இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் நான்கு கிளர்ச்சிக்காரர்கள் சுட்டுக் கொலை

0 599

கடந்த சனிக்­கி­ழமை இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்­மீரில் பாது­காப்புப் படை­யி­ன­ருடன் இடம்­பெற்ற துப்­பாக்கி மோதலில் குறைந்­தது நான்கு கிளர்ச்­சி­யா­ளர்கள் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். புல­னாய்வுத் தக­வ­லி­னை­ய­டுத்து இந்­திய இரா­ணு­வத்­தினர் புல்­வாமா மாவட்­டத்தின் ஹாஜின் பயீன் கிரா­மத்தில் தேடு­தலை ஆரம்­பித்­த­போதே இம்­மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

கிளர்ச்­சிக்­கா­ரர்கள் பாது­காப்புப் படை­யி­னரை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­த­தை­யை­டுத்து சுமார் நான்கு மணி­நேரம் இச்சண்டை நீடித்­த­தா­கவும் பதில் தாக்­கு­த­லை­ய­டுத்து நான்கு கிளர்ச்­சிக்­கா­ரர்­களின் உடல்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கவும் பாது­காப்புத் தரப்புப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார்.

மோதல் இடம்­பெ­று­வ­தாக தகவல் பர­வி­ய­தை­ய­டுத்து சம்­பவ இடத்தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஒன்று சேர்ந்­தனர். அவர்­களைக் கலைப்­ப­தற்­காக கண்ணீர் புகைக் குண்­டுகள் வீசப்­பட்­டன.

2016 ஆம் ஆண்டு பிர­பல கிளர்ச்சித் தலை­வ­ரான புர்ஹான் வானி கொல்­லப்­பட்­டதைத் தொடர்ந்து இந்­திய நிரு­வா­கத்­திற்­குட்­பட்ட காஷ்­மீரில் வன்­மு­றைகள் அதி­க­ரித்­துள்­ளன.

பிரச்­சி­னைக்­கு­ரிய ஹிமா­லய பிர­தே­சத்தில் ஆயுத மோதல்கள் கார­ண­மாக இவ்­வாண்டு 145 பொது­மக்கள் உட்­பட 528 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக காஷ்­மீரைத் தள­மா­கக்­கொண்ட மனித உரி­மைகள் அமைப்­பான ஜம்மு மற்றும் காஷ்மீர் சிவில் சமூகக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

2009 ஆம் ஆண்டின் பின்னர் அதிக இரத்தம் சிந்­தப்­பட்ட ஆண்­டாக இவ்­வாண்டு காணப்­ப­டு­கின்­றது எனவும் இது இந்­தி­யாவின் பிர­தான ஆளும் கட்­சி­யான பார­தீய ஜனதாக் கட்­சியின் அர­சியல் பல­வீனம் எனவும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சிவில் சமூகக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் குர்ராம் பர்வேஸ் தெரி­வித்தார்.

காஷ்­மீரின் பிரிக்­கப்­பட்ட ஆள்­புலப் பிர­தே­சத்­திற்கு இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் உரிமை கோரி வரு­கின்­றன. 1989 ஆம் ஆண்­டி­லி­ருந்து கிளர்ச்­சிக்­கா­ரர்கள் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். குறித்த பிர­தேசம் பாகிஸ்­தா­னுடன் இணைந்­தி­ருக்க வேண்டும் அல்­லது சுதந்­திர தேச­மாக இருக்க வேண்டும் என பெரும்­பா­லான காஷ்மீர் மக்கள் விரும்­பு­கின்­றனர்.

கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகின்றது. இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.