முடிவின்றி தொடரும் பிறை சர்ச்சை

0 130

Dr.PM அர்ஷாத் அஹமட்
MBBS MD PAED

ஒவ்­வொரு நோன்பு வரு­கின்ற போதும் பெருநாள் வரு­கின்ற போதும் பிறை தொடர்­பான சர்ச்­சைகள் வரு­வதும் அதன் பின்னர் அப்­ப­டியே, சோடா போத்தல் போல, பெருநாள் செல்­பி­யோடு தணிந்து போவதும் வழ­மை­யான ஒன்­றா­கவே இருக்­கின்­றது.

சர்­வ­தேச பிறை, பாரம்­ப­ரிய கணிப்பு (நுஜூம்), விஞ்­ஞான முறை­யான கணிப்பு, லோக்கல் பிறை என இந்த நான்கு முறை­மை­களில் ஒட்­டியும் வெட்­டியும் வாதங்கள் நிகழ்ந்து வரு­கின்­றன. அவர் அவர் தன் பக்க நியா­யங்­களை, ஆதா­ரங்­களை முன் வைத்து இஜ்­திஹாத் செய்து தங்கள் பிறை தான் சரி என்று வாதாடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். நிற்க.

பெருநாள் என்­பது ஒரு சமூ­கத்தின் ஒட்டு மொத்த கொண்­டாட்­ட­மாக இருப்­பதால், எதில் எந்த கருத்து சரி என்­ப­தையும் தாண்டி, யார் சொல்லும் பெரு­நாளை மக்கள் கொண்­டாட வேண்டும் என்­பது தான் மிக முக்­கி­ய­மான கேள்வி. இது தான் நாம் விடை தேட வேண்­டிய கேள்வி.

இலங்கை திரு­நாட்டைப் பொறுத்­த­வரை பிறைக் குழு, ஜம்­மி­யத்துல் உலமா, முஸ்லிம் சமய திணைக்­க­ளம் மற்றும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் இணைந்த கூட்­ட­மைப்பே வர­லாறு முழு­வதும் பெரு­நாளை தீர்­மா­னிக்கும் அதி­காரம் கொண்ட அமைப்­பாக இருந்து வரு­கி­றது. பெரும்­பான்மை மக்­களின் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட நிறு­வ­ன­மாக இருந்து வரு­கி­றது. இது தான் யதார்த்தம்.

ஆகவே பிறை தொடர்­பான கருத்து வேறு­பா­டு­களில் தங்­களின் நிலைப்­பாடு தான் சரி என்று வாதி­டு­ப­வர்கள் அந்த வாதத்தை முன் வைக்­கவும் தீர்வு தேடவும் வேண்­டிய ஒரே இடம் அந்த பிறைக் குழுதானே தவி­ர, பொது மக்கள் அல்ல. பொது மக்கள் வேண்­டு­மானால் மஹல்லா ரீதி­யாக, ஊர் ரீதி­யாக ஒரு அழுத்தம் கொடுக்கும் சக்­தி­யாக தொழிற்­ப­டலாம். அதற்­காக விழிப்­பு­ணர்வு ஊட்­டலாம். அவ்­வ­ளவு தான்.

ஆனால் இதற்கு மாற்­ற­மாக, இது தான் அளவு கோல், இது தான் எங்கள் நிலைப்­பாடு என்று அறி­விக்­கப்­பட்ட பின்னர், அதில் ஏற்­படும் குள­று­பா­டுகள், குழப்­ப­டிகள் எல்லாம் நேர­டி­யாக பொது­மக்­களை அவர்கள் சார்ந்­துள்ள ஊர்­களை மலி­னப்­ப­டுத்தும் கேள்­விக்கு உட்­ப­டுத்தும், அது­போ­லவே பிறைக் குழுவின் நம்­ப­கத்­தன்­மையை கேள்­விக்கு உட்­ப­டுத்தும். இது நிச்­ச­ய­மாக மக்களிடையே பாரிய விரி­சலை ஏற்­ப­டுத்தும் ஒன்­றா­கவே இருக்கும் என்­பது கண்­கூடு.

