உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும்

மஸ்ஜிதுந் நபவி இமாம் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி

0 65

சவூதி அரேபியாவிலிருந்து
எம்.பி.எம்.பைறூஸ்

“உலக முஸ்­லிம்கள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வி­யாக இருக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும் அவ்­வாறு உதவி செய்­வ­தா­னது இஸ்­லா­மிய வழி­காட்­டல்­க­ளையும் வரை­ய­றை­க­ளையும் பேணி­ய­தாக இருக்க வேண்­டி­யது அவ­சியம்” என மதீ­னா­வி­லுள்ள புனித மஸ்­ஜிதுந் நப­வியின் பிர­தம இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி தெரி­வித்தார்.

“சக முஸ்லிம் சகோ­தர சகோ­த­ரி­க­ளுக்கு உத­வு­வது அல்­லது ஆத­ரிப்­பது ஒரு முஸ்­லிமின் கட­மை­யாகும். எனினும் இவற்றை இஸ்­லா­மிய வரை­ய­றை­க­ளுக்­குள்ளும் வழி­காட்­டல்­க­ளுக்­குள்ளும் நின்றே நாம் மேற்­கொள்ள வேண்டும். நற்­ப­ணி­க­ளுக்­கான வாயில்கள் திறந்தே உள்­ளன. எனினும் அவற்றை இஸ்­லாத்தின் வழி­காட்­டல்­களைப் பின்­பற்­றியே முன்­னெ­டுக்க வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் தாம் விரும்­பி­ய­வாறு செய்­வ­தற்கு அனு­ம­தி­யில்லை” என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இரு புனித தலங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்­மானின் அழைப்பின் பேரில் புனித உம்ரா கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கும் இஸ்­லா­மிய வர­லாற்றுத் தலங்­களை தரி­சிப்­ப­தற்­கு­மென சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்­துள்ள 16 நாடு­களைச் சேர்ந்த 250 பிர­மு­கர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதே இமாம் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

‘மன்­னரின் விருந்­தி­னர்கள்’ திட்டம்
இரு புனித தலங்­களின் பாது­கா­வலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் சகல நாடு­க­ளி­லி­ருந்தும் 1,000 உம்ரா யாத்­தி­ரி­கர்­களை விருந்­தி­னர்­க­ளாக அழைப்­ப­தற்கு சென்ற வருட இறு­தியில் ஒப்­புதல் அளித்­தி­ருந்தார். இதற்­க­மைய இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்­க­ளிலும் குறித்த 1000 விருந்­தி­னர்­களும் சவூதி அரே­பி­யாவை வந்­த­டைந்து புனித உம்ரா கட­மையை நிறை­வேற்­றி­யுள்­ள­துடன் இஸ்­லா­மிய வர­லாற்­றுடன் தொடர்­பு­டைய முக்­கிய இடங்­க­ளையும் பார்­வை­யிட்­டுள்­ளனர்.

விருந்தினர்களுடன் கைகுலுக்கும் இமாம்

இத்­திட்­டத்­திற்­க­மைய தலா 250 பேர் கொண்ட விருந்­தி­னர்கள் நான்கு கட்­டங்­க­ளாக சவூதி அரே­பி­யா­வுக்கு அழைத்து வரப்­பட்­டனர். இவர்­களில் முதல் தொகு­தி­யினர் கடந்த ஜன­வரி மாத ஆரம்­பத்தில் உம்ரா கட­மையை நிறை­வேற்­றினர். இறுதி குழு­வினர் தற்­போது சவூதி அரே­பி­யாவில் தங்­கி­யி­ருந்து உம்ரா கட­மையை நிறை­வேற்­று­வ­துடன் முக்­கிய தலங்­க­ளையும் பார்­வை­யிட்டு வரு­கின்­றனர்.

