மத ரீதியான வன்முறையை தூண்டுபவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

0 547

மாவ­னெல்லை பகு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் மத ரீதி­யாக முறுகல் நிலையை உரு­வாக்கும் சில மோச­மான  சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தை சீர்­கு­லைத்து மத ரீதி­யி­லான மோதல்­களை உரு­வாக்கும் இந்த நாச­கார செயல்­களின் பின்­ன­ணியில் இயங்கும் மோச­மான சக்­தி­களை அவ­ச­ர­மாக இனம் காண­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

மாவ­னெல்லைப் பகு­தியில் புத்தர் சிலைகள் சில நாச­கார சக்­தி­களால் சிதைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து ஏற்­பட்­டுள்ள பதற்ற நிலைமை தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,

புத்­தரின் சிலை­களை சேதப்­ப­டுத்தி இந்­நாட்டின் இன, மத  நல்­லி­ணக்­கத்­துக்கும், சமா­தா­னத்­திற்கும் சௌஜன்­யத்­திற்கும் வேட்டு வைத்­தி­ருக்கும் இந்த மோச­மான, அநா­க­ரிக செயற்­பாடு வன்­மை­யாக கண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும்.

மேலும் இந்த சம்­ப­வத்­தோடு தொடர்­பு­டைய தீய­சக்­தி­களின் பின்­னணி தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு ஆராய்ந்து சரி­யான தக­வல்­களை விரைவில் வெளி­யிட வேண்டும். இத்­த­கைய தீய­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்டு சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­பட வேண்டும்.

இனங்­க­ளுக்­கி­டையில் அமை­தி­யின்­மையை உரு­வாக்கி,  வன்­மு­றை­களைத் தூண்டும் இத்­த­கைய மோச­மான செயற்­பா­டு­களை இந்­நாட்டில் வாழும் எல்லா சமூ­கத்­தி­னரும் பக்­கச்­சார்­பின்றி  கண்­டிக்க முன்­வ­ர­வேண்டும்.

இதுவே இந்­நாட்டில் சமா­தா­னத்­தையும், நல்­லி­ணக்­கத்­தையும் நேசிக்கும் மக்­களின் வேண்­டு­த­லாகும். இன­வாதம் எந்த வடி­வத்தில், எந்த தளத்தில், எந்த இனத்­தி­லி­ருந்து உருப்­பெற்­றாலும் அதனை  எதிர்க்­கவும், தகர்த்­தெ­றி­யவும் நாம் வேறு­பா­டு­க­ளின்றி ஒன்­றி­ணைய வேண்டும்.

கடந்த காலங்­களில் திட்­ட­மிட்டு அரங்­கேற்­றப்­பட்ட இன­வாத நட­வ­டிக்­கைகள் எமக்கு பலத்த இழப்­பு­க­ளையும், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான விரி­சல்­க­ளையும் ஏற்­ப­டுத்­தின என்­பதை நாம் ஒரு­போதும் மறந்­து­வி­டக்­கூ­டாது.

நாட்டில் இன விரி­சல்­களை உரு­வாக்கி இலா­ப­ம­டையக் காத்­துக்­கொண்­டி­ருக்கும் குறித்த இன­வாத சக்­திகள், இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­றவை சிதைக்கும் செயற்­பா­டு­களை அடிக்­கடி அரங்­கேற்றி வரு­கின்­றன.

இத்­த­கைய செயற்­பா­டுகள் எமது நாட்டின் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­விற்கு விடுக்­கப்­படும் பாரிய சவா­லா­கவும் அச்­சு­றுத்­த­லா­கவும் இருக்­கின்­றன.

இந்த வன்­முறை தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரும் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் உண்­மை­யான  குற்­ற­வா­ளி­களை வெகு விரைவில் வெளிச்­சத்­திற்கு கொண்டு வரு­வார்கள் என்று எதிர்­பார்க்­கிறோம்.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்­களை மேற்­கொண்டும், முஸ்­லிம்­களின் சொத்­துக்­களை அழித்தும் அரங்­கேற்­றப்­பட்ட வன்­முறை நாடகம் இன்று பௌத்­தர்கள் புனி­த­மாக கருதும் புத்தர் சிலைகள் மீதான தாக்­கு­தல்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன.

இந்த இன­வாத செயற்­பா­டுகள் நாட்டின் முன்­னேற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெரும் முட்­டுக்­கட்­டையும் பின்னடைவுமென்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. எமது முன்னேற்றத்திற்கு என்றும் தடையாக இருக்கும் இந்தத் தீய இனவாத, மதவாத நிலைப்பாட்டிலிருந்து நாம் விடுபடவேண்டும்.

இலங்கையர் என்ற ரீதியில் பிற்போக்குவாதத்தை தோற்கடித்து, எமது நாடு எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுக்க முன்வரவேண்டும் என முஜிபுர் றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.