பிறையை வெற்றுக் கண்ணால் உள்­நாட்டில் காண­வேண்டும் என்­பது தான் நமது நாட்டின் பிறைக்­கு­ழுவின் ஏகோ­பித்த முடி­வாக, இஜ்­மா­வாக, ஏற்றுக் கொள்­ளப்­பட்ட நிய­மமாக இருந்தால், அந்த முடிவை நடை­மு­றையில் கொண்­டு­வரும் போது ஏற்­படும் ப்ரெக்­டி­க­லான சிக்­கல்­களை தீர்ப்­ப­தற்கு நாம் / பிறைக்­குழு என்ன செய்­தி­ருக்­கிறோம் என்­பது தான் நாம் விடை தேட வேண்­டிய கேள்வி. இது குறித்து நாம் என்ன காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­கள மேற்கொள்ள முடியும் என்­பதை கலந்­து­ரை­யா­டு­வதே இந்த பதிவு.

ஒவ்­வொரு பெரு­நா­ளிலும் எங்­காவது பிறை காண்­பதும், அதை மறுப்­பதும், பின்னர் மறுத்த அதே பிறையை ஏற்­றுக்­கொள்­வதும், சஹர் நேரத்தில் பெருநாள் அறி­விப்­பதும் வளர்ச்சி அடைந்த ஒரு நிறு­வ­னத்­திற்கு, 150 ஆண்­டுகள் பாரம்­ப­ரியம் கொண்ட ஒரு அமைப்­பிற்கு அழ­கல்ல.அது மக்கள் மத்­தியில் பிள­வையும் நம்­பிக்­கை­யீ­னத்­தையும் கொந்­த­ளிப்­பையும் இன்னும் இன்னும் அதி­க­ரிக்­குமே அன்றி வேறு இல்லை.

இது­வரை பிறை கண்­டதை மறுத்தல் Vs ஏற்றுக் கொள்­ளலில் சம்­பந்­தப்­பட்ட சர்ச்­சை­யான பிறை­களை வைத்து சில எடு­கோள்­களை கேள்­வி­க­ளாக முன்­வைத்து பதில்­களை தேட முடியும்.

1. இது­வரை நாட்டில் சர்ச்­சைக்கு உள்­ளான பிறைகள் எத்­தனை?
2. அவை எந்த எந்த இடங்­களில் நிகழ்ந்­துள்­ளன?
3. அந்த பிறைகள் ஏற்­றுக்­கொ­ள்ளப்­ப­டாமல் மறுக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் எவை? பின்னர் கடைசி நேரத்தில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் எவை?
4. இவை எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டாமல் இருக்க எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள் எவை?

மேற்­கு­றிப்­பிட்ட நான்கு கேள்­வி­க­ளுக்கும் பதில் தேடி, இது­வரை சர்ச்­சைக்­குள்­ளான பிறை நிகழ்­வு­களை வைத்து, நாம் துறைசார் நிபு­ணர்­களை கொண்டு ஏதா­வது கேஸ் ஸ்டடி செய்­தி­ருக்­கி­றோமா? அல்­லது பிறைக்­குழு செய்­தி­ருக்­கி­றதா? அப்­ப­டி­யானால் அதன் முடி­வுகள் தீர்­வுகள் என்ன?

எல்­லா­வற்­றையும் விட நான்­கா­வது கேள்­வி­க­ளுக்கும் விடை தேடு­வது மிக முக்­கி­ய­மா­னது. அதற்கு விடை தேடு­வது தான் நமது வேலை. நமது பிறைக்­குழு கட்­டாயம் செய்ய வேண்­டிய வேலை.

அதை விடுத்து வழ­மை­போ­லவே நாங்கள் சொல்­வது தான் சரி என்றால், எந்தப் பிறை சரி என்று நாம் விவா­தித்துக் கொண்­டி­ருந்தால் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு ஊரும் பிரதேசமும் தனித்தனியாக பிரிந்து பெருநாளையும் நோன்பையும் தீர்மானிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இது தான் கசப்பான உண்மை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.