காஸா குழந்தைகள் நிதியத்துக்கு கிழக்கு ஆளுநர் நன்கொடை

0 64

காஸாவில் இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் பாதிக்­கப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு ரம­ழான் மாதத்தில் நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி காஸா நிதி­யத்­திற்கு கிழக்கு மாகாண ஆளு­நரும், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரசின் தலை­வ­ரு­மான செந்தில் தொண்­டமான் 05 இலட்சம் ரூபா நிதியை வழங்­கி­யுள்ளார்.

காஸா குழந்­தைகள் நிதி­யத்­துக்கு இது­வரை 57 இலட்­சத்து 73 ஆயி­ரத்து 512 ரூபா நன்­கொ­டை­யாக கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. குறித்த நிதி விரைவில் காஸாவில் பாதிக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­களின் நலன்­புரி தேவை­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்தால் அனுப்­பி­வைக்­கப்­பட உள்­ளது.

வர்த்­த­கர்கள், பொது அமைப்­புகள் உட்­பட பல்­வேறு தரப்­பி­னரும் இந்த நிதி­யத்­துக்கு உத­வி­களை வழங்­கி­வரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்­டமான் முதல் அரசியல் தலைமையாக இந்நிதியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.