ஞானசார தேரரை விடுவிக்க உலமா சபை கோரவில்லை

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி கூறுகிறார்

0 686

சிறைத்­தண்­டனை அனு­ப­வித்­து­வரும் பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருடன் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா எந்­த­வித பேச்­சு­வார்த்­தையும் நடாத்­த­வில்லை. அவ­ரது விடு­தலை தொடர்பில் எந்தக் கோரிக்­கையும் விட­வில்லை. தவறு செய்­தவர் எவ­ராக இருந்­தாலும் நாட்டின் சட்­டப்­படி அவர் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உலமா சபை உறு­தி­யாக இருக்­கி­றது என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தி­நிதி பாஸில் பாரூக் உட்­பட, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிர­தி­நிதி, தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் சிறையில் ஞான­சார தேரரைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்­குகள் பல­வற்­றுக்கு நாமே முன்­நின்­றுள்ளோம், கார­ண­மாக இருந்­துள்ளோம். அவர் குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்­கப்­பட்டு தண்­டனை வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு அவ­ருடன் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைகள் நடாத்­தி­யுள்ளோம். குர்ஆன் மற்றும் இஸ்லாம் மீதான சந்­தே­கங்­க­ளுக்குத் தெளிவு வழங்­கி­யி­ருக்­கிறோம். அன்று அவ­ருடன் பேசி முஸ்லிம் சமூ­கத்தின் மீதான அவ­ரது சந்­தே­கங்­களைத் தீர்க்க வேண்­டு­மென்ற நிலைப்­பாடு இருந்­தது. ஆனால் இப்­போது அந்த நிலைப்­பாடு இல்லை. ஏனென்றால் இன்று அவர் ஒரு குற்­ற­வாளி. உலமா சபை அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து உட்­பட நான்கு பௌத்­த­பீட தலை­வர்­க­ளுடன் உற­வு­களைப் பேணி­வ­ரு­கி­றது. பெரும்­பான்மை சமூகம் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கொண்­டுள்ள சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்தும் ஈடு­பட்டு வரு­கி­றது.

ஞான­சார தேரரை சிறைச்­சா­லையில் பார்­வை­யிட்டு நலம் விசா­ரித்த உலமா சபையின் பிர­தி­நி­தியின் விஜயம் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜ­ய­மல்ல, அது அவ­ரது தனிப்­பட்ட விஜ­ய­மாகும். ஞான­சா­ர­தே­ர­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­மாறு உலமா சபை ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­க­வில்லை. எந்­தவோர் தீர்­மா­னமும் உலமா சபையின் நிறை­வேற்றுக் குழு­வி­லேயே மேற்­கொள்­ளப்­படும்.

குற்றம் செய்­த­வர்கள் எவ­ராக இருந்­தாலும் அவர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும். இதுவே உல­மா­ச­பையின் நிலைப்­பாடு என்றார். ஞான­சார தேரரை நலம் விசா­ரிக்க வெலிக்­கடைச் சிறைக்கு விஜயம் செய்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நிதி அஷ்ஷெய்க் பாஸில் பாரூக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது விஜயம் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நலம் விசாரிக்கவே சென்றோம். அவரது விடுதலை தொடர்பில் எந்த இடத்திலும் கலந்துரையாடவில்லை” என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.