மாகா­ண­சபை தேர்தல் தாம­த­மாக பிர­தான 2 கட்­சி­க­ளுமே காரணம்

அனு­ர­கு­மார திஸா­நா­யக்க குற்­றச்­சாட்டு

0 599

மாகா­ண­சபை தேர்தல் தாம­த­மா­வ­தற்குப் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுமே கார­ண­மாகும். எல்லை நிர்­ணய அறிக்­கையை காரணம் காட்டி பிர­தான கட்­சிகள் இரண்டும் மாகாண சபைகள் தேர்­தலை பிற்­போடும் சூழ்ச்­சி­களில் ஈடு­பட்டு வந்­துள்­ளன என மக்கள் விடு­தலை முன்­னணி தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க சபையில் குற்­றஞ்­சாட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை மாகாண  சபை எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பான மீளாய்வுக் குழுவின் அறிக்கை தாம­த­மா­கி­யுள்­ளமை தொடர்­பாக எதிர்க்­கட்­சி­யி­னரால் எழுப்­பப்­பட்ட கேள்­வி­களை தொடர்ந்து சபையில் ஏற்­பட்­டி­ருந்த வாத விவா­தங்­களின் போது தனது கருத்தை முன்­வைத்து உரை­யாற்றும் போதே அனு­ர­கு­மார திஸா­நா­யக்க எம்.பி.  இவ்­வாறு குற்­றச்­சாட்டை முன்­வைத்தார். அவர் அதன்­போது தெரி­விக்­கையில்,

மாகாண சபைகள் தேர்தல் தொடர்­பான எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. இதனால் அந்த அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் சபா­நா­ய­க­ரினால் பிர­தமர் தலை­மையில்  எல்லை நிர்­ணயம் தொடர்­பாக நட­வ­டிக்கை எடுக்க  மீளாய்வுக் குழு­வொன்று அமைக்­கப்­பட்­டது. அந்­தக்­குழு  இரண்டு  மாதத்­திற்குள் தனது அறிக்­கையை சமர்ப்­பித்­தி­ருக்க வேண்டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டது.  இதே­வேளை குறித்த குழு­வினால் அது தொடர்­பான அறிக்­கையை  இரண்டு மாதத்­திற்குள் சமர்ப்­பிக்­கா­விட்டால் அதற்­க­டுத்­த­தாக எடுக்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக அது தொடர்­பான சட்­ட­மூ­லத்தில் எங்­கேயும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. இதனால் எல்லை நிர்­ணய நட­வ­டிக்­கை­களை பூர்த்தி செய்­வதில் சட்ட சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. ஆகவே  இந்த சட்­ட­மூ­லத்தில் திருத்­தத்தை மேற்­கொண்டு அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். எவ்­வா­றா­யினும் அறிக்­கையை சமர்ப்­பிக்­காது இருப்­பது தொடர்­பாக அந்­தக்­குழு பாரா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்டும்.

இதே­வேளை, பழைய முறை­மையில் தேர்­தலை நடத்­து­வது குறித்து இப்­போது கூறு­கின்­றீர்கள், ஆனால் எல்லை நிர்­ணய அறிக்கை சபையில் சமர்­ப்பிக்­கப்­பட்ட போது அதனை ஏற்­று­கொள்ள முடி­யா­தென   இரண்டு தரப்­பி­னரும் முரண்­பட்­ட­துடன், எல்லை நிர்­ண­யத்தை எதிர்த்து  திட்­ட­மிட்டு தேர்­தலை பிற்­போடும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டீர்கள்.  இது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை அன்றே செய்­தி­ருந்தால் இன்று தேர்தல் நடந்­தி­ருக்கும். ஆனால் அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை. இப்­போது மீண்டும் பழைய கதை­களை கூறு­கி­றீர்கள். தேர்­தல்கள் பிற்­போ­டப்­பட பிர­தான இரண்டு கட்­சி­யி­ன­ருமே காரணம் என அவர் குறிப்­பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.