அல் கைதா, என்.டி.ஜே.யின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு சொகுசு வீடுகள்

‍அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம்

0 59

(எம்.எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர், ஜனா­தி­ப­தியின் உத்­த­ர­வுக்கு அமைய பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்ட தெஹி­வளை, பேரு­வளை பகு­தியில் அமையப் பெற்­றுள்ள இரு சொகுசு வீடுகள் அல் கைதா மற்றும் என்.டி.ஜே. எனப்­ப­டும் தேசிய தெளஹீத் ஜமா அத் ஆகிய அமைப்­புக்­களின் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

குறித்த இரு வீடு­க­ளி­னதும் உரி­மை­யா­ளர்கள், ஜனா­தி­ப­தியின் சுவீ­க­ரிப்பு தீர்­மா­னத்தை ஆட்­சே­பித்து தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று பரி­சீ­ல­னைக்கு வந்த போதே சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சமிந்த விக்­ரம இதனை நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

அதன்­படி குறித்த இரு மனுக்­க­ளையும் விசா­ர­ணைக்கு ஏற்­காது தள்­ளு­படி செய்­வ­தாக நீதி­ய­ரசர் ப்ரீத்தி பத்மன் சுர­சேன தலை­மை­யி­லான ஷிரான் குன­ரத்ன மற்றும் மஹிந்த சம­ய­வர்­தன ஆகியோர் அடங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் அறி­வித்­தது.

நேற்று இம்­ம­னுக்கள் பரி­சீ­ல­னைக்கு வந்த போது, பிர­தி­வா­தி­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட அரச சட்­ட­வாதி சமிந்த விக்­ரம, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமைய குறித்த இரு வீடுகள் தொடர்­பிலும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக கூறினார்.

பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக நம்­பப்­படும் லுக்மான் தாலிப் என்­ப­வ­ருடன் இவ்­வீட்டு உரி­மை­யா­ளர்கள் மிக நெருக்­க­மான தொடர்­பு­களை பேணி­யுள்­ள­தா­கவும், இவ்­வீ­டுகள் தேசிய தெளஹீத் ஜமா அத் மற்றும் அல் கைதா அமைப்­புக்­களின் பயங்­கர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்ப­டுத்­தப்பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அத்­துடன் அவ்­வீ­டுகள் அடிப்­ப­டை­வாத வகுப்­புக்­களை நடாத்­தவும் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­ப்படுத்­தப்பட்­ட­தா­கவும் அரச சட்­ட­வாதி சமிந்த விக்­ரம குறிப்­பிட்டார். அதன்­படி இந்த இரு வீடு­களை பொலிஸார் கைய­கப்­ப­டுத்த ஜனா­தி­பதி விடுத்த உத்­த­ரவு நியா­ய­மா­னது எனவும் அத­னூ­டாக மனு­தா­ரர்­களின் அடிப்­படை உரி­மைகள் எவையும் மீறப்­ப­ட­வில்லை என்­பதால் மனுக்­களை நிரா­க­ரிக்­கு­மாறும் அவர் கோரினார்.

எனினும் மனு­தா­ரர்­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்­கப்பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் நிரா­க­ரிப்­ப­தாக அறி­வித்தார். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் நிறை­வேற்­ற­தி­காரம் மிக்க தரப்பு இவ்­விரு வீடு­க­ளையும் கையக்­கப்­ப­டுத்த எடுத்த நட­வ­டிக்கை முற்­றிலும் சட்­டத்­துக்கு முர­ணா­னது என அவர் குறிப்­பிட்டார். அரச சட்­ட­வாதி கூறு­வதை போல எந்த தக­வலும் விசா­ர­ணையில் வெளி­ப்­படுத்­தப்­ப­ட­வில்லை என அவர் குறிப்­பிட்டார்.

முன் வைக்­கப்­பட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதி­யர­சர்கள் குழாம் மனுக்­களை தள்­ளு­படி செய்வதாக அறிவித்தது.

குறித்த இரு வீடுகளின் உரிமையாளர்களான மொஹம்மட் ஹியதுல்லாஹ் மற்றும் மொஹம்மட் ஹசீம் ஆகியோர் இம்மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன் மனுக்களில் சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.