறை­வேற்று அதி­கார யாப்பும் இயற்­றி­யி­ருந்­தது. அது சமஷ்­டிக்கு முர­ணா­ன­தல்ல என இப்­போது உயர்­நீ­தி­மன்றம் பொருட்­கோடல் செய்­தி­ருப்­பதை இனப் பிரச்­சினைத் தீர்­வுக்­கான சாத­க­மா­கவே கருத வேண்­டி­யி­ருக்­கி­றது. அந்த வகையில் மத்­திய அரசு பல்­லின வடி­வத்தைப் பெறா­ம­லேயே சமஷ்­டியை அமு­லாக்­கலாம் என்­றா­கி­றது. எனினும் ஒரு கேள்வி பேரின யாப்பு பேரின சமஷ்­டி­யையா அனு­ம­திக்­கி­றது.

பல்­லின நாட்டைப் பேரின வடிவில் ஆள முடி­யாது. அது சாத்­தி­ய­மாகும் வழி இல்­லா­விட்டால் அது ஒன்றே வழி என நினைத்து வேறொரு வழியை நாடா­மலும் இருக்­கக்­கூ­டாது. சேதா­ரத்­து­ட­னா­வது நகையைத் தக்­க­வைக்க வேண்டும். சிங்­களத் தரப்­பி­னரின் ஒரே நோக்கம் பௌத்த மத சாசன முன்­னு­ரி­மைகள். தமிழ் தரப்­பி­னரின் ஒரே நோக்கம் சமஷ்டி உயர்­நீ­தி­மன்­றத்தின் அண்­மைய பொருட்­கோ­டலால் இரண்டும் சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கின்­றன. முன்­னு­ரிமை முழு உரி­மையா? என்­ப­தற்கு வரை­ய­றையும் கட்­டுப்­பாடும் வேண்டும். இன்றேல் ஏனைய மதங்­க­ளுக்குப் பாதிப்பு நேரும். பேரின ஒற்­றை­யாட்­சியா? பல்­லின ஒற்­றை­யாட்­சியா? என்­ப­திலும் கூட தெளிவு வேண்டும். ஏனெனில் ஒற்றை என்­ப­திலோ ஒரு­மித்த என்­ப­திலோ பல்­லின வடிவம் இருக்கப் போவ­தில்லை ‘ஒற்றை எனும் சொல் சிங்­க­ள­வ­ருக்கு மட்­டுமே என்­பதைக் குறிப்­ப­தோடு துன் சிங்­ஹலே (முச்­சிங்­க­ளவர்) எனக் குறிப்­பி­டப்­படும் உட­ரட்ட, பஹத்­த­ரட்ட, சப்­ர­க­முவ ஆகிய முச்­ச­மூ­கத்­தாரும் ஒத்­தொ­ரு­மித்த எனவும் அர்த்­தப்­ப­டுத்­தலாம்.

மத மேலா­திக்­கத்தால் இலங்­கையில் சிறு­பான்­மைகள் அஞ்­சு­கி­றார்கள். பேரி­ன­வா­தமும் அவர்­களை நிர்க்­க­தி­யாக்­கி­யி­ருக்­கி­றது. இரண்டும் கலந்த பேரின மத மேலா­திக்­கமே அவர்­களின் பல்­லின புதிய யாப்­புக்­கான கோரிக்­கைக்கும் கார­ண­மாகும்.

சிறு­பான்­மை­க­ளுக்கு நியா­ய­மான உரி­மை­களை வழங்க முற்­படும் உத்­தேச புதிய யாப்­புக்கு அவ்­வி­ரண்­டுமே தடை­யாக நிற்­கின்­றன. எனினும் புதிய யாப்பு மூலம் ஒரு­மித்த நாடு உரு­வாக வேண்டும். நேர்­மை­யான அதி­காரப் பகிர்வு வேண்டும். நியா­ய­மான யாப்­பையே தமி­ழர்கள் ஆத­ரிப்­பார்கள். இயற்­கை­யான குடி­யேற்­றங்­களை எதிர்க்க மாட்டோம் என்­றெல்லாம் அண்­மையில் தன்னைச் சந்­தித்த ஜெப்­ரிவான் ஓர்­டன் எனும் ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரிடம் சம்­பந்தன் கூறி­யுள்ளார்.

