அனுராதபுரம் சாஹிரா கல்லூரி பரீட்சை மண்டபத்தில் மாணவ குழுக்கள் மோதல்

மாணவன் வைத்தியசாலையில்; தாயொருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை

0 131

(எப்.அய்னா)
க.பொ.த.சாதா­ரண தர பரீட்­சை­க­ளுக்­காக அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பரீட்சை மண்­டப வளா­கத்தில் இரு மாணவக் குழுக்­க­ளி­டையே மோதல் சம்­பவம் ஒன்று பதிவாகியுள்­ளது. இதனால் ஒரு மாணவன்  காய­ம­டைந்து அனு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனும­திக்­கப்பட்­டுள்ள நிலையில், இம்­மோ­தல்­க­ளி­டையே பரீட்சை வளா­கத்­துக்குள் புகுந்து மாணவர் ஒரு­வரை தாக்­கி­ய­தாக கூறி மாணவன் ஒரு­வனின் தாய் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அனு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த மோதல் நிலையால், அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியின் அதிபர் அறைக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர்.

அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூ­ரியின் மாணவக் குழு­வொன்­றுக்கும் கம்­மி­ரி­கஸ்­வெவ மனாருல் உலூம் முஸ்லிம் மகா வித்­தி­யா­லய மாணவக் குழு­வொன்­றுக்கும் இடையே இந்த மோதல் சம்­பவம் நடந்துள்­ள­தாக பொலிஸார் கூறினர்.
க.பொ. த. சாதா­ரண தர பரீட்சை ஆரம்­பித்­தது முதல் இவ்­விரு பாட­சாலை மாணவக் குழுக்­க­ளுக்கும் இடையே வாய்த்­தர்க்­கங்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்­துள்­ளன. இந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி இந் நிலைமை மோச­ம­டைந்து கைக­லப்­பாக மாறி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர். இதன்­போது பாட­சா­லைக்குள் அத்துமீறி­யுள்ள மாணவர் ஒரு­வரின் தாய், மாண­வர்கள் மீது தாக்­குதல் நடாத்­தி­யுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு முறை­யி­டப்பட்­டுள்­ளது. இதனால் காய­ம­டைந்த மாணவன் ஒருவன் பரீட்சை முடிந்­ததும் அம்­பி­யூலன்ஸ் ஊடாக அனு­ரா­த­புரம் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்தே, பாட­சா­லைக்குள் அத்­து­மீறி தாக்­குதல் நடாத்­தி­ய­தாக கூறப்­படும் தாய் கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

இந்த நிலை­மையை அடுத்து 13ஆம் திகதி அனு­ரா­த­புரம் சாஹிரா கல்­லூரி வளா­கத்தில் பதற்­ற­மான சூழல் ஒன்று நில­வி­யுள்ள நிலையில் மேல­திக பொலி­ஸாரும் அங்கு அனுப்­பப்பட்டு மோதல் நிலைமை தீவிரமடைவது தடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயவீர தலைமையிலான குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.