பிரிவினைவாதத்துக்கான சமஷ்டி அரசியலமைப்பை தடுத்துவிட்டோம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

0 469

ஐக்­கிய தேசியக் கட்சி தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­புடன்  கூட்டுச் சேர்ந்து நிறை­வேற்றிக் கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த பிரி­வி­னை­வாத  சமஷ்டி  அர­சி­ய­ல­மைப்­புக்கு நாம் தடை­யேற்­ப­டுத்­தி­விட்டோம். நாம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கூட்டுச் சேர்ந்­த­தா­லேயே இது சாத்­தி­யப்­பட்­டது.  இன்று அர­சாங்­கத்­துக்கு 2/3 பெரும்­பான்மை இல்லை. அதனை நாம் தகர்த்து விட்டோம் என எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

குரு­நாகல் வில்­கொ­டவில் அமைந்­துள்ள  ஸ்ரீலங்கா  பொது ஜன­பெ­ர­மு­னவில்  காரி­யா­ல­யத்தில் நடை­பெற்ற  ‘2019 ஆம் ஆண்டு வெற்­றிக்குத் தயா­ரா­குங்கள்’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான  கூட்­டத்­துக்கு பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ  அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, பிரி­வி­னை­வாத சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பின் மூலம்  வடக்­கையும், கிழக்­கையும் இணைப்­ப­தற்கு இந்த அர­சாங்கம்  முயற்­சிக்­கி­றது. சமஷ்டி அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி அதனை  நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கா­கவே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன்  இணைந்­துள்­ளது என்­றாலும்  புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு  அவர்­க­ளிடம் 2/3 பெரும்­பான்மை இல்லை. அதை நாம்  தகர்த்­தெ­றிந்­து­விட்டோம்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­திற்­கி­ருந்த  2/3 பெரும்­பான்­மையே எமக்கு சவா­லாக இருந்­தது. இந்த 2/3 பெரும்­பான்­மையை நாம் சிதைத்­தி­ருக்­கா­விட்டால் நாடு பிரிக்­கப்­பட்டு சமஷ்டி அர­சியல் யாப்பு நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்கும். நாடு துண்­டா­டப்­பட்­டி­ருக்கும். எமது இந்த நாட்டை ஒரு போதும்  எவ­ருக்கும் துண்­டாட முடி­யாது.  இது  ஜனநாயகமா? மாகாணசபை தேர்தல், பொதுத்தேர்தல்  மற்றும் ஜனாதிபதித்  தேர்தல் என்பன தாமதியாது உடன்  நடத்தப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.