பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே அறிவிப்பு

0 74

பலஸ்­தீ­னத்தை தனி நாடாக அங்­கீ­க­ரிப்­ப­தாக அயர்­லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகிய ஐரோப்­பிய நாடுகள் புதன்­கி­ழமை அறி­வித்­தன.

பலஸ்­தீன பிரச்­சி­னையில் இந்த அறி­விப்பு பெரிய திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­விடப் போவ­தில்லை என்­றாலும், 7 மாத கால காஸா போரில் இஸ்ரேல் நாளுக்கு நாள் சர்­வ­தேச அரங்கில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வது அதி­க­ரித்து வரு­வதை வெளிப்­ப­டுத்­து­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இந்த அறி­விப்பை முத­லா­வ­தாக வெளி­யிட்டு நோர்வே பிர­தமர் ஜோனஸ் கார்ஸ்டோர் கூறி­ய­தா­வது: பலஸ்­தீன தேசம் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டா­த­வரை மேற்கு ஆசி­யாவில் அமைதி ஏற்­ப­டாது. எனவே அந்தப் பகு­தியை தனி நாடாக அங்­கீ­க­ரிக்க முடிவு செய்­துள்ளோம் என்றார் அவர்.

அயர்­லாந்து பிர­தமர் சைமன் ஹாரிஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், ‘பலஸ்­தீ­னத்தை அங்­கீ­க­ரிக்க பிற நாடு­க­ளுடன் ஒருங்­கி­ணைந்து முடிவு செய்­துள்ளோம். வரும் 28-ஆம் திகதி இந்த முடிவு அமு­லுக்கு வரும். இதில் மேலும் சில நாடுகள் இணை­யக்­கூடும்’ என்றார்.

பலஸ்­தீ­னத்தை தனி நாடாக அங்­கீ­க­ரிக்கும் முடிவை ஸ்பெயின் நாடா­ளு­மன்­றத்தில் அறி­வித்த அந்த நாட்டு பிர­தமர் பெட்ரோ சன்ஷே, ‘இந்த முடிவு எந்த நாட்­டுக்கும் எதி­ரா­னது அல்ல. முக்­கி­ய­மாக, இஸ்ரேல் மக்­க­ளுக்கு எதி­ரா­னது அல்ல’ என்றார்.

மேலும், ஹமாஸ் அமைப்­பி­ன­ருக்கு எதி­ரான போர் ஏற்­பு­டை­ய­துதான் என்­றாலும், மேற்கு ஆசி­யாவில் நிரந்­தர அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான செயல்­திட்டம் எதுவும் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­கு­விடம் இல்லை என்று சன்ஷே கூறினார்.

இந்த 3 நாடு­களின் அறி­விப்பு பலஸ்­தீன கள­நி­ல­வ­ரத்தில் எந்த மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.

பலஸ்­தீ­னத்தின் கிழக்கு ஜெரு­ச­லேத்தை இஸ்ரேல் தங்­க­ளுடன் இணைத்­துக்­கொண்டு தங்­க­ளது தலை­ந­கரின் ஒரு பகு­தி­யாக அறி­வித்­துள்­ளது. பலஸ்­தீ­னத்தின் ஒரு பகு­தி­யான மேற்குக் கரையில் கணி­ச­மான பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துள்ள இஸ்ரேல், அங்கு 5 இலட்­சத்­துக்கும் மேலான யூதர்­களைக் குடி­ய­மர்த்­தி­யுள்­ளது. மேற்குக் கரை­ப­குதி இஸ்­ரேலின் அறி­விக்­கப்­ப­டாத இரா­ணுவ ஆட்­சியின் கீழ் உள்­ளது.

தற்­போது கடு­மை­யாக போர் நடந்­து­வரும் பலஸ்­தீ­னத்தின் மற்­றொரு பகு­தி­யான காஸாவில், ஹமாஸ் அமைப்­பினர் முற்­றிலும் ஒழிக்­கப்­பட்­டா­லும்­ அந்தப் பகு­தியில் தங்­க­ளது நாடுதான் பாது­காப்புக் கட்­டுப்­பாட்டை வைத்­தி­ருக்கும் என்று நெதன்­யாகு இப்­போதே கூறி­வ­ரு­கிறார்.

