அடிப்படை தகைமைகள் இருப்பின் பரீட்சைக்கு தோற்ற தடை கிடையாது

கல்வி அமைச்சர் அகில அறிவிப்பு

0 470

உயர் தர பரீட்சை பெறு­பே­று­களின் பிர­காரம் சர்­வ­தேச பாட­சாலை மாணவி ஒருவர் அகில இலங்கை மட்­டத்தில் கலை பிரிவின் முதலாம் இடத்தை பெற்­று­கொண்­டமை தொடர்­பாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்­துல குண­வர்­த­னவின் நிலைப்­பாட்டை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த விடயம் தொடர்­பாக அவர் தெரி­வித்த கருத்­துக்கு நான் மிகவும் வருந்­து­கின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

இசு­று­பா­யவில் அமைந்­துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

சர்­வ­தேச பாட­சாலை மாணவி ஒருவர் முத­லா­மி­டத்தை பெற்­றுக்­கொண்­டமை தொடர்­பாக பந்­துல குண­வர்­தன தெரி­வித்த கருத்தில் எந்­த­வொரு நியா­யமும் இல்லை. தற்­போ­தைய கல்வி அமைச்சர் என்ற வகையில் இவ்­வா­றான கருத்தை நான் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டேன்.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமும் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் பிர­க­ட­னத்தின் பிர­கா­ரமும் கல்வி பயில்­வ­தற்­கான உரி­மையை  நாம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். மாண­வர்­க­ளுக்கு கல்வி பயில்­வ­தற்­கான உரி­மையை உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். அடிப்­படை தகை­மைகள் இருப்பின் எந்த முறை­யிலும் பரீட்­சைக்குத் தோற்ற எவ­ருக்கும் எந்த தடையும் கிடை­யாது. சர்­வ­தேச பாட­சாலை மாண­வர்கள் தேசிய மட்ட பரீட்­சைக்கு தோற்­று­வதும் பெறு­பே­று­களின் பிர­காரம் முன்­னிலை வகிப்­பதும் இது முதற்­த­ட­வை­யல்ல.

அரச பாட­சா­லை­களில் கல்வி பயிலும் மாண­வர்­களின் கல்வி உரி­மையை பாது­காப்­ப­தற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­துடன் அரச பாட­சா­லை­களின் கல்வி பயி­லா­த­வர்­களின் கல்வி உரி­மை­யையும் பாது­காப்­ப­தற்கு நாம் முன்­னின்று செயற்­ப­டுவோம். இவ்­வா­றான நிலையில் பந்­துல குண­வர்­தன கருத்­தா­னது தற்­போது கல்வி பயிலும் மாண­வர்­க­ளுக்கு மத்­தியில் குழப்­ப­மான நிலை­மையை ஏற்­ப­டுத்தும்.

சர்­வ­தேச பாட­சாலை கல்வி அமைச்சின் கீழ் நிர்­வ­கிக்­க­ப­்படா­வி­டினும் அந்த பாட­சா­லை­களின் தரத்தை கண்­கா­ணிப்­ப­தற்கு சுயா­தீன சபை­யொன்றை நிறு­வி­யுள்ளோம். இந்தக் கண்­கா­ணிப்பின் போது சர்­வ­தேச பாட­சா­லை­களின் கற்றல் – கற்­பித்தல் முறைமை தொடர்­பா­கவும் பாட­சாலை வள மேம்­பா­டுகள் தொடர்­பா­கவும் ஆசி­ரிய வச­திகள் தொடர்­பா­கவும் கண்­கா­ணிப்­பு­களை கல்வி அமைச்சு முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அத்­துடன் சர்­வ­தேச பாட­சாலை நிறுவும் போது கல்வி அமைச்சின் அனு­ம­தியின் கீழ் நிறு­வு­வ­தற்­கான தேவை­யான சட்ட ஏற்­பா­டு­களை தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இதற்கு அப்பால் மாண­வர்­களின் கல்வி உரி­மையை பாது­காக்கும் நோக்கில் அரு­காமை பாட­சாலை சிறந்த பாட­சாலை வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. மேலும் பாட­சாலை சீரு­டைக்­கான வவுச்சர் தொகையிலும் அதிகரிப்பு செய்துள்ளோம். சுரக்சா காப்புறுதி விவகாரத்தில் காணப்பட்ட இழுபறி நிலையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.