வரவு – செலவு திட்டத்திற்கு முன்னர் சு.க.வினர் பலர் எம்முடன் இணைவர்

ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­விப்பு

0 600

மார்ச் மாதம் வரவு – செலவுத் திட்­டத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து 20இற்கும் அதி­க­மான உறுப்­பி­னர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்­து­கொண்டு  வரவு – செலவுத் திட்­டத்தை வெற்­றி­பெறச் செய்­வ­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­து­வார்கள் என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற சபை முதல்­வ­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் வரவு -– செலவுத் திட்­டத்­திற்குத் தயா­ராகி வரு­கின்ற நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் குறித்து வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியை வீழ்த்த வேண்­டு­மென்ற ஒரே நோக்­கத்தில் எம்­முடன் கைகோர்ப்­பது போன்று இணைந்து இறு­தியில் எம்­மையே நெருக்­க­டிக்கு தள்­ளி­யதை கடந்த காலத்தில் அவ­தா­னிக்க முடிந்­தது. எனினும், ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சந்­தர்ப்­பத்­திலும் மனம் தள­ராது மக்­களின் ஆணை­யையும் மீறாது ஜன­நா­யக ரீதியில் போராடும் சகல தரப்­பையும் இணைத்­துக்­கொண்டு கடந்­த­கால அர­சியல் சூழ்ச்­சி­க­ளி­லி­ருந்து வெற்றி பெற்றோம். அதற்­க­மை­யவே எம்மால் மீண்டும் அர­சாங்­கத்தை அமைத்­துக்­கொள்ள முடிந்­தது. ஆனால் சிலர் இன்றும் எம்மை வீழ்த்த வேண்­டு­மென்ற ஒரே நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கின்­றனர். கடந்­தாண்டு இறு­தியில் வரவு -– செலவுத் திட்­டத்தை நாம் சபையில் முன்­வைக்க எடுத்த முயற்­சி­களை ஜனா­தி­ப­தியின் அணி தோற்­க­டிக்க நினைத்­தனர். அதற்­காக எடுத்த முயற்­சி­களின் விளை­வா­கவே எம்மால் வரவு -–செலவுத் திட்­டத்தை சபையில் உரிய நேரத்தில் சமர்ப்­பிக்க முடி­யாது போனது. எனினும் இடைக்­கால கணக்­க­றிக்கை ஒன்­றினை முன்­வைத்து நெருக்­க­டி­களை சமா­ளிக்க எம்மால் முடிந்­துள்­ளது. எதிர்­வரும் மார்ச் மாதம் மீண்டும் முழு­மை­யான வரவு- –செலவுத் திட்­டத்தை முன்­வைக்கத் தயா­ராகி வரு­கின்றோம். எனினும் அதனை குழப்­பவும் திட்டம் தீட்­டப்­பட்டு வரு­கின்­றது.   அத்­துடன் இந்த நாட்டில் நீண்ட கால­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் தீர்­வு­க­ளுக்­கான முயற்­சி­களை எமது ஆட்சியில் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முழுமையான ஈடுபாடும் நோக்கமும் எமக்குள்ளது. அதற்கான முயற்சிகள் அரசியலமைப்பு ரீதியாகவும், அரசாங்கம் என்ற வகையில் அமைச்சுகளின்  ஊடாகவும் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.