ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகாரம் ; இஸ்ரேலுக்கு ஆதரவாக வீட்டோவை பயன்படுத்துவதை தவிர்த்தது அமெரிக்கா

0 129

எம்.ஐ.அப்துல் நஸார்

இதே­போன்ற முந்­தைய தீர்­மா­னங்­களை வீட்டோ செய்த அமெ­ரிக்கா, இம்­முறை வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ள­வில்லை. வீட்டோ அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக வாக்­க­ளிப்­பி­லி­ருந்து விலகிக் கொண்­டதன் மூலம், இத் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற அமெ­ரிக்கா உத­வி­யுள்­ளது. ஐ.நா. பாது­காப்பு சபையின் ஏனைய அனைத்து உறுப்பு நாடு­களும் ஆத­ர­வாக வாக்­க­ளித்த நிலையில், 14-0 என்ற முடிவு கிடைக்கப் பெற்­றதும் கூட்ட மண்­ட­பத்தில் பெரும் கர­கோ­ஷசம் எழுந்­தது.

இந்த தீர்­மா­னத்தில், புனித ரமழான் மாதத்தில் நீடித்த, நிலை­யான யுத்­தத்தை நிறுத்­து­வ­தற்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தோடு, ஹமாஸ் மற்றும் ஏனைய போராளிக் குழுக்­களால் ஒக்­டோபர் 7 ஆந் திகதி பிடிக்­கப்­பட்ட அனைத்து பண­யக்­கை­தி­க­ளையும் விடு­விக்க வேண்டும் எனவும் கோரப்­பட்­டுள்­ளது.

மோதலில் ஈடு­பட்­டுள்ள அனைத்துத் தரப்­பி­னரும் ‘தங்­களால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பாக சர்­வ­தேச சட்­டத்­திற்கு அமை­வாக செயற்­பட வேண்டும்’ என்றும் அதில் கோரப்­பட்­டுள்­ளது. ‘காஸாவின் அனைத்து பகு­தி­க­ளுக்கும் மனி­தா­பி­மான உத­விகள் சென்­ற­டையும் செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்­து­வதும், பொது­மக்­களின் பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வதும்’ என்ற அவ­சரத் தேவை­யையும் அத் தீர்­மானம் வலி­யு­றுத்­து­கி­றது. அத்­துடன் ‘மனி­தா­பி­மான உத­வி­களை வழங்­கு­வதில் காணப்­படும் அனைத்து தடை­க­ளையும் நீக்க வேண்டும்’ எனவும் அத் தீர்­மானம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இறுதி நிமி­டத்தில் ரஷ்யா யுத்த நிறுத்த கோரிக்கை தொடர்­பாக ‘நிரந்­தர’ என்ற வார்த்­தையை நீக்கி, அதற்கு பதி­லாக ‘நீடிக்கும்’ என்ற வார்த்­தையை உட்­சேர்ப்­ப­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­தது.

ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்­ஸியா அதனை பின்­வ­ரு­மாறு விளக்­கினார், ‘யுத்த நிறுத்தம் முடி­வ­டைந்­ததும், இஸ்ரேல் எந்த நேரத்­திலும் காஸா மீது தனது இரா­ணுவ நட­வ­டிக்­கையை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்கு இவ்­வா­றான பல­வீ­ன­மான வார்த்­தைகள் வழி­வ­குக்கும்’ எனத் தெரி­வித்து குறித்த பல­வீ­ன­மான வார்த்தைத் திருத்தம் தொடர்பில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் எனக் கோரினார், ஆனால் அது நிறை­வே­ற­வில்லை.

ஸ்லோவே­னியா, சுவிட்­ச­லாந்து, மொசாம்பிக், கயானா, ஈக்­வடோர், ஜப்பான் மற்றும் கொரியா குடி­ய­ரசு உட்­பட, தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 10 உறுப்பு நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன், அரபு முகாமின் தற்­போ­தைய உறுப்பு நாடான அல்­ஜீ­ரியா வெற்­றி­க­ர­மான இத் தீர்­மா­னத்தை வரைந்­தி­ருந்­தது.

எகிப்து, கட்டார் மற்றும் அமெ­ரிக்கா ஆகிய நாடுகள் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்கும், அனைத்து பண­யக்­கை­தி­க­ளையும் விடு­விப்­ப­தற்கும், காஸா­வுக்­கான மனி­தா­பி­மான உத­வியின் அளவை அதி­க­ரிப்­ப­தற்கும், மேற்­கொண்­டுள்ள இரா­ஜ­தந்­திர நட­வ­டிக்­கை­களை இந்த வரைவு பாராட்­டி­யுள்­ளது.

‘வொஷிங்டன் இந்த ‘கட்­டுப்­பா­டற்ற’ தீர்­மா­னத்தில் உள்ள சில முக்­கி­ய­மான நோக்­கங்­களை முழு­மை­யாக ஆத­ரிக்­கி­றது, ஆனால் ஹமாஸைக் கண்­டிக்கத் தவ­றி­யுள்­ளமை உட்­பட அனைத்து விட­யங்­க­ளிலும் உடன்­ப­ட­வில்லை’ என ஐ.நா.வுக்­கான அமெ­ரிக்க பெண் தூதுவர் லிண்டா தொமஸ்-­கி­ரீன்பீல்ட் தெரி­வித்தார்.

