தவ­றான வர­லாற்றை பதி­வு செய்ய முயன்­றுள்ள கோட்­டா

0 267

ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து மக்­களால் துரத்­தியடிக்­கப்­பட்ட கோத்­தா­பய ராஜ­பக்ச தனக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட்ட மக்கள் போராட்­டத்தை வெளி­நா­டு­களின் சதி எனக்­கு­றிப்­பிட்டு வெளி­யிட்­டுள்ள நூல் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு வித்­திட்­டுள்­ள­து.

‘ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து என்னை வெளி­யேற்­று­வ­தற்­கான சதி’ எனும் தலைப்பில் கடந்த வாரம் ஆங்­கில மொழி­யிலும், சிங்­கள மொழி­யிலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ள இந்­நூல் சிறு­பான்மை மக்­களை குறிப்­பா­க முஸ்­லிம்கள் மக்கள் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கி­ற­து.

இந்­நூலில் அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் மக்கள் அவரை வெளி­யேற்­று­வ­தற்கு மேற்­கொண்ட அர­க­லய போராட்­டத்தின் பின்­னணி, போராட்­டக்­கா­ரர்­களின் எழுச்­சியை அடுத்து தான் நாட்டை விட்டும் வெளி­யே­றிய விதம், அவ்­வி­வ­கா­ரத்தில் நில­விய வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள், கொரோனா தொற்றில் மர­ண­மான முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­யாமல் எரிப்­ப­தற்கு மேற்­கொண்ட தீர்­மானம், வெளி­நாட்டுத் தலை­யீ­டுகள் போன்ற பல்­வேறு விட­யங்­க­ளும் உள்ள­டக்­கப்­பட்­டுள்­ள­ன.

இந்நூலின் பல இடங்­க­ளிலும் முஸ்லிம் சமூ­கத்தை குறி­வைத்து பல விட­யங்­களை எழு­தி­யுள்ளார். “அர­க­லய போராட்­டத்­திற்கு வருகை தந்­த­வர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால் அவர்கள் அனை­வரும் ஏற்­க­னவே என்னை எதிர்த்­த­வர்கள் என்­பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்­போ­ராட்­டத்தில் சிறு­பான்­மை­யி­னரின் வகி­பாகம் பெரு­ம­ள­வுக்கு இருந்­தது. ஏனெனில் போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதன் பின்னர் தமி­ழர்­களும் பொது பல சேனாவின் எழுச்­சிக்குப் பின்னர் முஸ்­லிம்­களும் என்னை எதிர்த்­தார்கள். முஸ்­லிம்கள் என்னை விரோ­தி­யா­கவே பார்த்­தார்கள். எனவே நான் பத­வியில் தொடர்ந்தால் சிங்­கள பெளத்­தர்கள் மேலும் பலப்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள் என்ற அச்­சத்தின் கார­ண­மாக இப்­போ­ராட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தற்கு அவர்கள் தூண்­டப்­பட்­டி­ருக்கக் கூடும்”­என முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தான் எழு­திய நூலில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

“2012ஆம் ஆண்டு பொது­ப­ல­சேனா அமைப்பு உரு­வா­னது. அந்த அமைப்­பு­ட­னான தொடர்பின் கார­ண­மாக நான் முஸ்­லிம்­களின் எதி­ரி­யாக பார்க்­கப்­பட்டேன். 2019 ஆம் ஆண்டு நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டேன். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மற்றும் முஸ்­லிம்­களின் வாக்­குகள் என்னை எதிர்த்துப் போட்­டி­யிட்­ட­வ­ருக்கே வழங்­கப்­பட்­டன. இதனை நான் ருவன் வெலி­சாய புனித தலத்தில் ஆற்­றிய உரையில் தெரி­வித்­தி­ருந்தேன். சிங்­கள பெளத்த மக்­களின் வாக்­கு­க­ளி­னா­லேயே நான் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டேன் என்­ப­த­னையும் கூறினேன். கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் உடல்கள் அடக்கம் செய்­யப்­ப­டக்­கூ­டாது தகனம் செய்­யப்­பட வேண்டும் என்று எனது ஆட்­சிக்­கா­லத்தில் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. முஸ்­லிம்கள் அவர்­க­ளது மதத்­தின்­படி உடல்கள் தகனம் செய்­யப்­படக் கூடாது. அடக்கம் செய்­யப்­பட வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தனர். நான் முஸ்­லிம்­களின் கொவிட் தொற்று ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்ய வேண்டும் என்ற எண்­ணத்தில் தான் இருந்தேன். ஆனால் எமது சுகா­தார பிரிவின் நிபு­ணர்கள் கொவிட் தொற்று ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்டால் கொவிட் வைரஸ், நிலத்­தடி நீருக்குள் கலக்கும் என்று கூறி ஜனா­ஸாக்­களை எரிப்­ப­தற்கு உத்­த­ர­விட்­டார்கள். ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்டில் கொன்­கிரீட் பெட்­டி­யொன்று அமைத்து அதற்குள் ஜனாஸா அடக்க முடியும் என்ற யோச­னை­யையும் நான் நிபுணர் குழு­வுக்கு முன்­வைத்­தி­ருந்தேன். ஆனால் சுகா­தார பிரிவு அதனை அனு­ம­திக்­க­வில்லை. குறிப்­பாக நிபுணர் குழுவின் பேரா­சி­ரியர் மெத்­திகா விதா­னகே தான் இந்த நிலை­மை­க­ளுக்குக் காரணம் எனவும் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தனது நூலில் குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வாறு ஜனாஸா எரிப்பு விட­யத்தில் தனக்குப் பொறுப்­பில்லை என்று நழு­வி­யுள்ள கோத்­த­பா­ய முஸ்­லிம்கள் எந்­த­­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தன்னை ஆத­ரிக்­க­வில்லை என்ற கருத்­தையும் பல இடங்­களில் அழுத்­த­மாகப் பதித்­துள்­ளார்.

அது­மாத்­தி­ர­மன்றி இந்நூல் வெளி­வந்த பிற்­பாடு கருத்து வெளி­யிட்ட கோத்­த­பா­யவின் நெருங்­கிய சகா ஒருவர் ஜனா­திப­தியின் மிரி­ஹான இல்­லத்தை தாக்­கு­வதற்­காக வந்தவர்­களில் பெரும்­பான்­மை­யானோர் முஸ்­லிம்­களே என பாரிய குற்­ற­ச்­சாட்டை முன்­­வைத்­தி­ரு­ந்தார்.

இவ்­வாறு இந்நூல் முஸ்­லிம்­களை குற்­ற­வாளிக் கூண்டில் நிறுத்தும் நோக்கில் பொய்­யான வர­லா­­றுகள் மூலம் எதிர்­கால சந்­த­தி­யி­னரை தவ­றாக வழி­ந­டாத்த முற்­பட்­டுள்­ளமை கண்­டிக்­கத்­தக்­க­தா­­கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.