“எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு தண்டனை வழங்குவோம்”

தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு

0 264

ஏ.ஆர்.ஏ.பரீல்

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் இனங்­க­ளுக்­கி­டையில் வேற்­று­மை­யினை உரு­வாக்கி இனக்­க­ல­வ­ரத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும். பெரும் எண்­ணிக்­கை­யி­லான உயிர்­களைப் பலி­யெ­டுத்து சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் தங்­க­ளது அர­சியல் இலக்­கினை எய்திக் கொள்­வ­தற்­காக ஒரு குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட சூழ்ச்­சி­யாகும். எமது ஆட்­சியில் இத்­தாக்­கு­தலின் பிர­தான சூத்­தி­ர­தாரி மற்றும் தாக்­கு­தலை திட்­ட­மிட்­ட­வர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்தி நீதியை நிலை­நாட்­டுவோம்’ என தேசிய மக்கள் சக்தி உறு­தி­பூண்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது. அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அடிப்­ப­டை­வாத குழு­வொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு 5 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. இத்­தாக்­கு­தலில் 273 பேர் பலி­யா­ன­துடன் 500க்கும் மேற்­பட்டோர் முழு­மை­யா­கவோ பகு­தி­ய­ள­விலோ அங்­க­வீ­ன­மா­னார்கள். இத்­தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்கள், காயங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்கள், சொத்­துக்­களை இழந்­த­வர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். தேசிய மக்கள் சக்­தியின் அர­சாங்­கத்தின் கீழ் உரிய முறையில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வது எமது முக்­கிய பொறுப்­பாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­தப்­ப­டு­வ­தற்கு முன்பு உரிய தக­வல்கள் கிடைத்­தி­ருந்தும் தாக்­கு­தலை தவிர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கா­த­வர்கள், தாக்­குதல் தொடர்பில் நடை­பெற்ற விசா­ர­ணை­களை திசை திருப்­பி­ய­வர்கள் மற்றும் சூழ்ச்­சிக்­கா­ரர்­களைப் பாது­காத்­த­வர்கள் ஆகி­யோரை இனங்­கண்டு அவர்­களை சட்­டத்­தின்முன் நிறுத்தி சம்­பந்­தப்­பட்ட பாது­காப்பு பிரிவின் அதி­கா­ரிகள் மற்றும் அர­ச அதி­கா­ரிகள், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்­ச­ரவை உட்­பட அனைத்து அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் எதி­ராக சட்டம் அமுல்­ப­டுத்­தப்­படும்.

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களின்படி அர­சி­யல்­வா­திகள் மற்றும் அரச அதி­கா­ரிகளுக்கு எதி­ரா­க எவ்­வித தரா­த­ரங்­களும் பாராமல் வழக்கு தொடர்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­தோடு எதிர்­கா­லத்தில் தேசிய மக்கள் சக்­தியின் அர­சாங்­கத்­தினால் இத்­தாக்­குதல் தொடர்­பாக விஷேட விசா­ரணை ஆணைக்­கு­ழு­வொன்று நிய­மிக்­கப்­படும். இந்த ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­களின் படியும் பொறுப்­புக்­கூற வேண்­டிய அர­சி­யல்­வா­திகள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடர்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

இந்த தாக்­குதல் தொடர்­பாக தற்­போது விசா­ர­ணையின் கீழ் உள்ள வழக்­கு­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்கி விசா­ரணை நடாத்தி தீர்ப்பு வழங்­கு­மாறு சம்­பந்­தப்­பட்ட பிரி­வு­க­ளிடம் கோரிக்கை விடுத்தல் மற்றும் அதற்­கான தேவை­யான வச­தி­களை வழங்கல் இந்த தாக்­கு­த­லுடன் தொடர்­பான தற்­போது நாட்­டி­லி­ருந்தும் தப்­பி­யோ­டி­யுள்ள அனைத்து குற்­ற­வா­ளி­க­ளையும் இந்­நாட்­டுக்குள் அழைத்து வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தல் . இவர்கள் மூலம் தாக்­கு­தலை திட்­ட­மிட்­ட­வர்கள், சூழ்ச்­சி­செய்­த­வர்கள் யார் என்­பதை விசா­ரணை மூலம் அறிந்து கொள்ளல், அவர்­களை தரா­தரம் பாராது தண்­ட­னைக்­குட்­ப­டுத்தல்,
இத்­தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு, பலி­யா­ன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு, சொத்­து­க­ளுக்கு உரிய நஷ்ட ஈடு முறை­மையை அறி­மு­கப்­ப­டுத்தல், பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் மன­நி­லையை சீராக்க திட்­ட­மொன்­றினை வகுத்தல்.

இத்­தாக்­குதல் தொடர்பில் நிய­மிக்­கப்­பட்ட விஷேட ஆணைக்­குழு மற்றும் வேறு விசா­ர­ணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் உள்ளன. அதற்கென நீதிமன்ற அதிகாரம் கொண்ட விஷேட விசாரணை ஆணைக்குழு வொன்றினை நியமித்து தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு குறுகிய காலத்துக்குள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்டனை பெற்றுக்கொடுக்­கப்படும் என தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.