உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை ஐ.எஸ். நடத்­தி­ய­தாக கூறு­மாறு தொலை­பே­சியில் அழுத்தம் வழங்­கப்­பட்­டுள்­ள­து

கன­டாவில் தேசி­ய மக்­கள் சக்தி தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்­க

0 125

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூறும்படி தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­கு­தலைத் தவிர்த்துக் கொள்­வ­தற்­கான பல­மான தக­வல்கள் மறைக்கப்பட்­டுள்­ளன. இது­பற்றி விசா­ரணை நடாத்­தப்­பட வேண்டும் என தேசிய மக்கள் சக்­தியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநுர குமா­ர­தி­சா­நா­யக்க தெரி­வித்தார்.

கன­டாவில் இடம்­பெற்ற நிகழ்வில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் வின­வப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.
மேலும் சஹ்ரான் குழு­வி­னரின் முத­லா­வது தாக்­குதல் பொலிஸார் இரு­வரைக் கொலை செய்து அவர்­க­ளது ஆயு­தங்­களைக் கொள்­ளை­யிட்­ட­தாகும். இது தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு திணைக்­களம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. விசா­ரணை நடந்­து­கொண்­டி­ருக்கும் போது சில தினங்­களில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கொலை செய்­யப்­பட்ட காவ­ல­ர­ணுக்கு அருகில் கசெட் (ஒலி­நாடா) ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட கசெட் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்கள் மூலம் குற்­ற­வா­ளி­களைத் தேடும் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அந்­ந­ட­வ­டிக்கை மூலம் தமிழ் ஈழ விடு­தலைப் புலிக­ளின் முன்னாள் உறுப்­பினர் ஆனந்தன் இனம் காணப்­பட்டார். அவர் விடு­தலை செய்­யப்பட்ட சந்­தேக நப­ராவார். இத­னை­ய­டுத்து இக்­கொலையில் தமிழ் ஈழ விடு­தலைப் புலிகள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் இந்த கசெட்டை அங்கு வைத்­தவர் யார்? சஹ்ரான் குழு­வினர் மீதல்­லாது இக்­கொ­லையை திசை­தி­ருப்­பு­வ­தற்கு முயற்­சித்­தவர் யார் என்ற கேள்வி எழு­கி­றது.

அத்­தோடு தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் குண்­டினை வெடிக்கச் செய்ய வந்த ஜெமீல் எனும் நபர் அங்கு குண்­டினை வெடிக்கச் செய்­யாது தெஹி­வளை பகு­தியில் விடு­தி­யொன்­றுக்குச் செல்­கிறார். அங்கு சென்று தனது பையை அங்கு வைத்­து­விட்டு அரு­கி­லுள்ள பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­கிறார். பள்­ளியில் இவ­ரது நடத்தை தொடர்பில் சந்­தே­கப்­பட்டு அங்­கி­ருந்­த­வர்கள் கல­வ­ர­ம­டை­கி­றார்கள்.
அந்தப் பள்­ளியில் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக முன்னாள் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் கட­மையில் இருந்­துள்ளார். அவர் இவர் மீது சந்­தேகம் கொண்டு அவர் பற்றி விசா­ரிக்­கிறார். ஜெமீல் தனது அடை­யாள அட்.டையைக் காட்டி தன்­னைப்­பற்றி கூறி அங்­கி­ருந்தும் செல்­கிறார்.

இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட பள்­ளி­வாசல் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஜெமீலின் மனை­விக்கு தொலைபேசி அழைப்­பொன்­றி­னை எடுத்து ஜெமீலை பற்றி விசா­ரிக்­கிறார். அதற்கு சிறிது நேரத்­துக்கு முன்பு ஜெமீல் குண்­டினை வெடிக்கச் செய்து கொள்­கிறார்.

