இந்த வருடத்தில் தேர்தலை நடத்த தொடர்ச்சியாக அழுத்தம் வழங்க வேண்டும்

0 678

இந்த வரு­டத்தில் தேர்­த­லொன்­றினைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக பாரா­ளு­மன்­றத்­துக்­குள்ளும், வெளி­யிலும் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்­டத்தில் தெரி­வித்தார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கூட்டம் ஜனா­தி­ப­தியின் தலை­மையில் பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. அக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் அங்கு உரை­யாற்­று­கையில், ‘இந்த வருடம் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் அர­சாங்­க­மொன்­றினை நிறுவிக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும்’.

தற்­போது சுயா­தீன தொலைக்­காட்சி நிறு­வ­னத்தில் உரு­வா­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. சுயா­தீன தொலைக்­காட்சி நிறு­வன வளா­கத்­திற்குள் கலகம் அடக்கும் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டமை தொடர்­பாக விஷேட விசா­ர­ணை­யொன்று நடாத்­தப்­படும் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­த­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் உறுப்­பி­ன­ரொ­ருவர் தெரி­வித்தார்.

அரச நிறு­வ­னங்­களில் தற்­போது அர­சியல் பழி­வாங்­கல்கள் இடம்­பெ­று­வ­தாக கூட்­டத்தில் கலந்­து­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­டனர். இது தொடர்­பான விப­ரங்­களை கோரிய ஜனா­தி­பதி அவ்­வா­றான அர­சியல் பழி­வாங்­கல்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அறிக்­கைகள் விடும் போதும், கருத்­துகள் தெரி­விக்கும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் எதிர் தரப்புக்கு வாய்ப்பு ஏற்படும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கக் கூடாதென கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.