இத் திட்டம் சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள், அழைப்பு மற்றும் வழி­காட்டல் அமைச்­சினால் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

இத்­திட்­டத்தை வெற்­றி­க­ர­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அனு­ம­தியை வழங்­கி­ய­மைக்­காக மன்னர் சல்­மா­னுக்கும் பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­த­ம­ரு­மான முஹம்மத் பின் சல்­மா­னுக்கும் தனது நன்­றி­களைத் தெரி­விப்­ப­தாக இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள், அழைப்பு மற்றும் வழி­காட்டல் அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அல் ஷெய்க் தெரி­வித்தார்.

இமாமுடனான சந்திப்பில் கலந்து கொண்ட விருந்தினர்கள்

இத்­திட்டம் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு சேவை செய்­வ­திலும், உலகின் பல்­வேறு நாடு­களில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்­கி­டையே சகோ­த­ரத்­துவப் பிணைப்பை வலுப்­ப­டுத்­து­வ­திலும், பல்­வேறு இஸ்­லா­மியப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுடன் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வ­திலும் சவூதி அரே­பியா கொண்­டுள்ள அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இஸ்­லா­மிய அறி­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள், முஸ்லிம் சமூ­கத்தில் செல்­வாக்கு மிக்க பிர­மு­கர்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்கள் உட்­பட உல­கெங்­கிலும் உள்ள 1,000 முக்­கிய முஸ்லிம் பிர­மு­கர்கள் இந்த விருந்­தி­னர்கள் திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­ட­தாக குறிப்­பிட்ட அமைச்சர் ஷெய்க் அப்துல் லதீப் அல் ஷெய்க், இவ் விருந்­தி­னர்கள் இரு புனித தலங்­க­ளிலும் வழி­பா­டு­களில் ஈடு­ப­டவும் இஸ்­லா­மிய வர­லாற்றுத் தலங்­க­ளையும் பார்­வை­யி­டவும் அனு­ம­திப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

மத­வெறி மற்றும் தீவி­ர­வா­தத்தை எதிர்ப்­ப­துடன் இஸ்லாம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு சேவை செய்­வதே தமது அமைச்சின் பிர­தான இலக்கு எனக் குறிப்­பிட்ட அவர், இஸ்­லா­மிய மார்க்­கத்தின் விழு­மி­யங்கள் மற்றும் கொள்­கை­களை பரப்­பு­வ­தற்கும் தமது அமைச்சு விரி­வான திட்­டங்­களை வகுத்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இலங்­கை­யி­லி­ருந்து 10 பேர் பங்­கேற்பு
இலங்­கையில் இருந்தும் 10 பிர­மு­கர்கள் இத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சின் செய­லாளர் அஷ்ஷெய்க் நயீ­முத்தீன், தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப வேந்தர் ரமீஸ் அபூ­பக்கர் உட்­பட ஊட­க­வி­ய­லா­ளர்கள், தஃவா பிர­சா­ர­கர்கள், வெளி­வி­வ­கார அமைச்சின் அதி­கா­ரிகள் ஆகியோர் இக் குழுவில் அடங்­கி­யுள்­ளனர்.

இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தா­னியின் நேரடி வழி­காட்­டலில் தெரிவு செய்­யப்­பட்ட இக் குழு­வினர் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து புறப்­பட்டு புனித மதீனா நகரை வந்­த­டைந்­தனர். அத்­துடன் மேலும் 15 நாடு­க­ளி­லி­ருந்தும் விருந்­தி­னர்கள் மதீ­னாவை வந்­த­டைந்­தனர். இவர்­க­ளுக்கு சவூதி அரே­பிய இஸ்­லா­மிய விவ­கா­ரங்கள், அழைப்பு மற்றும் வழி­காட்டல் அமைச்சின் அதி­கா­ரி­களால் பெரு வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

 

பங்­க­ளாதேஷ், ரஷ்யா, தஜி­கிஸ்தான், அவுஸ்­தி­ரே­லியா, இலங்கை, மாலை­தீ­வுகள், இந்­தியா, கஸ­கஸ்தான், பாகிஸ்தான், அஸர்­பைஜான், நேபாளம், துருக்கி, கொசோவோ, கிர்­கிஸ்தான், துர்க்­மெ­னிஸ்தான் மற்றும் நியூ­சி­லாந்து ஆகிய நாடு­களைச் சேர்ந்த 250 பேரே தற்­போது சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தந்­துள்­ளனர்.