அமெ­ரிக்க பெண் தூதுவர் ‘கட்­டுப்­பா­டற்ற’ என்ற வார்த்­தையைப் பயன்­ப­டுத்­தி­ய­தற்கு பதி­ல­ளிக்கும் வகையில் ஐ.நா பேச்­சாளர் பர்ஹான் ஹக் கருத்து வெளி­யி­டு­ைக­யில் ‘பாது­காப்பு சபையின் அனைத்துத் தீர்­மா­னங்­களும் சர்­வ­தேச சட்­ட­மாகும்.’ எனத் தெரி­வித்தார்.

ஐ.நா.வுக்­கான இங்­கி­லாந்து நிரந்­தரப் பிர­தி­நிதி பார்­பரா உட்வோர்ட், பாது­காப்பு சபையின் அனைத்துத் தீர்­மா­னங்­களும் செயல்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும், அது ‘உட­ன­டி­யாக’ நடக்க வேண்டும்’ எனவும் தெரி­வித்தார்.

இத் தீர்­மானம் கட்­டுப்­பாட்­டிற்கு அப்­பாற்­பட்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கி­றதா இல்­லையா என ஐ.நா.வுக்­கான பாலஸ்­தீ­னத்தின் நிரந்­தர பார்­வை­யாளர் ரியாத் மன்­சூ­ரிடம் கேட்­ட­போது, ‘எங்­க­ளுக்கு ஒரு இடை­வெளி கொடுங்கள்’ எனத் தெரி­வித்தார். இஸ்­ரே­லிய அதி­கா­ரிகள் அதை செயல்­ப­டுத்தத் தவ­றினால், பாது­காப்பு கவுன்சில் ‘ 7 ஆம் அத்­தி­யா­யத்­தினை செயற்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு உள்­ளது’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

ஹமாஸ் தாம் தடுத்து வைத்­துள்ள பண­யக்­கை­தி­களை விடு­விக்கத் தயா­ராக இருந்­தி­ருந்தால், பல மாதங்­க­ளுக்கு முன்பே யுத்த நிறுத்தம் எட்­டப்­பட்­டி­ருக்கும் என தொமஸ்-­கி­ரீன்பீல்ட் தெரி­வித்தார்

‘மாறாக, ஹமாஸ் தொடர்ந்து அமை­தி­யாக இருக்­கின்­றது, வீதித் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது, காசா நக­ரங்­க­ளுக்கு கீழேயும் பொது­மக்­களின் உள்­கட்­ட­மைப்பின் கீழேயும் சுரங்­கங்­களில் இருந்­த­வாறு அச்­சு­றுத்­து­வ­தோடு பொது­மக்கள் மத்­தியில் மறைந்­தி­ருக்­கின்­றது,’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

‘ரமழான் மாதத்தில், நாம் அமை­திக்கு திரும்ப வேண்டும் என்­பதை இந்த தீர்­மானம் சரி­யாக ஏற்­றுக்­கொள்­கி­றது. மேசையில் உள்ள ஒப்­பந்­தத்தை ஏற்­றுக்­கொள்­வதன் மூலம் ஹமாஸ் அதைச் செய்ய முடியும். முத­லா­வது பண­யக்­கை­தியை விடு­வித்­த­வுடன் நிறுத்தம் ஆரம்­பிக்­க­கலாம். எனவே அதைச் செய்ய ஹமாஸ் மீது நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பதி­வொன்­றினை இட்­டுள்ள ஐ.நா பொதுச்­செ­ய­லாளர் அன்­டோ­னியோ குட்­டெரெஸ் இத் தீர்­மா­னத்தை உட­ன­டி­யாக செயல்­ப­டுத்த அழைப்பு விடுத்­துள்ளார். ‘அவ்­வாறு செய்யத் தவ­று­வது மன்­னிக்க முடி­யாத ஒன்­றாக மாறும்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

‘இறு­தி­யாக சர்­வ­தேச அமைதி மற்றும் பாது­காப்பைப் பேணு­வ­தற்குப் பொறுப்­பான முதன்மை அமைப்பு என்ற வகையில் ஐ.நா அதன் பொறுப்பை ஏற்­றுள்­ளது’ என ஐ.நா.வுக்­கான அல்­ஜீ­ரி­யாவின் நிரந்­தரப் பிர­தி­நி­தி­யான அமர் பெண்ட்­ஜாமா, சபைக்கு வாழ்த்து தெரி­வித்தார்.

‘பாலஸ்­தீன மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த இரத்­தக்­க­ளரி நீண்ட கால­மாக தொடர்­கி­றது. மிகக் கால­தா­ம­த­மாகும் முன்னர் இந்த இரத்­தக்­க­ள­ரிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­பது நமது கட­மை­யாகும்’ என அவர் மேலும் தெரி­வித்தார்.

