சுன்னத் செய்வதற்கு தடை விதிப்பதாக தேசிய மக்கள் சக்தி கூறவில்லை

முஸ்லிம் மக்களிடையே தவறானதொரு எண்ணத்தை ஏற்படுத்த விளைகிறார்கள் என்கிறார் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

0 141

தேசிய மக்கள் சக்­தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளி­யீட்டில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்­வதை தடை­செய்வோம் என குறிப்­பி­ட­வில்லை என தேசிய மக்கள் சக்­தியின் தேசிய நிறை­வேற்றுப் பேரவை உறுப்­பினர் டொக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

தேசிய மக்கள் சக்­தியின் தேசிய நிறை­வேற்றுப் பேரவை உறுப்­பினர் டொக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ நேற்­றை­ய­தினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ளார்.

சீதனம், விருத்­த­சே­தனம் போன்ற நடை­மு­றைகள் கார­ண­மாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்­பு­று­வதை, துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­வதை தடுப்­ப­தற்­கான சட்­டங்­களை தேசிய மக்கள் சக்தி உரு­வாக்­கு­வது பற்­றிய விட­யங்கள் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெளி­வந்­தன அதில் முஸ்லிம் மக்கள் சுன்னத் மற்றும் கத்னா செய்­வதை தடுத்து நிறுத்­தப்­போ­வதா­கவும் குறிப்­பி­டப்­பட்­டன. அது பெண்­களின் சம­வா­யத்­திலும், தேசிய மக்கள் சக்­தியின் 2019 ஆம் ஆண்டின் கொள்கை வெளி­யீட்­டிலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஒரு வாக்­கியம். அது பொய்­யான விட­ய­மல்ல. அதில் பெண்கள் மற்றும் ஆண்­களின் பாலு­றுப்புத் தொடர்­பான விருத்­த­சே­தனம் செய்தல் தொடர்பில் பாதிப்­புக்கும் துன்­பு­றுத்­த­லுக்கும் உள்­ளா­கின்ற விட­யங்கள் தொடர்பில் திருத்­திய­மைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றுதான் தெட்டத் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவற்றை இல்­லா­தொ­ழிப்­ப­தாக நாங்கள் குறிப்­பி­ட­வில்லை.

சுன்னத் செய்­வதை தடை­செய்வோம் என்று நாங்கள் குறிப்­பி­ட­வில்லை. எவ­ரேனும் ஒருவர் பாதிப்­புக்கும் துன்­பு­றுத்­த­லுக்கும் உள்­ளா­வ­தற்கு எதி­ரான சட்­டங்­களை ஆக்­கு­வ­தா­கத்தான் கூறி­யி­ருக்­கின்றோம். இது வெறு­மனே கொள்கை வெளி­யீட்­டுக்கு வந்த ஒரு வாசகம் அல்ல.

1989 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபையின் சிறுவர் உரி­மைகள் பற்­றிய சம­வா­யத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் துன்­பு­றுத்தல் எனும் சொல்­லுக்­கான வரை­வி­லக்­கணம் தெளி­வுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. அதில் முத­லா­வது விடயம் பெண்­க­ளுக்­கான விருத்­த­சே­தனம் செய்­வது பற்­றி­ய­தாகும். பெண்­க­ளுக்கு விருத்த சேதனம் செய்­வது சுகா­தார ரீதி­யாக அல்­லது இனப்­பெ­ருக்க ரீதி­யாக சாத­க­மா­ன­தாக அமை­ய­மாட்­டா­தெ­னவும் அது தவிர்க்­கக்­கூ­டிய ஒரு விடயம் எனவும் முஸ்லிம் சமூ­கத்­திலும் கூட ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். பலர் அதனை மறுக்­கி­றார்கள்.

ஆண்­களின் விருத்­த­சே­தனம் தொடர்­பாக துன்­பு­றுத்தல் என்­ப­தற்கு பின்­வ­ரு­மாறு பொருள் விளக்கம் கொடுக்­கப்­ப­டு­கின்­றது. பல­வந்­த­மாக, சுகா­தார பாது­காப்பு முறை­க­ளுக்கு முர­ணாக பயிற்­று­விக்­கப்­பட்ட பணி­யா­ளர்கள் இன்­றிய செயற்­பாங்கு ஒன்­றுதான் துன்­பு­றுத்தல் எனக் கூறப்­ப­டு­கின்­றது.

ஒருவர் துன்­பு­றுத்­த­லுக்கு இலக்­காவார் என்றால் அதற்­கெ­தி­ராக சட்­டங்கள் ஆக்­கப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது. 195 நாடுகள் இதனை அங்­கீ­க­ரித்­தி­ருக்­கின்­றன. பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்­கின்ற அர­சாங்­கங்­களும் இதனை நிறை­வேற்­று­வ­தற்­காக கையை உயர்த்­தி­யி­ருக்­கின்­றன. இது உலகில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு வாசகம். தற்­போது முஸ்லிம் சமூ­கத்தில் ஆண்­க­ளுக்கு சுன்னத் செய்து வரு­கி­றார்கள். சுகா­தார பாது­காப்பு வழி­மு­றையின் கீழ் பயிற்­றப்­பட்ட சுகா­தார பணி­யா­ளர்கள் மூல­மாக அதனை செய்து வரு­வ­தாக அவர்கள் கூறு­கி­றார்கள்.

