அவுஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு சந்தேகத்திற்கிடமான பொதிகள் அனுப்பி வைப்பு

0 509

அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன்  மற்றும் கன்­பரா நக­ரங்­க­ளி­லுள்ள வெளி­நாட்டுத் தூத­ர­கங்கள் மற்றும் துணைத் தூத­ர­கங்­க­ளுக்கு சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதிகள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இச்­சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அவ­சர சேவைப் பிரி­வினர் மற்றும் அவுஸ்­தி­ரே­லிய சமஷ்டிப் பொலிஸார் பொதி­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் அதற்­கான பின்­னணி தொடர்பில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் புதன்­கி­ழ­மை­யன்று வெளி­யி­டப்­பட்ட  அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேல­திக விப­ரங்­களோ அல்­லது அதி­கா­ரி­க­ளுக்கு இதனால் ஏதேனும் பாதிப்­புக்கள் ஏற்­பட்­ட­னவா என்­பது தொடர்­பிலோ தக­வல்கள் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள எந்­தெந்த வெளி­நாட்டுத் தூத­ர­கங்­க­ளுக்கு சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதிகள் அனுப்பி வைப்­பட்­டி­ருந்­தன என பொலிஸார் குறிப்­பி­ட­வில்லை. எனினும் மெல்­பேர்­னி­லுள்ள அமெ­ரிக்க மற்றும் பிரித்­தா­னிய துணைத் தூத­ர­கங்­க­ளுக்கு சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதிகள்  அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஒரு டசி­னுக்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு தூத­ர­கங்­க­ளுக்கு இவ்­வா­றான பொதிகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்ள அதே­வேளை, பொதி­க­ளினுள் கட்­டட நிர்­மா­ணத்­திற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் புற்­றுநோய் மற்றும் ஏனைய உடல்­நலப் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அஸ்­பெஸ்டஸ் வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தூத­ரக அலு­வ­லர்கள் தெரி­வித்­தனர்.

மெல்­பேர்­னி­லுள்ள கிரேக்கம், இத்­தாலி, ஸ்பெயின், தாய்­லாந்து, இந்­தியா, ஜப்பான், பாகிஸ்தான், எகிப்து, டென்மார்க் மற்றும் சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­களின் துணைத் தூத­ர­கங்­க­ளுக்கு சந்­தே­கத்­திற்­கி­ட­மான பொதிகள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன. எனினும் இத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.