ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’

ஐ.நா. பலஸ்தீன அகதிகள் நிறுவனம் தெரிவிப்பு

0 81

எம்.ஐ.அப்துல் நஸார்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 45 பேர் கொல்­லப்­பட்­ட­தோடு தெற்கு காஸா நக­ர­மான ரபாவில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தங்­கி­யி­ருந்த கூடா­ரங்கள் மீதும் தாக்­குதல் மேற்­காள்­ளப்­பட்­டுள்­ளது எனவும், “ஏரா­ள­மானோர்” எரியும் கட்­டட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளனர் என பலஸ்­தீன சுகா­தார ஊழி­யர்கள் தெரி­வித்­துள்­ளனர். இறந்­த­வர்கள் மற்றும் காய­ம­டைந்­த­வர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளாவர் என காஸாவின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த மாத ஆரம்­பத்தில் இஸ்­ரேலின் ஊடு­ரு­வ­லுக்கு முன்னர் காஸாவின் மக்­களில் அரை­வா­சிக்கும் மேற்­பட்­ட­வர்கள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த ரபாவில் இஸ்­ரே­லிய இரா­ணுவத் தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு சர்­வ­தேச நீதி­மன்றம் உத்­த­ர­விட்டு இரண்டு நாட்­க­ளுக்குப் பின்னர் இத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் அப்­ப­கு­தியில் உள்­ளனர், பலர் வெளி­யே­றி­யுள்­ளனர்.

மிகப்­பெ­ரிய வான்­வழித் தாக்­குதல் நடந்த இடத்­தி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட ஒளிப்­ப­திவு காட்­சிகள் பாரிய அழிவைக் காட்­டின. இஸ்­ரேலின் இரா­ணுவம் இந்த தாக்­கு­தலை உறு­திப்­ப­டுத்­தி­ய­துடன், ஹமாஸ் அமைப்பின் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும், இரண்டு சிரேஷ்ட ஹமாஸ் போரா­ளி­களை கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தகவல் குறித்து விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கவும் அது கூறி­யுள்­ளது. பாது­காப்பு அமைச்சர் Yoav Gallant ஞாயிற்­றுக்­கி­ழமை ரபாவில் இருந்தார், அங்­குள்ள “நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்­து­வது” தொடர்பில் விளக்­கப்­பட்­ட­தாக அவ­ரது அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

ஐக்­கிய நாடு­களின் பலஸ்­தீன அக­திகள் அமைப்பு, UNRWA, திங்­கட்­கி­ழ­மை­யன்று காஸா பகு­தியின் தெற்கு முனையில் உள்ள ரபாவில் தஞ்சம் புகுந்த குடும்­பங்கள் மீதான தாக்­கு­தல்கள் பற்­றிய தக­வல்கள் “திகி­லூட்­டு­வ­தாகத்” தெரி­வித்­துள்­ளது.

“புக­லிடம் தேடும் குடும்­பங்கள் மீதான தொடர் தாக்­கு­தல்கள் பற்றி ரபா­வி­லி­ருந்து வெளி­வரும் தக­வல்கள் திகி­லூட்­டு­கின்­றன” என UNRWA X தளத்தில் குறிப்­பிட்­டுள்­ளது.

“தாக்­கு­தல்கள் கார­ண­மாக குழந்­தைகள் மற்றும் பெண்கள் உட்­பட பாரிய உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. காஸா பூமியின் நரகம். நேற்­றி­ரவு எடுக்­கப்­பட்ட படங்கள் அதற்கு மற்­று­மொரு சான்­றாகும்.” எனவும் தெரி­வித்­துள்­ளது.

இஸ்­ரே­லிய வான்­வழித் தாக்­கு­தல்­களில் குறைந்­தது 35 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டனர் எனவும் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு தங்­கு­வ­தற்­காக ஒதுக்­கப்­பட்ட தெற்கு காஸா பகுதி நக­ர­மான ரபாவில் ஒரு பகு­தியில் டசின் கணக்­கா­ன­வர்கள் காய­ம­டைந்­த­தாக பலஸ்­தீன சுகா­தார மற்றும் சிவில் அவ­சர சேவை அதி­கா­ரிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

தமது விமா­னப்­படை ரபாவில் உள்ள ஹமாஸ் வளா­கத்தை தாக்­கி­ய­தா­கவும், சம்­பவம் பரி­சீ­ல­னையில் இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தது.

