அரசியலமைப்பே தெரியாத ஜனாதிபதி இனியும் அதிகாரத்தில் இருக்க வேண்டுமா?

பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்கிறது ம.வி.மு.

0 587

அர­சி­ய­ல­மைப்பே தெரி­யாத ஜனா­தி­பதி இனியும் அந்த அதி­கா­ரத்தில் இருக்க வேண்­டுமா என்­பதை பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்க வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு முது­கெ­லும்­புள்­ள­தெனில் அர­சி­ய­ல­மைப்­பினை மீறி அர­சியல் சூழ்ச்­சியில் ஈடு­பட்ட அனை­வ­ரையும் தண்­டித்­துக்­காட்­டுங்கள் என மக்கள் விடு­தலை முன்­னணி சபையில் சவால் விடுத்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இர­சா­யன ஆயு­தங்கள் சம­வாய திருத்த சட்­ட­மூலம் மீதான விவா­தத்­தின்­போது உரை­யாற்­றிய ஜே.வி.பியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நலிந்த ஜய­திஸ்ஸ இதனைக் குறிப்­பிட்டார். அவர் உரை­யாற்­று­கையில் மேலும் கூறி­ய­தா­வது,

அமெ­ரிக்க பாது­காப்பு படை­யினர் இலங்­கையில் நினைத்த நேரத்தில் தமது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எந்த தடை­க­ளு­மின்றி அனு­மதி வழங்­கி­யது அப்­போ­தைய இலங்­கையின் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவே­யாகும். அமெ­ரிக்க பிர­ஜை­யான அவரும் அப்­போ­தைய அமெ­ரிக்­காவின் இலங்கை தூதுவர் ரொபேர்ட் ஒ பிளேக் இரு­வரும் செய்­து­கொண்ட “ஹக்ஸா” உடன்­ப­டிக்கை மூல­மா­கவே இதனை செய்­தனர். அன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் அப்­போது வாய் மூடிக்­கொண்டு இருந்­து­விட்டு இப்­போது உடன்­ப­டிக்கை குறித்து வாய்­கி­ழியப் பேசு­கின்­றனர். தேசப்­பற்­றா­ளர்கள் எனக் கூறிக்­கொள்ளும் இவர்கள் நேரத்­துக்கு நேரம் மாறு­கின்­றனர். தேசப்­பற்­றாளர் என்றால் எந்த நேரமும் ஒரே கொள்­கையில் இருக்க வேண்டும், காலத்­துக்கு காலம் மாறக் கூடாது எனக் குறிப்­பிட்ட போது ஒழுங்குப் பிரச்­சினை எழுப்­பிய வாசு­தேவ நாண­ய­கார எம்.பி., அப்­போதும் நான் இந்த உடன்­ப­டிக்­கையை எதிர்த்து ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கடிதம் மூலம் எனது எதிர்ப்பை தெரி­வித்தேன். மஹிந்த ராஜபக் ஷவும் இதனை அனு­ம­திக்க போவ­தில்லை இது வெறும் கட­தாசி மட்­டு­மே­யெனக் கூறினார் எனக் குறிப்­பிட்டார்.

இதன்­போது மீண்டும் கருத்து தெரி­வித்த நலிந்த ஜய­திஸ்ஸ, அப்­ப­டி­யாயின் அமைச்­ச­ர­வைக்கும், ஜனா­தி­ப­திக்கும் தெரி­யாது அவ­ரது சகோ­தரர் செய்­து­கொண்ட கள்ள உடன்­ப­டிக்கை தான் கடந்த  14 ஆண்­டு­க­ளாக இலங்­கையில் நடை­மு­றையில் இருந்­துள்­ளது. ஆகவே, இவ்­வா­றான திருட்டு உடன்­ப­டிக்கை ஒன்­றினை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யமை குறித்து எதிர்க்­கட்சித் தலை­வ­ராக உள்ள மஹிந்த ராஜபக் ஷ சபையில் விளக்­க­ம­ளிக்க வேண்டும். அதேபோல் இர­சா­யன ஆயு­தங்கள் குறித்த இந்த விவா­தத்­தின்­போது சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து வரும் இர­சா­யன ஆயு­தங்கள் குறித்து பேசு­கின்­றனர். ஆனால் கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக இலங்­கையில் மிகவும் மோச­மான இர­சா­யன ஆயு­த­மொன்று பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அதுதான் நிறை­வேற்று அதி­காரம். கடந்த நாற்­பது ஆண்­டு­கால நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு ஜனா­தி­ப­தி­யானார். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு அவர் செய்யும் நட­வ­டிக்­கைகள் கடந்த காலங்­களில் நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரிந்­து­விட்­டன.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாகக் கூறிய போதிலும் இப்­போதும் அவர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு மீண்டும் ஆட்­சியை கைப்­பற்­றவே முயற்­சித்து வரு­கின்றார். அதற்­காக அவரை கொலை செய்­வ­தாக கூறிய அணி­யு­ட­னேயே அவர் கூட்­ட­ணி­யையும் அமைத்­துக்­கொண்­டுள்ளார். அவ­ருடன் இருக்கும் சூழ்ச்சிக் கும்­பல்தான் இவை அனைத்­துக்­குமே கார­ண­மாகும்.

அர­சியல் யாப்பு தெரி­யாத ஜனா­தி­பதி ஒரு­வரை தொடர்ந்தும் அந்த அதி­கா­ரத்தில் வைத்­து­கொள்ள வேண்டுமா என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.

அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது என்பதை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. ஆகவே, அரசியலமைப்பினை மீறி அரசியல் சூழ்ச்சி செய்த அனைவரையும் அரசாங்கம் தண்டிக்க வேண்டும். முதுகெலும்புள்ள அரசாங்கம் என்றால் முதலில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.