ரணிலின் அரசைத் தக்­க­வைக்க தான் வழங்­கிய ஆத­ரவு ஜன­நா­யகக் கொள்கை ரீதி­யா­னது. பிர­த­மரோ அரசோ இல்­லா­விட்டால் ஏற்­படும் அழி­வு­களைத் தடுக்­கவே அவ்­வாறு செய்தேன் எனவும் அவர் கூறி­யி­ருந்தார். நான் நியா­ய­மாக நம்­பு­கிறேன். இது எனது நாடு இந்­நாடு செழிப்­புற வேண்டும் என்­பதே என் விருப்பம். அந்த அடிப்­ப­டையில் என்னால் நம்­பிக்கை அற்­ற­வ­னாக இருக்க முடி­யாது.

அரசால் பிர­தே­சங்கள் தோறும் இன விகி­தா­சார மாற்­றங்­களைக் கொண்­டு­வர முனையும் குடி­யேற்­றங்­களை நாம் எதிர்க்­கிறோம். மக்­களே இயல்­பாகக் குடி­யே­று­வதை எதிர்க்­க­வில்லை. திட்­ட­மிட்ட பேரினக் குடி­யேற்­றங்­களால் தமிழ் பிர­தே­சங்­களில் இன விகி­தா­சாரம் மாற்­ற­ம­டைந்து இனப் பரம்­பலில் வலு­வி­ழந்து விடு­வார்கள். இதனால் எமது பாரம்­ப­ரிய நிலமும் கலா­சா­ரமும் பாதிக்­கப்­பட்டு விடும். அவற்றைப் பேணு­வதில் தமிழ் மக்கள் உள்­ளார்ந்த அக்­க­றை­யுள்­ள­வர்கள் எமக்கும் அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தும் நேர்­மை­யான அதி­காரப் பகிர்வு வேண்டும். புதிய யாப்பில் எமக்கு நியாயம் இருந்தால் மட்­டுமே ஆத­ரவு வழங்­குவோம். உரிய திருத்­தங்­களைக் கொண்டு வர பல­முறை முயற்சி செய்­துள்ளோம். புதிய யாப்­புக்குத் தற்­போது வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. நாட்டின் நலனைக் கருதி இதைப் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என்­றெல்லாம் சம்­பந்தன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு இன்னும் ஒரு வரு­ட­கா­லமே இருக்­கையில் அதற்குள் உத்­தேச புதிய யாப்பு இயற்­றப்­ப­டுமா கால­வ­ரை­யறை விதிக்­கப்­பட்­டதா? நிபந்­த­னைகள் முன்­வைக்­கப்­பட்­ட­னவா? அவை நிக­ழாமல் சம்­பந்தன் இப்­படி உறு­தி­படக் கூற­மாட்டார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி யாப்பின் வரைபு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட வேண்­டி­யி­ருந்த சூழ­லில்தான் அதைக் குழப்­பி­ய­டிக்கப் பிர­தமர் மாற்றம் பாராளுமன்றக் கலைப்பு யாவும் நிகழ்ந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனால்தான் ரணிலின் அரசைத் தக்கவைத்தது.

புதிய யாப்பின் வரைபு 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுமந்திரன் எம்.பி.குறிப்பிட்டுள்ளார். அதற்கு இன்னும் ஏறத்தாழ ஒரு மாதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. அதில் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனவா? ரணில் முஸ்லிம்களிடமும் பேசி ஹக்கீமும் ரிஷாதும் இதுபற்றி அவரிடம் எடுத்துக்கூறி புதிய யாப்பின் வரைபில் ஏதேனும் இணைத்திருக்கிறார்களா?

யாப்பு விடயத்தில் முஸ்லிம் தலைமைகளுக்கு ஏன் இந்த பொடுபோக்கு? முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் யாப்பை அலட்சியம் செய்கிறார்களே!  யாப்பு விடயத்தில் இனியும் முஸ்லிம் சமூகம் இவர்களிடம் தங்கியிருக்க முடியுமா?  இதை முஸ்லிம்கள் சமூகமயப்படுத்தி தாமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.