முதலில் மதீ­னா­வுக்கு விஜயம் செய்த இக்­கு­ழு­வினர், மஸ்­ஜிதுந் நப­வியில் பிரார்த்­த­னை­களில் ஈடு­பட்­ட­துடன் நபி­க­ளாரின் அடக்­கஸ்­த­லத்­தையும் தரி­சித்­தனர். அத்­துடன் குபா பள்­ளி­வாசல், உஹத் மலை­ய­டி­வாரம் உள்­ளிட்ட வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க தலங்­க­ளுக்கு விஜயம் செய்­த­துடன் நபி­க­ளாரின் வாழ்க்கை வர­லாறு மற்றும் இஸ்­லா­மிய நாக­ரிகம் (International Fair and Museum of the Prophet’s Biography and Islamic Civilization) தொடர்­பான அருங்­காட்­சி­ய­கத்­தையும் பார்­வை­யிட்­டனர். மேலும் மதீ­னாவில் அமைந்­துள்ள மன்னர் பஹத் அல்­குர்ஆன் அச்­சிடும் நிலை­யத்­தையும் பார்­வை­யிட்­டனர்.

மதீனா இமா­முடன் சந்­திப்பு
புனித உம்றா கட­மைக்­காக வருகை தந்­தி­ருக்கும் 16 நாடு­க­ளையும் சேர்ந்த 250 விருந்­தி­னர்­க­ளுக்கும் புனித மஸ்­ஜிதுந் நப­வியின் இமாம்­களில் ஒரு­வ­ரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதை­பிக்கும் இடை­யி­லான சந்­திப்பு ஒன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை இஷா தொழு­கையைத் தொடர்ந்து இடம்­பெற்­றது.
இதன்­போது புனித அல் குர்­ஆனின் சில வச­னங்­களை அழ­குற ஓதி நிகழ்வை ஆரம்­பித்த இமாம் ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபி, விருந்­தி­னர்­க­ளுக்கு சில உப­தே­சங்­க­ளையும் வழங்­கினார். அத்­துடன் விருந்­தி­னர்­க­ளுடன் தனித்­த­னி­யாக சலாம் கூறி வாழ்த்­துக்­க­ளையும் தெரி­வித்தார்.

இமாம் அவர்கள் இந்­நி­கழ்வில் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில், “நெருக்­க­டிகள் ஏற்­ப­டும்­போது அந்­தந்த நாடு­களின் முஸ்லிம் ஆட்­சி­யா­ளர்­களின் ஆலோ­ச­னைகள், வழி­காட்­டல்­களைப் பின்­பற்­றியே இந்த விட­யத்தில் முஸ்­லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் ஆட்­சிக்குப் பொறுப்­பா­ன­வர்கள் இவ்­வா­றான நெருக்­க­டிகள், பிரச்­சி­னைகள், வெளி­நாட்டு விவ­கா­ரங்கள் தொடர்பில் தீர்­மா­னங்­களை எடுப்­பார்கள். ஒரு முஸ்லிம் சக முஸ்­லி­முக்­காக துஆ செய்­வதன் மூலம் தனது கட­மையை நிறை­வேற்ற முடியும்” என்றும் இமாம் அல் ஹுதைபி குறிப்­பிட்டார்.
அல்லாஹ் தங்­க­ளுக்கு வழங்­கிய அருட்­கொ­டை­க­ளுக்கு நன்றி செலுத்­து­வதன் முக்­கி­யத்­து­வத்தை நினைவில் கொள்­ளு­மாறும் இமாம் அல் ஹுதைபி மன்­னரின் விருந்­தி­னர்­க­ளாக வருகை தந்­த­வர்­களை வலி­யு­றுத்­தினார்.