இந்தச் சூழலில், ஐரோப்­பிய நாடுகள் பலஸ்­தீ­னத்தை இறை­யாண்மை மிக்க தனி நாடாக அங்­கீ­க­ரிப்­பதால் தங்­க­ளது ஆக்­கி­ர­மிப்பில் உள்ள பகு­தி­களில் இருந்து இஸ்ரேல் படை­யி­னரை நெதன்­யாகு திரும்ப அழைக்கப் போவ­தில்லை.

இருந்­தாலும், பலஸ்­தீன பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வை எட்­டு­வ­தற்­கான பாதையை நோக்கி ஒரு படி முன்­னே­று­வ­தற்கு இந்த முடிவு பயன்­படும் என்று ஐரோப்­பிய கவுன்­சிலின் வெளி­வி­வ­காரத் துறையைச் சேர்ந்த ஹ்யூ லோவட் கூறினார்.

ஏற்­கெ­னவே, காஸா போர் விவ­கா­ரத்தில் இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, அவ­ரது பாது­காப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலன்ட், ஹமாஸ் தலை­வர்­க­ளான யேஹ்யா சின்வர், முக­மது டெய்ஃப், இஸ்­மாயில் ஹனியா ஆகி­யோ­ருக்கு எதி­ராக தி ஹேக் நக­ரி­லுள்ள சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் கைது உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்கு பிரான்ஸ், பெல்­ஜியம், ஸ்லோவாக்­கியா ஆகிய ஐரோப்­பிய நாடுகள் ஆத­ரவு தெரி­வித்து பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின.

இதன் மூலம், காஸாவில் அவர்கள் மனி­த­கு­லத்­துக்கு எதி­ரான குற்­றத்தில் ஈடு­பட்­ட­தாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் தலைமை வழக்கு அதி­காரி கரீம் கான் கூறி­யதை அந்த நாடுகள் அங்­கீ­க­ரித்­தன.

இந்த நிலையில், இஸ்­ரேலின் எதிர்ப்­பையும் மீறி பலஸ்­தீ­னத்தை தனி நாடாக அங்­கீ­க­ரிப்­ப­தாக மேலும் 3 நாடுகள் தற்­போது அறி­வித்­துள்­ளன.
இதன் மூலம், இஸ்­ரே­லுக்கும் ஹமாஸ் அமைப்­பி­ன­ருக்கும் இடையே கடந்த அக்­டோபர் 7-ஆம் திகதி முதல் நடை­பெற்­று­வரும் போரில், இஸ்­ரேலின் பாரம்­ப­ரியக் கூட்­டா­ளிகள் அந்த நாட்­டுக்கு எதி­ராகத் திரும்­பி­வ­ரு­வது வெளிப்­ப­டு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கி­றது.

தூது­வர்­களை மீள­ழைத்த இஸ்ரேல்
பலஸ்­தீ­னத்­துக்கு அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து, அயர்­லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகிய நாடு­க­ளி­லுள்ள தங்கள் நாட்டுத் தூது­வர்­களை இஸ்ரேல் திரும்ப அழைத்­துள்­ளது.

இது குறித்து வெளி­யு­றவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: கொலை­யிலும் பாலியல் தாக்­கு­த­லிலும் ஈடு­பட்­ட­தற்­காக ஹமாஸ் அமைப்­பி­ன­ருக்கு தங்­கப்­ப­தக்கம் வழங்­கிய நாடுகள் என்று அயர்­லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகி­யவை வர­லாற்றில் நினைவில் கொள்­ளப்­படும்.

இந்த அறி­விப்பு, இஸ்ரேல் பணயக் கைதி­களை விடு­விப்­ப­தற்­காக நடை­பெறும் பேச்­சு­வார்த்­தைக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்றார் அவர்.
எனினும், பலஸ்­தீன அதிபர் முக­மது அப்­பாஸும் ஹமாஸ் தலை­வர்­களும் இந்த மூன்று நாடு­களின் அறி­விப்பை வரவேற்றுள்ளனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.