நகர மையத்­தி­லி­ருந்து வட­மேற்கே இரண்டு கிலோ­மீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ள ரபாவின் தால் அல்-­சுல்தான் சுற்­றுப்­பு­றத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்­வதால் இறப்­புக்­களின் எண்­ணிக்கை உய­ரக்­கூடும் என பலஸ்­தீன செம்­பிறைச் சங்­கத்தின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

குறித்த இடம் இஸ்­ரேலால் “மனி­தா­பி­மான பகுதி” என குறிப்­பி­டப்­பட்­ட­தாக பலஸ்­தீன செம்­பிறைச் சங்கம் வலி­யு­றுத்­தி­யது. இந்த மாத ஆரம்­பத்தில் இஸ்­ரேலின் இரா­ணுவம் வெளி­யேற்­றத்­திற்கு உத்­த­ர­விட்ட பகு­தி­களில் அயல் பகு­திகள் சேர்க்­கப்­ப­ட­வில்லை.

ஏழு மாதங்­க­ளுக்கும் மேலாக இஸ்­ரேலின் பாரிய வான், கடல் மற்றும் தரை­வழித் தாக்­கு­த­லுக்குத் தாக்­குப்­பி­டிக்கும் திறனை வெளிப்­ப­டுத்தும் வித­மாக காஸாவில் இருந்து ஹமாஸ் ரொக்­கெட்­டு­களை சர­மா­ரி­யாக ஏவி­யதைத் தொடர்ந்து டெல் அவிவ் வரை வான்­வழித் தாக்­குதல் சைரன்கள் ஒலிக்­க­வி­டப்­பட்­ட­தோடு சில மணி­நே­ரங்­க­ளுக்குப் பின்னர் இத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

ஜன­வரி மாதத்­திற்குப் பின்னர் காஸா­வி­லி­ருந்து நடந்த முத­லா­வது நீண்ட தூர ரொக்கெட் தாக்­கு­தலில் உயி­ரி­ழப்­புகள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை. இத் தாக்­கு­தலை ஹமாஸின் இரா­ணுவப் பிரிவு பொறுப்­பேற்­றுள்­ளது. ரபா­வி­லி­ருந்து ஏவப்­பட்ட பின்னர் எட்டு எறி­க­ணைகள் இஸ்­ரே­லுக்குள் ஊடு­ருவிச் சென்­ற­தா­கவும், ‘குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான’ ஏவு­க­ணைகள் இடை­ம­றித்து, அழிக்­கப்­பட்­ட­தா­கவும் இஸ்­ரேலின் இரா­ணுவம் தெரி­வித்­தது.

இந்த மாத தொடக்­கத்தில் இஸ்­ரே­லியப் படைகள் பலஸ்­தீனப் பகுதி ரபா எல்லைக் கட­வையை கைப்­பற்­றிய பின்னர், எகிப்­து­ட­னான குறித்த எல்லைக் கட­வை­யினைத் தவிர்ப்­ப­தற்­கான புதிய ஒப்­பந்­தத்தின் கீழ் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெற்கு இஸ்­ரேலில் இருந்து டசின் கணக்­கான உதவி பார­ஊர்­திகள் காஸா­விற்குள் நுழைந்­தன. 126 உதவி பார­ஊர்­திகள் அரு­கி­லுள்ள கெரெம் ஷாலோம் எல்லைக் கடவை வழி­யாக நுழைந்­த­தாக இஸ்ரேல் இரா­ணுவம் தெரி­வித்­தது.

ஆனால் மனி­தா­பி­மான குழுக்கள் சண்­டையின் கார­ண­மாக மருத்­துவ பொருட்கள் உட்­பட உத­வி­களை கையேற்க முடி­யுமா என்­பது உட­ன­டி­யாகத் தெரி­ய­வில்லை. ரபாவில் இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் கார­ண­மாக இந்த கடவை ஊடாக போக்­கு­வ­ரத்­தினை மேற்­கொள்­வது பெரும்­பாலும் சாத்­தி­ய­மில்லை. பொது­வாக உத­வியைப் பெறு­வது மிகவும் ஆபத்­தா­னது என ஐக்­கிய நாடுகள் சபையின் முக­வ­ர­கங்கள் கூறு­கின்­றன. உலக சுகா­தார அமைப்பு கடந்த வாரம் ரபாவில் விரி­வாக்­கப்­பட்ட இஸ்­ரே­லிய ஊடு­ருவல் ‘பேர­ழிவு’ நிலை­யினை ஏற்­ப­டுத்தும் என தெரி­வித்­தி­ருந்­தது.

