புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கதீப், முஅத்தின், ஏனைய ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க வேண்டும்

பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் திணைக்களம் வேண்டுகோள்

0 58

(எம்.வை.எம்.சியாம்)
பள்­ளி­வா­சலில் கட­மை­யாற்றும் மௌல­வி­மார்கள், கதீப்­மார்கள், முஅத்­தின்­மார்கள் மற்றும் ஊழி­யர்கள் ஆகி­யோ­ருக்கு விசேட கொடுப்­ப­னவு வழங்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் அனைத்து பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ்.அலா அஹமட், அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பள்­ளி­வா­சல்­களில் கட­மை­யாற்றும் மௌல­வி­மார்கள், கதீப்­மார்கள், முஅத்­தின்­மார்கள் மற்றும் ஊழி­யர்கள் ஆகி­யோர்­க­ளுக்கு விசேட கொடுப்­ப­னவு வழங்­கு­வது தொடர்­பாக வக்ப் சபையின் WB/9689/2024 எனும் தீர்­மா­னத்தின் பிர­காரம் பள்­ளி­வா­சல்­களில் கட­மை­யாற்றும் கண்­ணி­ய­மிக்க மௌல­வி­மார்கள், கதீப்­மார்கள், முஅத்­தின்­மார்கள் மற்றும் ஊழி­யர்கள் ஆகி­யோர்­க­ளுக்கு புனித ரமழான் மாதத்தில் பள்­ளி­வா­சலில் சிறந்த முறையில் மத அனுஷ்­டா­னங்­களை மேற்­கொள்­கின்­றனர். அவர்­க­ளது பல்­வேறு தேவை­களை கிர­ம­மாக நிவர்த்தி செய்­வற்­கா­கவும் ஏற்­க­னவே பள்­ளி­வா­ச­லினால் வழங்­கப்­ப­டு­கின்ற சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக போது­மான விசேட கொடுப்­ப­னவை ரமழான் மாதத்தில் வழங்­கு­மாறு வேண்டிக் கொள்­கின்றேன் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த கடி­தத்தின் பிர­திகள் இலங்கை வக்ப் சபை செய­லாளர் மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் சகல கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.