ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.: உக்ரைனும் உதவியதா?

0 55

ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோவில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இசை நிகழ்ச்சி நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அரங்கில் பயங்­க­ர­வா­திகள் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் பலி­யானோர் எண்­ணிக்கை 137 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு இந்தத் தாக்­கு­த­லுக்கு பொறுப்­பேற்­றுள்­ளது. இருப்­பினும், அதன் நம்­ப­கத்­தன்மை இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டி­ன் இந்தத் தாக்­கு­தலை ‘காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான பயங்­க­ர­வாதத் தாக்­குதல்’ என்று விவ­ரித்­துள்ளார். கொலை­யா­ளி­களை இரண்டாம் உலகப் போரின் நாஜிக்­க­ளுடன் ஒப்­பிட்டுப் பேசிய அவர், ரஷ்ய மக்­க­ளு­டைய ஒற்­று­மையின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது என்றார்.

ரஷ்­யாவில் அண்­மையில் நடை­பெற்ற அதிபர் தேர்­தலில் விளா­டிமிர் புட்­டின் அமோக வெற்றி பெற்றார். 200 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்­சி­யாக 3-வது முறை­யாக அதி­ப­ராகி ஸ்டாலினின் சாத­னையை முறி­ய­டித்­தி­ருந்தார். இந்­நி­லையில், ரஷ்­யாவில் சமீப காலங்­களில் நடந்த மிக மோச­மான பயங்­க­ர­வாத தாக்­கு­த­லாக இது அறி­யப்­ப­டு­கி­றது.

மொஸ்­கோவின் மேற்குப் பகு­தியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6,200 பேர் அம­ரக்­கூ­டிய பிரம்­மாண்ட இசை­ய­ரங்­கில்தான் இந்தத் தாக்­குதல் நடந்­துள்­ளது. சம்­ப­வத்­தின்­போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழு­வான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது திடீ­ரென துப்­பாக்கிக் குண்­டுகள் பாய, பலர் சரிந்து விழுந்­தனர். துப்­பாக்கிச் சூடு நடத்­தி­யது மட்­டு­மல்­லாது அரங்­குக்கு பயங்­க­ர­வா­திகள் தீ வைத்தும் சென்­றனர். உட­ன­டி­யாக தக­வ­ல­றிந்த காவல், தீய­ணைப்பு, பாது­காப்புப் படை­யினர் சம்­பவ இடத்­துக்கு விரைந்­து­ வந்­தனர். இந்தச் சம்­ப­வத்தில் இது­வரை 137 பேர் பலி­யா­கினர். 180-க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர். இந்தத் தாக்­கு­தலில் கட்­ட­டத்தின் பெரும்­ப­குதி தீயில் எரிந்­தது மட்­டு­மின்றி, மேற்­கூ­ரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்­தது.

அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு கவுன்சில் செய்தித் தொடர்­பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறு­கையில், “இம்­மாதத் தொடக்­கத்­தி­லேயே மொஸ்­கோவில் ஒரு திட்­ட­மிட்ட தாக்­குதல் நடத்த சதி செய்­யப்­ப­டு­வ­தா­கவும், குறிப்­பாக இசை நிகழ்ச்­சியை குறி­வைத்து சதி செய்­யப்­ப­டு­வ­தா­கவும் ரஷ்ய அதி­கா­ரி­க­ளுக்கு அமெ­ரிக்க அரசு தகவல் அளித்­தது. தீவி­ர­வாத சதிச் செயல்­களைப் பற்றி தகவல் கிடைத்தால் அதை நாடு­க­ளுடன் பகிர்­வதை கட­மை­யாகக் கொண்டு அமெ­ரிக்கா செயல்­பட்டு வரு­கி­றது. அதிபர் ஜோ பைடனின் உத்­த­ர­வின்­படி இத்­த­கைய தக­வல்­களை அமெ­ரிக்கா பகிர்ந்து வரு­கி­றது. அதன்­ப­டியே ரஷ்ய அதி­கா­ரி­க­ளுக்கும் நாங்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தோம்” என்றார்.

அதேபோல், இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக ஐ .எஸ் அமைப்பு பொறுப்­பேற்­றுள்­ளது நம்­ப­க­மா­ன­துதான் என்றும் அமெ­ரிக்க உயர் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

ரஷ்­யாவில் ஐ .எஸ் அமைப்பு கடந்த சில வாரங்­க­ளா­கவே பர­ப­ரப்­பாக சதி வேலை­களை அரங்­கேற்ற முயற்­சித்து வந்­தது தெரிய வந்­துள்­ளது. மார்ச் 7ஆம் திகதி ரஷ்­யாவில் உள்ள யூத வழி­பாட்டுத் தளத்தில் நடக்­க­வி­ருந்த தாக்­கு­தலை உளவுத் துறை முறி­ய­டித்­தது. அதற்கு சில நாட்­க­ளுக்கும் முன்­ன­தா­கத்தான் ரஷ்ய பாது­காப்புப் படை ஐ .எஸ் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை சுட்டு வீழ்த்­தி­யது. இந்­நி­லையில், வெள்­ளிக்­கி­ழமை இந்த கோரத் தாக்­குதல் நடந்­துள்­ளது.

