வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத்தலங்கள் இலக்குவைக்கப்படுகின்றன

சிறுபான்மையினரின் உரிமையை உறுதிப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து

0 71

மத மற்றும் நம்­பிக்­கைக்­கான சுதந்­திர உரி­மையை மீறும் வகையில் அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்கை அர­சாங்­கத்­தி­னாலும் தேசி­ய­வாத சிங்­கள பௌத்த பிக்­கு­க­ளாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள இந்து மற்றும் இஸ்­லா­மிய மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­கள் இலக்­கு­வைக்­கப்­ப­டு­வ­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன், இந்­துக்­களின் வழி­பாட்­டுத்­த­லங்­களில் ஒடுக்­கு­முறை வடி­வி­லான தலை­யீ­டு­களை மேற்­கொள்­வதை உடன் நிறுத்­து­மாறு இலங்கை அர­சாங்கம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வு­றுத்­து­வ­துடன், இந்­துக்கள் மற்றும் ஏனைய சிறு­பான்­மை­யின சமூ­கங்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­மாறு பொலிஸார் உள்­ளிட்ட பாது­காப்­புத்­த­ரப்­பி­ன­ருக்கு உத்­த­ர­வி­ட­வேண்டும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

வவு­னியா மாவட்­டத்தின் வெடுக்­கு­நா­றி­ம­லையில் உள்ள ஆதி­லிங்­கேஸ்­வரர் ஆல­யத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவ­ராத்­திரி தினத்­தன்று பூஜை வழி­பா­டு­களில் ஈடு­ப­டச்­சென்ற பக்­தர்­க­ளுக்கு பொலி­ஸாரால் இடை­யூறு விளை­விக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்ட விவ­காரம் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்ள நிலையில், இது­பற்றி மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­ப­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:
கடந்த வாரம் மத­வ­ழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருந்த 8 தமிழ் இந்­துக்கள் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு, 10 நாட்­க­ளுக்கும் மேல் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அவர்கள் மீறல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. அவர்கள் நேற்று முன்­தினம் (19) நீதி­மன்­றத்தால் விடு­விக்­கப்­பட்­டனர்.

மத மற்றும் நம்­பிக்­கைக்­கான சுதந்­திர உரி­மையை மீறும் வகையில் அண்­மைய சில வரு­டங்­க­ளாக இலங்கை அர­சாங்­கமும், தேசி­ய­வாத சிங்­கள பௌத்த பிக்­கு­களும் நாட்டில் வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள இந்து மற்றும் இஸ்­லா­மிய மத­வ­ழி­பாட்­டுத்­த­லங்­களை இலக்­கு­வைத்­து­ வ­ரு­கின்­றனர்.

இருப்­பினும் வெடுக்­கு­நா­றி­ம­லையில் அத­னை­யொத்த இந்து வழி­பாட்டு செயன்­மு­றைகள் பல வரு­ட­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் இந்­துக்­களின் வழி­பாட்­டுத்­த­லங்­களில் ஒடுக்­கு­முறை வடி­வி­லான தலை­யீ­டு­களை மேற்­கொள்­வதை உடன் நிறுத்­து­மாறு இலங்கை அர­சாங்கம் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வு­றுத்தும் அதே­வேளை, இந்­துக்கள் மற்றும் ஏனைய சிறு­பான்­மை­யின சமூ­கங்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­மாறு பொலிஸார் உள்­ளிட்ட பாது­காப்­புத்­த­ரப்­பி­ன­ருக்கு உத்­த­ர­வி­ட­வேண்டும் என்று மனித உரி­மைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.