குண்டு வெடிக்கச் செய்­வ­தற்கு முன்பு பள்­ளி­வாசல் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரின் தொலை­பே­சிக்கு அழைப்­பொன்று வரு­கி­றது. அது உளவுப் பிரிவு உத்­தி­யோ­கத்­தரின் அழைப்­பாகும். அப்­ப­டி­யென்றால் குண்டு வெடிப்­ப­தற்கு முன்பு ஜெமீலின் வீட்­டுக்கு உளவு பிரிவு உத்­தி­யோ­கத்­தர்கள் சென்­றி­ருக்­கி­றார்கள்.. அவர்கள் எப்­படி, எதற்கு அங்கு சென்­றார்கள் என்ற கேள்வி எழு­கி­றது. குண்டு வெடிப்­ப­தற்கு முன்பு அவர்கள் ஜெமீலின் வீட்­டுக்குச் சென்­றி­ருக்­கி­றார்கள்.
அடுத்து இந்தத் தாக்­கு­தலை முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்­பேற்­க­வில்லை. சத்­தியம் செய்து அவர்கள் பொறுப்­பேற்கவில்லை. பின்பு சத்­தியம் செய்து கொண்ட புகைப்­ப­ட­மொன்று வெளி­யி­டப்­பட்­டது.

புகைப்­படம் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்பு மாத்­தளைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறிய சஹ்ரான் மலே­சி­யாவில் இருந்த ஒரு­வ­ருடன் தொடர்பு கொண்டு தாக்­கு­தலை பொறுப்­பேற்கும் படி வேண்­டினார். ஆனால் அவர் பொறுப்­பேற்­க­வில்லை. அதன் பின்பே சஹ்ரான் குழு­வினர் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்ட புகைப்­படம் வெளி­யி­டப்­பட்­டது.

இத்­தாக்­குதல் ஐ.எஸ்.ஐ.எஸ்­ஸினால் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூறும்­படி தொலை­பேசி மூலம் தொடர்­பு­கொண்டு அழுத்தம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு சிறிய சஹ்­ரா­னுக்கு தொலை­பேசி மூலம் அழுத்­தம் கொ­டுத்­தது யார்? அறிக்­கையில் யார் கூறி­யது என்று உள்­ளது. ஆனால் நான் அத­னைக் கூற­வி­ரும்­ப­வில்லை.

தாக்­குதல் தொடர்­பான தக­வல்கள் ஏப்ரல் 4,8,16,20 ஆம் திக­தி­களில் கிடைத்­துள்­ளன. தாக்­கு­த­லன்று காலை 7 மணிக்கு தகவல் கிடைத்­துள்­ளது. தாக்­குதல் ஆல­யங்கள் மீதும் ஹோட்­டல்கள் மீதும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ளது. மிகவும் நெருங்­கிய சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்தே இத்­த­க­வல்கள் கிடைத்­துள்­ளன.ஆனால் தாக்­கு­தலைத் தடை­செய்­வ­தற்­கான தக­வல்கள் கிடைக்­க­வில்லை.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள கடை­யொன்றில் பாத­ணிகள் மற்றும் பேக்­குகள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­த­க­வல்கள் கிடைக்­க­வில்லை. தகவல் கிடைத்­தி­ருந்தால் தாக்­கு­தலைத் தடுத்­தி­ருக்க முடியும்.

பாணந்­து­றையில் உள்ள விடு­தி­யொன்றில் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுக்­கான குண்­டுகள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கி­றது. அத்­தோடு பாணந்­துறை பகு­தியில் வீடொன்று வாட­கைக்கு எடுக்­கப்­ப­டு­கி­றது. வெடி­ம­ருந்­துகள் பாணந்­துறை வீட்­டிலேயே தயார் செய்­யப்­ப­டு­கி­றது. இது தொடர்­பான தக­வல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் குண்­டுத்­தாக்­கு­தல்கள் நடை­பெ­றாது தடுத்­தி­ருக்­கலாம்.