“ஒரு முஸ்லிம் அடைய வேண்­டிய மிகப் பெரிய மற்றும் உயர்ந்த நம்­பிக்கை, சர்வ வல்­ல­மை­யுள்ள அல்­லாஹ்வின் மகத்­தான, எண்­ணற்ற அருள்­க­ளுக்­காக நன்றி செலுத்­து­வ­தாகும், ஆனால் பெரும்­பா­லான மக்கள் நன்றி செலுத்­து­வ­தில்லை” என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இரண்டு புனித தலங்­களின் பாது­கா­வ­ல­ரான மன்­னரின் விருந்­தி­னர்­க­ளுக்கு உம்ரா செய்­வ­தற்கு கிடைத்த பாக்­கி­யத்­திற்­காக அனை­வரும் அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் இமாம் அல் ஹுதைஃபி குறிப்­பிட்டார்.

மக்கா இமா­முடன் சந்­திப்பு
பத்து தினங்­களைக் கொண்ட இந்த விஜ­யத்தில் முதல் 5 தினங்கள் மதீ­னாவில் தங்­கி­யி­ருந்த இவ்­வி­ருந்­தி­னர்கள் இறுதி 5 தினங்கள் மக்­காவில் தங்­கி­யி­ருப்பர். ரமழான் முதல் பிறை அன்று புனித மக்­காவை வந்­த­டைந்த இக் குழு­வினர் உம்ரா கட­மையை நிறை­வேற்­றி­ய­துடன் ரழமான் மாத அமல்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் மக்­கா­வி­லுள்ள இஸ்­லா­மிய வர­லாற்றுத் தலங்­களை தரி­சிக்­க­வுள்­ள­துடன் மக்கா ஹரம் ஷரீபின் இமாம்­களில் ஒரு­வ­ரு­ட­னான சந்­திப்­பிலும் பங்­கேற்­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இஸ்­லா­மிய அறி­ஞர்­களை, புத்­தி­ஜீ­வி­களை சந்­திக்கும் வாய்ப்பு
இதே­வேளை, இந்த விஜயம் குறித்து கருத்து வெளி­யிட்ட இலங்கை தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் ரமீஸ் அபூ­பக்கர், “உலகின் பல நாடு­க­ளி­லி­ருந்தும் 1000 பிர­மு­கர்­களைத் தெரிவு செய்து இவ்­வா­றா­ன­தொரு பாக்­கி­யத்தை வழங்­கி­ய­மைக்­காக விருந்­தி­னர்கள் அனை­வரும் இரு புனித தலங்­களின் பாது­கா­வ­ல­ரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்­டத்து இள­வ­ர­சரும் பிர­த­ம­ரு­மான முஹம்மத் பின் சல்மான் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளனர். புனித உம்ரா கடமையை நிறைவேற்றியது மாத்திரமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள இஸ்லாமிய அறிஞர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக பேராசிரியர்களை சந்திக்கவும் அவர்களுடனான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும் முடிந்தமை மற்றுமொரு பாக்கியமாகும். அது மாத்திரமன்றி இதுவரை நூல்களில் வாசித்த, உரைகளில் கேட்டறிந்த இஸ்லாமிய வரலாற்றுத் தலங்களை நேரில் தரிசித்து அவற்றின் வரலாற்றை மேலும் உறுதிப்படுத்தவும் இலகுவாக விளங்கிக் கொள்ளவும் இந்த விருந்தினர் திட்டம் பெரும் உதவியாக அமைந்தது ” என்றார்.

மேலும் பெறுமதிமிக்க இந்தப் புனித பயணத்தை ஏற்பாடு செய்ததுடன் உலகின் ஏனைய நாடுகளிலிருந்தும் வருகை தந்த முஸ்லிம் உறவுகளுடன் தொடர்பாடுவதற்கும் சகோதரத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்காக இலங்கைக்காக சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானிக்கு இலங்கைக் குழுவினர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.