யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை கவ­னிக்­கும் குழுவை தெரிவு செய்ய நேர்­முக பரீட்­சை

0 85

(றிப்தி அலி)
இம்­முறை ஹஜ் யாத்­தி­ரைக்­காக சென்­றுள்ள இலங்­கை­யர்­களின் நலன்­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய திணைக்­க­ளத்­தினால் அனுப்­பப்­ப­ட­வுள்ள இரண்டு ஆண் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் ஒரு பெண் உத்­தி­யோ­கத்­த­ரையும் தெரி­வு­செய்­வ­தற்­கான நேர்­முகப் பரீட்சை நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

மத விவ­கார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செய­லாளர், திறை­சே­ரியின் உயர் அதி­காரி மற்றும் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் ஆகியோர் அடங்­கிய குழுவே இந்த நேர்­முகப் பரீட்­சையை முன்­னெ­டுத்­துள்­ளது.

‘நேர்­முக பரீட்சை குழு­வினால் சிபா­ரிசு செய்­யப்­ப­டு­ப­வர்­களை மாத்­தி­ரமே ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிக்க அனுப்ப தீர்­மா­னித்­துள்ளோம்’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் திரு­மதி சதுரி பின்டோ தெரி­வித்தார்.

அத்­துடன் பெண் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஒரு பெண் உத்­தி­யோ­கத்தர் இந்த வருடம் கண்­டிப்­பாக அனுப்­பப்­ப­டுவார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

புனித ஹஜ் கட­மை­யினை ஏற்­க­னவே நிறை­வேற்­றிய சில அரச உத்­தி­யோ­கத்­தர்­களை இந்த வரு­டமும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிப்­ப­தற்­காக அழைத்துச் செல்ல அரச ஹஜ் குழு நட­வ­டிக்கை எடுத்­த­தை­ய­டுத்தே இவ்­வாறு நேர்­முகப் பரீட்­சையை நடாத்த தீர்­ம­ா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக திணைக்­கள வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

இதற்கு எதிர்ப்பு வெளி­யிட்டு குறித்த திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்­சிடம் முறைப்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

இலங்­கை­யி­லி­ருந்து செல்லும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிப்­ப­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் சில­ருக்கு திணைக்­கள பணிப்­பா­ளரின் சிபா­ரிசின் அடிப்­ப­டையில் வரு­டாந்தம் வாய்ப்பு வழங்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

அந்த அடிப்­ப­டையில் இந்த வரு­டமும் நான்கு பேரின் பெயர்கள் புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கார அமைச்­சிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. குறித்த பெயர்கள் இத்­தி­ணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் திரு­மதி சதுரி பின்­டோவின் ஊடாக அனுப்­பப்­ப­டாமல் ஹஜ் குழுவின் தலை­வ­ரினால் நேர­டி­யாக அமைச்­சிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. இதில் இரண்டு பேர் கடந்த முறை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிப்­ப­தற்­காக சவூதி அரே­பியா சென்­ற­துடன் ஹஜ் கட­மை­யி­னையும் நிறை­வேற்­றி­ய­வர்­க­ளாவர்.

இதே­வேளை, இந்த திணைக்­க­ளத்தில் 15 வரு­டங்­க­ளாக பணி­யாற்­று­கின்ற ஒருவர் மூன்­றா­வது தட­வை­யா­கவும், மூன்று வரு­டங்­க­ளாக கட­மை­யாற்­று­கின்ற ஒருவர் இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிப்­ப­தற்­கான இந்த வருட குழுவில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

பெண் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­புரி நட­வ­டிக்­கை­களை கவ­னிக்க ஒரு பெண் உத்­தி­யோ­கத்தர் செல்­வது வழ­மை­யாகும். கடந்த வருடம் போன்று இந்த வரு­டமும் பெண் உத்­தி­யோ­கத்தர் அரச ஹஜ் குழு­வினால் முன்­மொ­ழி­யப்­பட்ட குழுவில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரிய வரு­கி­றது. இந்­நி­லை­யி­லேயே அரச ஹஜ் குழு­வினால் முன்­மொ­ழி­யப்­பட்ட பெயர்ப் பட்டியலுக்கு எதிராக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்ப்பு வெளி­யிட்­ட­தை­யடுத்து, நேர்­முகப் பரீட்சை மூலம் பொருத்­த­மான உத்­தி­யோ­கத்­தர்­களை தெரிவு செய்ய நட­­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.