மட்டு. பள்ளிவாசல் வளாக மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என மன்றில் உத்தரவாதம்

0 189

மட்­டக்­க­ளப்பு ஜாமிஉஸ் ஸலாம் பள்­ளி­வா­சலுக்குச் சொந்­த­மான நூற்­றாண்­டுகள் பழை­மை­யான மரத்­தினை வெட்­டி­யமை தொடர்­பாக ஏலவே தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை வழக்கு கடந்த வாரம் உச்ச நீதி­மன்­றத்தில் மூன்று நீதி­ய­ர­சர்கள் முன்­னி­லையில் ஆத­ரிப்­பிற்கு எடுத்துக் கொள்ளப்­பட்டது.

பிர­தி­வா­தி­க­ளான வீதிப் போக்­கு­வ­ரத்து அதி­கார சபைக்­காக தோன்­றிய சிரேஷ்ட அரச சட்­டத்­த­ரணி பிர­தி­வா­தி­க­ளி­ட­மி­ருந்து மேலும் அறி­வு­றுத்­தல்கள் பெற வேண்டி இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு ஆத­ரிப்­பிற்கு வேறு ஒரு திக­தியைக் கோரினார்.

இந்­நி­லையில் வீதிப்­போக்­கு­வ­ரத்து அதி­கா­ர­ச­பையின் கிழக்கு மாகாண நிறை­வேற்றுப் பொறி­யி­ய­லா­ளரால் 14.05.2024 ஆம் திக­திய பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடி­தத்தில் குறித்த மரம் அமைந்­துள்ள வாக­னத்­த­ரிப்­பி­டத்தில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் பூச்­சா­டி­க­ளையும் இதர மரங்­க­ளையும் 21.05.2024 ஆம் திக­திக்கு முன்னர் அகற்­று­மாறும் அவை அகற்­றப்­ப­டா­விடின் சட்ட ஏற்­பாடு­களின் கீழ் தான் அகற்றப் போவ­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தமை நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இடைக்­காலத் தடை ஒன்று இல்­லா­விட்டால் பிரதிவாதிகள் குறிப்­பிட்ட இடத்தில் அத்­து­மீற வாய்ப்­பி­ருக்­கி­றது என தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து பிர­தி­வா­திகள் சார்பில் தோன்­றிய அரச சட்­டத்­த­ரணி அடுத்த திக­தியில் வழக்கு விசா­ர­ணைக்கு வரும் வரைக்கும் பிர­தி­வா­திகள் இருப்­பதை இருக்­கின்­ற­வாறே பேணு­வ­தாக நீதி­மன்­றிற்கு உத்­த­ர­வா­த­மொன்றை வழங்கி இருந்­தனர். குறிப்­பிட்ட உத்­த­ர­வா­த­மா­னது நீதி­மன்றில் பதிவு செய்­யப்­பட்­டது.

அந்த உத்­த­ர­வா­தத்தின் அடிப்­ப­டையில் வழக்கு எதிர்­வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பிர­தி­வா­திகள் சார்பில் ஆட்­சே­ப­னைக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி அஞ்ஜன, சட்டத்தரணி றாஸி முஹம்மத் ஆகியோரோடு அறிவுறுத்தல் சட்டத்தரணியாக சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.