‘மனி­தா­பி­மான நட­வ­டிக்­கைகள் சரிவை நெருங்­கி­யுள்ள நிலையில், கெரெம் ஷாலோ­மிற்குள் நுழையும் மனி­தா­பி­மான பொருட்­களை எகிப்தில் இருந்து பாது­காப்­பாக எடுத்துச் செல்­லவும், வழங்­கவும் இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் உதவ வேண்டும்’ என ஐ.நா. தலைவர் அன்­டோ­னியோ குட்­ட­ரெஸின் ஊடகப் பேச்­சாளர் அறிக்­கை­யொன்றில் தெரி­வித்­துள்ளார்.

காஸா பகு­தியின் கட்­டுப்­பாட்டை பலஸ்­தீ­னி­யர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கும் வரை ரபா எல்லைக் கட­வையின் தனது பக்­கத்தை மீண்டும் திறக்க எகிப்து மறுப்புத் தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைட­னுக்கும் எகிப்­திய ஜனா­தி­பதி அப்தெல் பத்தாஹ் எல்-­சி­சிக்கும் இடை­யி­லான தொலை­பேசி உரை­யா­ட­லுக்குப் பின்னர், காஸாவின் முக்­கிய சரக்கு முனை­ய­மான கெரெம் ஷாலோம் வழி­யாக போக்­கு­வ­ரத்தை தற்­கா­லி­க­மாக திசை திருப்ப ஒப்­புக்­கொண்­டது.

எகிப்து திங்­க­ளன்று ‘இடம்­பெ­யர்ந்த மக்கள் மீது இஸ்­ரே­லிய படைகள் மேற்­கொண்ட திட்­ட­மிட்ட குண்­டு­வீச்சு தாக்­குதல்’ என எகிப்து இஸ்­ரே­லிய தாக்­கு­தலைக் கண்­டித்­துள்­ளது. ரபாவில் கூடா­ரங்கள் இருந்த குறைந்­தது 45 பேர் கொல்­லப்­பட்­ட­தாக காஸாவின் சிவில் பாது­காப்பு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
‘ரபாவில் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்­து­வது தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் (ICJ) உத்­த­ர­விட்­டுள்ள நட­வ­டிக்­கை­களை செயல்­ப­டுத்த’ எகிப்­திய வெளி­வி­வ­கார அமைச்சு அறிக்­கை­யொன்றை வெளி­யிட்டு இஸ்­ரே­லுக்கு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடை­யி­லான போரில் கிட்­டத்­தட்ட 36,000 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், காஸாவின் சுகா­தார அமைச்சின் கூற்­றுப்­படி, அதன் எண்­ணிக்­கையில் பொது­மக்­க­ளுக்கும் போரா­ளி­க­ளுக்கும் இடையில் வேறு­பாடு குறித்துக் காட்­டப்­ப­ட­வில்லை. போரா­ளிகள் மக்கள் நிறைந்த குடி­யி­ருப்பு பகு­தி­களில் செயல்­ப­டு­வதால், ஹமாஸ் அமைப்­பினர் மீது தாக்­குதல் நடத்­தும்­போது பொது­மக்கள் உயி­ரி­ழப்­ப­தாக இஸ்ரேல் தெரி­வித்­துள்­ளது.

காஸாவின் 2.3 மில்­லியன் மக்­களில் 80 சத­வீதம் பேர் தங்கள் வீடு­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர். கடு­மை­யான பட்­டினி பர­வ­லாக காணப்­ப­டு­வ­தோடு பிர­தே­சத்தின் சில பகு­திகள் பஞ்­சத்தை அனு­ப­வித்து வரு­வ­தாக ஐ.நா அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

ஹமாஸ் கடந்த வருடம் அக்­டோபர் 7 ஆம் திக­தின்று இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்­தி­யது. இதன்­போது பலஸ்­தீன போரா­ளிகள் சுமார் 1,200 பேரைக் கொன்­றனர், பெரும்­பாலும் பொது­மக்கள், மேலும் 250 பேரை பண­யக்­கை­தி­க­ளாகப் பிடித்துச் சென்­றனர். ஹமாஸ் தொடர்ந்தும் 100 பண­யக்­கை­தி­களை வைத்­தி­ருக்­கி­றது மற்றும் 30 பேர் கடந்த ஆண்டு போர் ­நிறுத்­தத்தின் போது விடு­விக்­கப்­பட்­டனர்.