இதற்­கி­டையில், ரஷ்ய பாது­காப்பு கவுன்­சிலின் தலைவர் டிமிட்ரி மெத்­வதேவ் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் உக்ரைன் சதி இருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். ஆனால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்­கியின் ஆலோ­சகர் மிகைலோ போடோ­லியாக் இந்தக் குற்­றச்­சாட்டை திட்­ட­வட்­ட­மாக மறுத்­துள்ளார். உக்ரைன் ஒரு­போதும் இது போன்ற பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை ஊக்­கு­விக்­காது என்று அவர் தெரி­வித்­துள்ளார்.

இஸ்­லா­மிய அரசு எனப்­படும் ஐ .எஸ் அமைப்பு ஓர் அறிக்­கையின் மூலம் தாக்­கு­த­லுக்குத் தாங்கள் பொறுப்­பேற்­ப­தாகக் கூறி­யுள்­ளது.

மொஸ்­கோவில் ‘பெரிய கூட்­டங்­களை’ குறி­வைத்து தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தாக அமெ­ரிக்கா அப்­போது கூறி­யி­ருந்­தது. இருப்­பினும் அமெ­ரிக்க உள­வுத்­துறை அளித்த தக­வலில் போது­மான, நம்­ப­க­மான விவ­ரங்கள் இல்லை என்று ரஷ்ய அதி­கா­ரிகள் புகார் கூறி­யுள்­ளனர். தங்­க­ளுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என யுக்ரேன் உட­ன­டி­யாக மறுத்­தது. போர்க்­க­ளத்தில் மட்­டுமே நாங்கள் தாக்­குவோம் என்று அது கூறி­யது.

ஆனால் ரஷ்­யாவின் எஃப்.எஸ்.பி பாது­காப்பு முகமை, தாக்­கு­தலில் ஈடு­பட்ட குற்­ற­வா­ளிகள் யுக்­ரேனில் இருந்து ரஷ்­யாவை கடக்க முயன்­ற­தா­கவும், யுக்­ரேனில் அவர்­க­ளுக்கு ‘வலு­வான தொடர்­புகள்’ இருப்­ப­தா­கவும் கூறி­யது. தாக்­கு­தலில் நேர­டி­யாகத் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் நான்கு பேர் உட்­படப் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்றும் எப்.எஸ்.பி கூறு­கி­றது.

தாக்­குதல் நடை­பெற்ற 14 மணி நேரத்­துக்கு பின்பு, மொஸ்­கோ­விற்கு தென்­மேற்கு 400 கிலோ­மீட்டர் தொலைவில் உள்ள பிரை­யன்ஸ்க்கில் வைத்து நால்­வரும் கைது செய்­யப்­பட்­ட­தாக ரஷ்­யாவின் பெடரல் பாது­காப்பு சேவை தெரி­வித்­தது.

கைது செய்­யப்­பட்­டுள்ள 4 சந்­தேக நபர்­கள்

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்­பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “துர­திர்ஷ்­ட­வ­ச­மாக எந்த நக­ரமும், எந்த நாடும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலில் இருந்து முற்­றிலும் விடு­பட முடி­யாது என்­பதை இந்த துப்­பாக்கிச் சூடு உல­குக்கு காட்­டு­கி­றது. ரஷ்­யாவின் உள­வுத்­துறை நாட்டைக் காக்க அய­ராது உழைத்­தது” என தெரி­வித்­துள்ளார்.

பயங்­க­ர­வாத இயக்­கங்கள் பற்­றிய ஆராய்ச்­சி­யா­ள­ரான ரிக்­கார்டோ வால்லே, “மார்ச் 2ம் திகதியே ரஷ்யா சுதா­க­ரித்து இருக்க வேண்டும். அப்­படி செய்­யா­த­தால்தான் இவ்­வ­ளவு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது” என்றார்.

சர்­வ­தேச அர­சியல் நோக்­கர்கள், “இஸ்­லா­மிய தீவி­ர­வா­திகள் மீது ரஷ்­யாவின் உளவு அமைப்பு கண் வைத்­தி­ருக்­கி­றது. ஆனால் அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கத்­திய நாடு­க­ளுடன் மோதல் போக்கை கடைப்­பி­டித்து வரு­கி­றது.

