மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

0 278

எப்.அய்னா

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்­கு­தலால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், அதன் விளை­வு­களால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்­த­வர்­களும் நீதிக்­காக தொடர்ந்து போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அந்த வகையில், இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தாரி தொடர்­பி­லான கேள்வி 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை தொடர்­கி­றது. இதற்­கான விடையை இது­வரை விசா­ர­ணை­யா­ளர்­களும் வழங்­க­வில்லை.

இவ்­வா­றான பின்­ன­ணியில் தான், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடக்கும் போது, நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக, முப்­ப­டை­களின் பிர­தா­னி­யாக, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தான சூத்­தி­ர­தாரி யார் என தனக்கு தெரியும் என வெளி­ப்­படுத்­தி­யுள்ள கருத்து பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. கடந்த 22 ஆம் திகதி கண்­டியில் வைத்து மைத்­தி­ரி­பால சிறி­சேன இதனை வெளி­ப்ப­டுத்­தி­யி­ருந்தார்.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் எங்­கி­ருந்து நடாத்­தப்­பட்­டது என்­பது எங்­க­ளுக்கும் தெரியும். வழக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள், கைது செய்­யப்­பட்ட பயங்­க­ர­வா­திகள், அது சரி…. நான் கைது செய்­த­வர்­களே இப்­போது மூவர் கொண்ட நீதி­ப­தி­களால் விசா­ரிக்­கப்­ப­டு­கி­றார்கள். மறு­புறம், உண்­மையில் யார் இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்­தார்கள் என்­பதை இது­வரை யாரும் சொல்­ல­வில்லை. ஆனால் அதை செய்­தது யார் என்று எனக்கு தெரியும். இது­பற்றி சாட்­சி­யம்­ அ­ளிக்­கும்­படி நீதி­மன்றம் என்­னிடம் ஏதேனும் கோரிக்­கையோ அல்­லது உத்­த­ர­வையோ விடுத்தால், இந்த உயிர்த்த ஞாயிறு தின‌ தாக்­கு­தலை நடத்­தி­யது யார் என்று கூற நான் தயார். மற்ற விஷயம் என்­ன­வென்றால், அதை மிகவும் ரக­சி­ய­மாக வைத்­தி­ருப்­பது அந்த நீதி­ப­தி­களின் பொறுப்பு.’ என இதன்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிட்­டி­ருந்தார்.

சி.ஐ.டி. விசா­ரணை :
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இந்தக் கருத்தை அடுத்து, முழு நாட்­டிலும் அது பேசு பொரு­ளா­னது. மைத்­தி­ரியின் கருத்து தேர்தல் காலம் நெருங்­கு­வதால் அதனை இலக்­காக கொண்­ட­தாக இருக்­கலாம் என ஒரு சாராரும், மைத்­தி­ரியை கைது செய்ய வேண்டும் என இன்­னொரு சாராரும், மைத்­திரி தனக்கு தெரிந்த­வற்றை வெளிப்­ப­டை­யாக கூற வேண்டும் என மற்­றொரு சாராரும் தெரி­வித்­தனர். பலர் மைத்­தி­ரிக்கு எதி­ராக சி.ஐ.டி.யில் முறைப்­பாடும் செய்­தனர்.

இவ்­வா­றான நிலையில், பொது மக்கள் பாது­காப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னுக்கு விடுத்த உத்­த­ர­வுக்கு அமைய சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளமும் இது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது. சி.ஐ.டி. பணிப்­பாளர் மங்­கள தெஹி­தெ­னி­யவின் நேரடி மேற்­பார்­வையில், உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழான குழு இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து கடந்த 25 ஆம் திகதி மைத்­தி­ரி­யிடம் சுமார் 6 மணி நேர வாக்கு மூலம் ஒன்­றி­னையும் பதிந்­துள்­ளது.