மறு­பு­றத்தில் இதனை செய்­யும்­போது பிள்­ளையின் அனு­ம­தியைப் பெறு­வ­தற்கு கால அவ­காசம் கிடை­யாது. ஏனெனில், குழந்தை பிறந்து ஓரிரு நாட்­க­ளுக்குள் சுன்னத் செய்­யப்­ப­டு­கின்­றது. பெற்­றோரின் விருப்­பத்தின் பேரில்தான் பிள்­ளை­களை எடுத்துச் செல்­கி­றார்கள். நாம் இங்கு குறிப்­பி­டு­வது அதைப்­பற்­றி­யல்ல. துன்­பு­றுத்தல் என்­ப­தற்கு இது ஏற்­பு­டை­ய­தல்ல. பெற்­றோரின் விருப்­பத்­துடன் வரு­கி­றார்கள். சுகா­தார பாது­காப்­புக்கு இணங்க பயிற்­றப்­பட்ட ஊழி­யர்­கள்தான் இதனைச் செய்­கி­றார்கள். இதில் பிரச்­சினை இல்லை.

பல­வந்­த­மாக, சுகா­தார முறை­யி­யல்­களை பின்­பற்­றாத செயன்­முறை பற்­றிதான் இங்கு குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது எனவே நாங்கள் கூறி­யுள்ள விடயம் மிகத் தெளி­வா­கவே இருக்­கி­றது. ஆனால் இங்­குள்ள பிரச்­சினை என்­ன­வெனில், எமது பொரு­ளா­தா­ரத்தை சீராக்கக் கூடிய வேலைத்­திட்­டத்­துடன் முட்­டி­மோத முடி­யா­த­வர்கள் வேறு குற்­றச்­சாட்­டுக்­களை எம்­மீது சுமத்தி, இவ்­வா­றான சொற்­களைப் பிடித்­துக்­கொண்டு கொள்கை வெளி­யீட்­டினை வாசித்­தி­ராத முஸ்லிம் மக்­க­ளுக்கு வேறொரு திரி­பு­ப­டுத்­தப்­பட்ட செய்­தியைக் கொடுக்க முயற்சி செய்­கி­றார்கள்.

எமது நாட்­டிலே சம­யங்­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பா­டு­களை மக்கள் தீர்­மா­ன­க­ர­மாக நிரா­க­ரித்­துள்­ளார்கள். அப்­படி நடந்­தி­ரா­விட்டால் கோட்­டா­பய ராஜ­பக்ஸ இன்­னமும் ஜனா­தி­ப­தி­யாக இருந்­தி­ருப்­பாரே? கோல்ஃபேஸ் போராட்­டத்தின் போதும், அதன்­பின்­னரும் மக்கள் இந்த இன­வா­தத்தை, மத தீவி­ர­வா­தத்தை எதிர்த்­தார்கள். நாட்டு மக்­களின் வரிப்­ப­ணத்­தொ­கையில் சுக­போகம் அனு­ப­வித்­துக்­கொண்டு இவர்கள் என்ன செய்­கின்­றார்கள்? இன­வா­தத்தை தூண்­டி­வி­டு­கின்­றார்கள்.

முஸ்லிம் மக்­க­ளி­டையே தவ­றா­ன­தொரு எண்­ணத்தை ஏற்­ப­டுத்த விளை­கி­றார்கள். எமது கொள்கை வெளி­யீட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யத்தைப் பாருங்கள். ஏன் நாங்கள் சீத­னத்­தைப்­பற்றி கதைக்­கின்றோம். சீத­னத்­திற்கும் இதற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒரு தகப்பன் தன்­னு­டைய பெண்­பிள்ளை திரு­மணம் செய்­யும்­போது விருப்­பத்­துடன் சீதனம் கொடுத்தால் அதனைத் தடுக்க முடி­யாது. ஆனால் சீதனம் என்­பது ஒரு­வரை துன்­பு­றுத்­தக்­கூ­டி­ய­தாக பல­வந்­த­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­மானால் அத்­துடன் அந்த சீத­னத்தை கொடுக்­கா­தி­ருப்­பதன் மூல­மாக குடும்­பத்­துக்­குள்ளே எவ­ரா­வது பாதிக்­கப்­ப­டு­வா­ரே­யானால் பிர­ஜை­யொ­ருவர் அந்த துன்­பு­றுத்­த­லுக்கு எதி­ராக செய­லாற்ற வேண்­டு­மென நாங்கள் கூறி­யுள்ளோம். இதைத்தான் நாங்கள் தெளி­வாகக் கூறு­கின்றோம். சமய மர­பு­களின் அடிப்­ப­டையில் சுன்னத் செய்­வதை தடுப்­பதிற்கும் இதற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? ஒரு தகப்பன் தன்னுடைய பெண்பிள்ளை திருமணம் செய்யும்போது விருப்பத்துடன் சீதனம் கொடுத்தால் அதனைத் தடுக்க முடியாது. ஆனால் சீதனம் என்பது ஒருவரை துன்புறுத்தக்கூடியதாக பலவந்தமாக மேற்கொள்ளப்படுமானால் அத்துடன் அந்த சீதனத்தை கொடுக்காதிருப்பதன் மூலமாக குடும்பத்துக்குள்ளே எவராவது பாதிக்கப்படுவாரேயானால் பிரஜையொருவர் அந்த துன்புறுத்தலுக்கு எதிராக செயலாற்ற வேண்டுமென நாங்கள் கூறியுள்ளோம். இதைத்தான் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம். சமய மரபுகளின் அடிப்படையில் சுன்னத் செய்வதை தடுப்பது எமது நோக்கமல்ல என அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.