இந்த சூழ­லில்தான் அமெ­ரிக்கா வழங்­கிய எச்­ச­ரிப்பை புட்­டின் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. என­வேதான் அவர்­களின் உளவு அமைப்பும் அதில் பெரி­தாக கவனம் செலுத்­த­வில்லை. அமெ­ரிக்கா வழங்­கிய தக­வலை, ‘மேற்­கத்­திய நாடுகள் ரஷ்­யாவைக் குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­து­கி­றது. அதன் மூல­மாக ரஷ்­யாவின் பலத்தை தகர்க்க விரும்­பு­கி­றது” என புட்­டின் நினைத்­தி­ருக்க கூடும். அதில் தவறு ஒன்றும் இல்லை. என­வேதான் அவர் நிச்­ச­ய­மாக அந்த தக­வலை நம்­ப­மாட்டார். மேலும் புட்­டின் கேஜிபி பின்­னணி கொண்­டவர். அமெ­ரிக்கா எப்­படி செயல்­படும் என்­பது அவ­ருக்கு நன்­றா­கவே தெரியும். எனவே அந்த எச்­ச­ரிக்­கைக்கு பின்னால் முக்­கி­ய­மான விஷயம் மறைக்­கப்­பட்டு இருக்கும் என்­பதை புட்­டின் நன்கு அறிவார்.

எனவே துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு மூல­கா­ரணம் வேறு ஏதா­வ­துதான் இருக்கும். அதை ரஷ்யா தற்­போது கண்­ட­றிந்து இருக்க கூடும். இருப்­பினும் உலகின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பை வைத்­தி­ருப்­ப­தாக சொல்லும் ரஷ்­யா­வுக்கு இந்த தாக்­கு­தலை முன்­கூட்­டியே கணிக்க முடி­யா­தது பெரும் பின்­ன­டை­வா­கத்தான் பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனாலும் புட்­டின் பத­வி­யேற்ற போதும் இதுபோல் ஏரா­ள­மான பிரச்­னைகள் வெடித்­தன. அதை­யெல்லாம் கட்­டுப்­ப­டுத்­தி­யிருக்­கிறார். இதுவும் அப்­படி சரி­கட்­டப்­படும்” என்­றனர்.

ஆரம்­பத்தில் ஐ.எஸ் அமைப்­புதான் இந்தத் தாக்­கு­தலை நடாத்­தி­யது என ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டின் குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருக்­க­வில்லை. எனினும் தாக்­குதல் நடந்த சில தினங்­களின் பின்னர் ஊட­கங்கள் மத்­தியில் பேசிய அவர் “ பல நூற்­றாண்­டு­க­ளாக இஸ்­லா­மிய நாடு­களே எதிர்த்து வரும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­கள்தான் இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யுள்­ளனர். எனினும் அவர்­க­ளுக்கு உக்­ரைனின் ஆத­ரவும் இருந்­தி­ருக்­கி­றது” எனத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் எம்­முடன் போரிட்டு வரும் நியோ நாஜி உக்ரைன் அர­சாங்­கத்­திற்கும் இத­னுடன் தொடர்பு இருக்­கி­றது.

தாக்­கு­தலை நடத்தி விட்டு பயங்­க­ர­வா­திகள் உக்­ரைனை நோக்கிச் சென்­றது ஏன் என்ற கேள்­விக்கு விடை காணப்­பட வேண்டும். அங்கு அவர்­க­ளுக்­காக காத்­தி­ருந்­தது யார்? என்றும் புட்டின் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

இந்தத் தாக்­கு­தலை ஆப்­கா­னிஸ்­தானைத் தள­மாகக் கொண்­டி­யங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-–கே அமைப்­பி­னர்தான் நடத்­தி­யுள்­ள­தாக சர்­வ­தேச பயங்­க­ர­வாத ஆய்வு நிபு­ணர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனினும் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக கைது செய்­யப்­பட்­டுள்ள நால்­வரும் தஜி­கிஸ்தான் நாட்டைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

“பயங்­க­ர­வாத” தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக நான்கு பேர் மீது மொஸ்கோ நீதி­மன்­றத்தால் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு குற்றம் சாட்­டப்­பட்­டது. நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, அவர்கள் கடு­மை­யாக தாக்­கப்­பட்­ட­தற்­கான அறி­கு­றிகள் தென்­பட்­டன.

நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நான்கு சந்­தேக நபர்­களின் வயது 19 முதல் 32 வரை இருக்கும் என்றும் அவர்கள் “உடல் ரீதி­யாக மிகவும் மோச­மான நிலையில்” இருப்­ப­தா­கவும் அல்­ஜெ­ஸீரா செய்­தி­யாளர் குறிப்­பிட்­டுள்ளார்.
“அவர்­களின் முகத்தில் காயங்கள் தெரிகின்றன. மேலும் அவர்களில் ஒருவர் அரை மயக்கத்தில் இருந்தார். அவர் தனது மருத்துவருடன் நீதிமன்றத்திற்குள் சக்கர நாற்காலியில் கொண்டு வரப்பட்டார்” என்று செய்தியாளர் கூறினார்.

விசாரணை நடந்து வருவதாகக் கூறிய பிரதமர் மைக்கேல் மிஸ்டின், “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். அவர்களுக்கு கருணை காட்டப்படமாட்டாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ், இப்போது ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவராக இருக்கிறார். அவர் “சந்தேக நபர்கள் அனைவரையும் கொல்லுங்கள்” என அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தாக்குதலில் மொத்தமாக 180 பேர் காயமடைந்தனர். இவர்களில் 97 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.