அந்த வாக்கு மூல­மா­னது தற்­போது, சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் விவ­கா­ரங்­களை கையாளும் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஹரிப்­பி­ரியா ஜய­சுந்­த­ர­வுக்கு அனுப்­பப்பட்­டுள்ள நிலையில், அவரின் ஆலோ­ச­னைக்கு அமைய மேல­திக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய முடி­கின்­ற‌து.

தண்­ட­னைக்­கு­ரிய குற்றம்:
மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 25 ஆம் திகதி கண்­டியில் வைத்து, தனக்கு உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியை தெரியும் என அறி­வித்­ததை தொடர்ந்து முன் வைக்­கப்­பட்ட பிர­தான விடயம், இது­வரை அந்த தக­வல்­களை மறைத்­த­மைக்­காக அவர் கைது செய்­யப்­படல் வேண்டும் என்­ப­தாகும்.

ஆணைக் குழு, உயர் நீதி­மன்றில்
ஏன் தெரி­விக்­க­வில்லை?
மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தான சுத்­தி­ர­தாரி தொடர்பில் தகவல் அறிந்தி­ருந்தால், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில், அல்­லது அவ­ருக்கு எதி­ராக 100 மில்­லியன் ரூபா நட்ட ஈடு செலுத்த உத்­தரவி­டப்­பட்ட உயர் நீதி­மன்ற அடிப்­படை உரிமை மீறல் வழக்கு விசா­ர­ணை­களின் போது ஏன் அவர் அதனை கூற­வில்லை என கத்­தோ­லிக்க தரப்பு உள்­ளிட்ட பலரும் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

இது தொடர்பில் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி உபுல் குமா­ரப்­பெ­ரும இலங்கை சட்­டத்­தின்­படி, குற்றச் செயல்கள் தொடர்­பான தக­வல்­களை மறைப்­பது குற்­ற­மாகும் என தெரி­வித்தார்.

“குற்றச் செயல் தொடர்பில் தக­வல்­களை அறிந்தும் அதனை மறைப்­பது குற்றம். தண்­டனைச் சட்டக் கோவை மற்றும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தின்­படி இது குற்­ற­மாகும். இலங்­கையில் தற்­போ­துள்ள சட்­டத்­தின்­படி தக­வல்­களை மறைக்க முடி­யாது. இது தேங்காய் திருட்டு போன்ற சிறிய பிரச்­சினை அல்ல. நாடு எதிர்­கொண்ட ஒரு பெரிய சோகத்தின் முதல் வழக்கு. முதல் குடி­ம­க­னாக செயல்­பட்ட ஜனா­தி­ப­தியின் கருத்து இது. எனவே, இந்த தீவி­ர­மான தக­வலை அவர் மறைத்­தி­ருந்தால், அது தண்­டிக்­கப்­பட வேண்­டிய குற்றம்.” என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி உபுல் குமா­ரப்­பெ­ரும தெரி­வித்தார்.

3 வாரங்­க­ளுக்கு முன்­னரே தெரியும் :
எவ்­வா­றா­யினும் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி குறித்து 3 வாரங்­க­ளுக்கு முன்­ன­ரேயே தான் அறிந்த்­து­கொண்­ட­தா­கவும் , அதனை வெளிப்­ப­டை­யாக கூறினால் தனக்கும், தனது குடும்­பத்­தா­ருக்கும் உயிர் ஆபத்து ஏற்­படும் என மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 23 ஆம் திகதி, தான் கண்­டியில் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு மேல­திக விளக்­க­ம­ளித்­தி­ருந்தார்.

பொய் கூறு­வதும் குற்றம் :
இதே­வேளை, பொய்­யான ஆதா­ரங்கள் அல்­லது பொய்­யான தக­வல்­களை முன்­வைப்­பதும் பாரிய குற்­ற­மாகும் என சட்­டத்­த­ரணி ஜயந்த தெஹி­யத்­தகே தெரி­வித்­துள்ளார்.