ஸ்லோவே­னி­யாவின் தூதுவர் சாமுவேல் ஸ்போகர், திங்­கட்­கி­ழமை வாக்­கெ­டுப்பு தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில் ‘மத்­திய கிழக்கு மக்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான நாளாக இது இருக்கும். இது துப்­பாக்­கி­களை அமை­திப்­ப­டுத்­தவும், கொலை­களை நிறுத்­தவும், பண­யக்­கை­தி­களை விடு­விக்­கவும், மேலும் அமை­தியைக் கொண்­டு­வ­ரவும் உதவும்’ என நம்­பிக்கை தெரி­வித்தார். ‘காஸா பொது­மக்­களின் வேதனை மற்றும் துன்­பத்தின் முடிவின் ஆரம்­பத்தைக் குறிக்கும் நாளாக இது இருக்கும்’ எனவும் அவர் தெரி­வித்தார்.

‘காசாவில் பஞ்சம் தலை­வி­ரித்­தாடும் சந்­தர்ப்­பத்தில் யுத்த நிறுத்தம், பண­யக்­கை­தி­களை விடு­வித்தல் மற்றும் உத­வி­களை காஸா­வுக்கு அதி­க­ளவில் அனுப்பி வைப்­ப­தற்கு சபை கோரிக்கை விடுத்­துள்­ளமை பொருத்­த­மான நேரம், ஏனெனில் காஸா தொடர்பில் சபையின் மௌனம் காது கேட்­காத நிலை­யென குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளது’ என ஐ.நா.வுக்­கான பிரான்ஸின் நிரந்­தரப் பிர­தி­நிதி நிக்­கோலஸ் டி ரிவியர் தெரி­வித்தார்.

ஆனால், ‘இந்த நெருக்­கடி இன்னும் முடி­வ­டை­ய­வில்லை’ என்றும், நிரந்­தர யுத்த நிறுத்­தத்தை ஏற்­ப­டுத்­தவும், காஸாவை மீட்­கவும், ஸ்திரப்­ப­டுத்­தவும் உத­வு­வ­தற்கும், அனைத்­திற்கும் மேலாக பாது­காப்பு சபை ஒன்­று­பட்டு அர­சியல் செயல்­மு­றையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்­டும். உட­ன­டி­யாக செயலில் இறங்க வேண்டும்’ என்றும் அவர் தெரி­வித்தார்.

‘ஆறு மாதங்­களில், 40,000க்கும் அதி­க­மான பாலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு பல்­லா­யிரக் கணக்­கானோர் ஊன­முற்­று­முள்­ளனர். 2 மில்­லியன் மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர், மற்றும் பஞ்சம் ஏற்­பட்­டுள்ள நிலையில் இந்த சபை இறு­தி­யாக உட­னடி யுத்த நிறுத்­தத்தைக் கோரி­யுள்­ளது’ என தெரி­வித்த மன்சூர் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கண்­ணீரை அடக்­கு­வ­தற்குப் போரா­டினார்.

பாலஸ்­தீ­னர்கள் ‘தங்கள் வீடு­களில், தெருக்­களில், வைத்­தி­ய­சா­லை­களில், நோயாளர் காவு வண்­டி­களில், தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில், மற்றும் கூடா­ரங்­களில் கூட கொல்­லப்­பட்­டுள்­ளனர்.’ இது உட­ன­டி­யாக முடி­வுக்கு வர வேண்டும். போர்க்­குற்­றங்கள், மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்கள் மற்றும் இனப்­ப­டு­கொ­லைக்கு எந்த நியா­யமும் கற்­பிக்க முடி­யாது.

‘இத்­த­கைய குற்­றங்­க­ளுக்­கான கற்­பிக்­கப்­படும் நியா­யங்­களை ஏற்­றுக்­கொள்­வது மனித நேயத்தை குழி­தோண்டி புதைப்­ப­தற்கும், சர்­வ­தேச சட்­ட­வாட்­சியை மீள சீர் செய்ய முடி­யாத அள­விற்கு அழித்து விடு­வ­தற்கும் சம­மா­ன­தாகும் எனவும் மன்சூர் தெரி­வித்தார்.

‘இஸ்ரேல் நீண்ட கால­மாக சட்­டத்­திற்கு அப்­பாற்­பட்ட ஒரு நாடாகக் கரு­தப்­பட்­டது, அது ஒரு சட்­ட­வி­ரோத நாடாக செயல்­படும் போது இனி அதை மறைக்க வேண்­டி­ய­தில்லை’ என அவர் மேலும் தெரி­வித்தார். ‘இனச் சுத்­தி­க­ரிப்பு தொடக்கம் இனப்­ப­டு­கொலை வரை, இஸ்­ரேலின் செயல்­களால் எமக்கு வேதனை ஏற்­ப­டு­கி­றது, இதற்குக் காரணம் அவர்­க­ளது அட்டூழியங்களுக்கு தண்டனை வழங்கப்படாமையாகும்.’

ஐ.நா பாதுகாப்பு சபையில் காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கான தீhமானம் நிறைவேற்றப்பட்டமையினை உலகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இதனிடையே, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வொஷிங்டனுக்கு செல்லவிருந்த இஸ்ரேலிய தூதுக்குழுவின் விஜயத்தை இரத்து செய்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.