ஹமாஸின் எஞ்­சி­யி­ருக்கும் படைப்­பி­ரி­வு­களை அகற்­றவும், காஸாவின் ஏனைய பகு­தி­களில் மீத­மா­க­வுள்ள போரா­ளிகள் மீது ‘முழு வெற்­றியை’ அடை­யவும் இஸ்ரேல் ரபாவைக் கைப்­பற்ற வேண்டும் என இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு தெரி­வித்­தி­ருந்தார்.

இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்­துள்ள மேற்குக் கரை­யிலும் இந்தப் போர் பதற்றத்தை அதி­க­ரித்­துள்­ளது. மேற்குக் கரையின் தெற்கு நக­ர­மான சயீர் அருகே 14 வயது சிறு­வனை இஸ்­ரே­லியப் படைகள் சுட்டுக் கொன்­ற­தாக பலஸ்­தீன அதி­கா­ரிகள் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர். பெய்ட் எயினுன் சந்­தியில் இஸ்­ரே­லியப் படை­களை கத்­தியால் குத்த முயன்ற பலஸ்­தீன ஆண் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக இஸ்ரேல் இரா­ணுவம் தெரி­வித்­துள்­ளது.

தெற்கு காஸா பெரும்­பாலும்
உத­வி­யி­லி­ருந்து துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது
மே 6 அன்று இஸ்ரேல் ரபாவில் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஊடு­ருவல் என்ற போர்­வையில் மேற்­கொண்ட தாக்­கு­தல்கள் கார­ண­மாக தெற்கு காஸா உத­வி­யி­லி­ருந்து பெரிதும் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் 1 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான பலஸ்­தீ­னி­யர்கள், ஏற்­க­னவே இடம்­பெ­யர்ந்த பலர், நக­ரத்தை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

ஏப்­ரலில் இஸ்­ரே­லிய தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஏழு உதவிப் பணி­யா­ளர்கள் கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து, உல­க­ளா­விய சீற்­றத்தின் கார­ண­மாக இஸ்ரேல் திறந்­து­விட்ட இரண்டு தரை­வழிப் பாதைகள் மூலம் வடக்கு காஸா உத­வி­களைப் பெறு­கி­றது.

அமெ­ரிக்­கா­வினால் கட்­ட­மைக்­கப்­பட்ட மிதக்கும் பாதை வழி­யாக, ஒரு சில டசின் உதவி வாக­னங்கள் தினமும் காஸாவிற்குள் நுழைகின்றன, இது அதிகாரிகள் எதிர்பார்த்த ஒரு நாளுக்கான 600 வாகனங்கள் என குறிப்பிடப்பட்டிருப்பினும் மிகக் குறைவான 150 வாகனங்களே வருவதாக உதவிக் குழுக்கள் கூறுகின்றன.

கிளர்ச்சி அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேலிய நபர் கைது செய்யப்பட்டார்
சிப்பாய் போல் உடையணிந்த ஒருவர் கலகத்தை ஏற்படுத்தும் விதமாக அச்சுறுத்தும் காணொளியை பரவவிட்ட சந்தேக நபரை ஒருவரை தடுத்து வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. போருக்குப் பிறகு பலஸ்தீனர்கள் காஸாவை ஆள வேண்டும் என்ற பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனையினை பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மறுத்துரைக்க தயாராக இருப்பதாகவும், நெதன்யாகுவுக்கு மட்டும் விசுவாசமாக இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இஸ்ரேலிய இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் ரியர் அட்ம் டேனியல் ஹகாரி, அந்த நபர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. பிரதமரின் அலுவலகம் அனைத்து வகையான இராணுவ கீழ்ப்படியாமையையும் கண்டித்து ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.