“ஒரு குற்றம் தொடர்பில் பொய்ச் சாட்­சியம் கூறு­வது அந்தக் குற்­றத்தின் தன்­மைக்கு அமைய தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்க வல்ல‌ குற்­ற­மாகும். மரண தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் தொடர்பில் பொய்ச் சாட்­சியம் கூறு­வது மரண தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும்” என சட்­டத்­த­ரணி ஜயந்த தெஹி­யத்­தகே தெரி­வித்தார்.

3 வாரங்­க­ளாக தக­வலை மறைத்­தது ஏன்?
மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விளக்கம் பிர­காரம், பிர­தான சூத்­தி­ர­தாரி தொடர்பில் அவர் 3 வாரங்கள் தக­வல்­களை மறைத்து வைத்­தி­ருந்­துள்ளார். இதுவே அவரை கைது செய்ய போது­மா­னது என சில சட்ட வல்­லு­னர்கள் கூறு­கின்­றனர்.

குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் சாய்ந்தமருது குண்­டு­வெ­டிப்பை மையப்­ப‌­டுத்தி கல்­முனை மேல் நீதி­மன்றில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கின் குற்றப் பத்­தி­ரி­கையை ஆராயும் போது, பொலி­ஸா­ருக்கு அவர் தக­வல்­களை அளிக்க தவ­றி­ய­தாக கூறப்­ப‌டும் காலப்­ப­குதி வெறு­மனே ஒரு வார கால­மாகும்.

எனவே மைத்­தி­ரிக்கு எதி­ராக சட்­டத்தை அமுல் செய்ய பின் நிற்கக் கூடாது என சட்ட வல்­லு­னர்கள் கூறு­கி­ன்­ற‌னர்.

அர­சியல் பின்­ன­ணியா?
எவ்­வா­றா­யினும் மைத்­தி­ரியின் கருத்தின் பின்­ன­ணியில் ஏதேனும் அர­சியல் காய் நகர்த்­தல்கள் நோக்­காக உள்­ளதா என்ற சந்­தே­கமும் இல்­லாமல் இல்லை.
குறிப்­பாக வெளி­நாட்டு நிகழ்ச்சி நிர­லொன்று உள்­ளதா என்ற சந்­தே­கமும் எழு­கின்­ற‌து. காரணம், தேர்­த­லொன்று நெருங்கும் போது மைத்­தி­ரி­பால சிறி­சேன இத்­த­கைய வெளிப்­ப‌­டுத்­தலை முன் வைத்­துள்­ள­மை­யாகும்.

அமெ­ரிக்க தூது­வரின் இர­க­சிய சந்­திப்பு :
மைத்­தி­ரி­பால சிறி­சேன சி.ஐ.டி. விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போது, இலங்­கைக்­கான அமெரிக்க தூது­வரும் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­வ­ராக செயற்­படும் சுதந்­திர கட்­சியின் சர்­வ­தேச விவ­கார செய­லாளர் சஜின் வாஸ் குண­வர்­த­ன­வுக்கும் இடையே கொழும்பு நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் சுமார் ஒரு மணி நேர இர­க­சிய சந்திப்­பொன்று நடந்துள்­ளது. இந்த சந்­திப்பு சில சந்­தே­கங்­களை தோற்­று­விக்­கின்­றது.

எனினும் சஜின் வாஸ் தரப்பு இச்­சந்­திப்பை உறுதி செய்த போதும், அது தனிப்­பட்ட நட்பு ரீதியிலான சந்திப்பு என விளக்கமளித்துள்ளது.

விரிவான விசாரணை அவசியம், மைத்திரிக்கு பாதுகாப்பும் வேண்டும் :
எது எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்தின் படி, அவருக்கு உண்மையிலேயே சூத்திரதாரி யார் என தெரிந்திருந்தால், அவரது வாக்கு மூலத்துக்கு அமைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படல் வேண்டும். அவர் உண்மையிலேயே தகவல்களை அறிந்திருப்பாரானால், அதற்காக அவரது பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் மைத்திரி கூறுவது உண்மை எனில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிக்கு, தன்னை காட்டிக் கொடுக்கும் மைத்திரியின் உயிரை பறிக்க அவ்வளவு நேரம் எடுக்காது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.