ஆல­யங்கள் மீதும் ஹோட்­டல்கள் மீதும் இன்று தாக்­குதல் நடத்­தப்­ப­ட­வுள்­ளன என்ற தக­வல்கள் கிட்­டி­யுள்­ளன. ஆனால் தாக்­கு­தல்­களை தடுத்து நிறுத்தும் வகை­யி­லான தக­வல்கள் வழங்­கப்­ப­ட­வில்லை. தாக்­கு­தல்­க­ளுக்­கான தயார் நிலை தக­வல்கள் வழங்­கப்­ப­டா­தி­ருந்­துள்­ளது. அவ்­வா­றான தக­வல்கள் வழங்­கப்­பட்டால் தாக்­குதல் நிறுத்­தப்­பட்டு விடும் என்­பதால் வழங்­கப்­ப­ட­வில்­லையா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் சூத்­தி­ர­தா­ரி­களை தனக்குத் தெரியும் என மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார். தாக்­குதல் நடந்­த­போது அவர் ஜனா­தி­ப­தி­யா­கவும், பாது­காப்பு அமைச்­ச­ரா­கவும் பதவி வகித்­தவர்.

தாக்­கு­தலின் பின்பு 7 மாத காலம் பத­வியில் இருந்தார். மக்கள் தங்­க­ளது பாது­காப்­பினை அவ­ரிடம் பொறுப்­பாக்­கி­யி­ருந்­தனர். மக்கள் ஆணை மூலம் இப்­பொ­றுப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதனால் மக்­களின் பாது­காப்­புக்கு அவர்தான் பொறுப்­புக்­கூற வேண்டும்.

ஜனா­தி­ப­தி­யான அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்பின் மூலம் வழங்­கப்­பட்­டி­ருந்த பொறுப்­பி­லி­ருந்தும் தவ­றி­ய­மைக்கு உயர் நீதி­மன்றம் அவ­ருக்கு 100 மில்­லியன் ரூபா நஷ்ட ஈடு செலுத்­து­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­தது. உயர் நீதி­மன்றம் அவரை குற்­ற­வா­ளி­யாகக் கண்டே இந்தத் தீர்ப்­பினை வழங்­கி­யி­ருந்­தது.
ஆனால் அவர் தனக்கு சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பது தெரியும் என்று இப்­போது கூறு­கிறார். தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ளது என்­கிறார்.

அவ­ரது உயிர் மாத்­திரம் தான் உயிரா? 265 பேர் தாக்­கு­தலில் பலி­யா­னார்கள். 500க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்­குள்­ளா­னார்கள். பலி­யா­ன­வர்­களை விட காயங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்­களால் மாத்­திரம் இந்த பாரிய குற்றச் செயலை மதிப்­பிட முடி­யாது. கணக்­கிட முடியாது.

தாக்­குதல் கார­ண­மாக சமூ­கங்கள் இரண்­டாகப் பிள­வு­பட்­டது. முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் சந்­தேகம் அதி­க­ரித்­தது. முஸ்லிம் மக்­க­ளுக்கு மறைந்து வாழ வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. முஸ்லிம் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வெளியில் இறங்க முடி­யாமற் போனது. இது சமூக குற்றமாகும்.
இப்போது மைத்திரி கூறுகிறார் தனக்குத் தெரியும் என்று. என்ன மனிதர்கள் இவர்கள். ஜனாதிபதியை விடுவோம். சாதாரண பிரஜை ஒருவருக்கு இவ்வாறான தாக்குதல் இடம்பெற்ற பின்பு தனக்குத் தெரியும் என்று கூற முடியுமா?

மைத்திரி கூறுகிறார் தனக்குத் தெரியும். எனக்கு ஏதும் நடந்துவிடும் என்று பயப்படுகிறேன் என்கிறார். அதனால் மைத்திரியை முழுமையாக விசாரிக்க வேண்டும். இத்தாக்குதல் தொடர்பான உரிய விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை நீதிமன்றில் நிறுத்துவோம். குறிப்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த விசாரணைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்கள். அவர்களில் முக்கிய பிரதான அதிகாரிகள் சிலர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்கள் என்­றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.