நாசர் வைத்தியசாலையில் பலஸ்தீன டாக்டர்கள் மீது இஸ்ரேல் சித்திரவதை

பி.பி.சி. யின் ஆய்வில் நிரூபிக்கப்பட்டது

0 139

ஏ.ஆர்.ஏ.பரீல்

“நாங்கள் கண்கள் கட்­டப்­பட்டு, தடுத்து வைக்­கப்­பட்டு பல­வந்­த­மாக ஆடை­யினைக் களையச் செய்து இஸ்­ரே­லியப் படை­யி­னரால் தொடர்ச்­சி­யாகத் தாக்­கப்­பட்டோம். அண்­மையில் எமது வைத்­தி­ய­சா­லையில் இஸ்­ரே­லிய படை­களால் திடீ­ரென தாக்­குதல் மேற்­கொண்­டதன் பின்பே இந்த நிலைமை எமக்கு ஏற்­பட்­டது” என காஸாவின் பலஸ்­தீன நாசர் வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் உட்­பட வைத்­திய சேவை­யா­ளர்கள் தெரி­வித்­தனர்.

நாசர் வைத்­தி­ய­சா­லையின் டாக்டர் அஹமட் அபு சபா தெரி­விக்­கையில், ‘என்னை ஒரு வார காலம் தடுத்து வைத்­தி­ருந்­தனர். அங்கு நீண்ட மூக்கும், வாயும் கொண்ட நாய்கள் இருந்­தன. இஸ்­ரே­லிய போர் வீரர்­களால் எனது கை உடைக்­கப்­பட்­டது’ என்றார்.

“இஸ்­ரே­லிய படை­யினர் எங்­களைத் தாக்­கி­னார்கள். முழங்­காலில் பல மணி நேரம் நிற்கச் செய்­தார்கள். நாங்கள் விடு­விக்­கப்­ப­டு­வ­தற்கு ஒரு நாளுக்கு முன்பு இவ்­வாறு எம்மை பல­வந்­தப்­ப­டுத்­தி­னார்கள்” என்றும் வைத்­தி­யா­சாலை வைத்­திய சேவையைச் சேர்ந்­த­வர்கள் பிபிசி செய்திச் சேவைக்குத் தெரி­வித்­தார்கள்.

வைத்­தி­யர்­களின் குறிப்­பிட்ட குற்­றச்­சாட்­டு­களை பிபிசி இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யி­ன­ரிடம் (IDF) முன்­வைத்­தது. இஸ்­ரே­லிய பாது­காப்­பு­படை இக் குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்­தது. வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்கள் முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­களை மறுத்­த­துடன் வைத்­தி­யர்கள் மீது தாக்­குதல் நடத்­த­வில்லை எனத் தெரி­வித்­தது.

எனினும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் ஏனைய வைத்­தி­ய­சாலை டாக்­டர்கள் பிபி­சிக்கு முக்­கி­ய­மான தக­வல்­களை வழங்­கி­னார்கள். வைத்­தி­ய­சா­லையின் முபாரக் என்­ற­ழைக்­கப்­படும் பிர­சவ கட்­டிடம் இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யி­னரால் வைத்­தி­ய­சாலை பணி­யா­ளர்­களை சித்­தி­ர­வதை செய்யும் நிலை­ய­மாகப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. வைத்­தி­ய­சா­லையை இஸ்­ரே­லிய படைகள் ஆக்­கி­ர­மித்­ததும் என்னை நோயா­ளர்­க­ளுடன் இருக்­கு­மாறு பணித்­தார்கள். பின்பு என்னை முபாரக் என்­ற­ழைக்­கப்­படும் பிர­சவ கட்­டி­டத்­துக்கு அழைத்துச் சென்­றார்கள். அவ் இடம் ஓர் சித்­தி­ர­வதை முகா­மாக செயற்­பட்­டது என டாக்டர் அபு­சபா தெரி­வித்தார்.

இஸ்­ரே­லிய படை­யினர் என்னை ஓர் கதி­ரையில் அமர்த்­தி­னார்கள். அது ஒரு தூக்கு மேடை போன்­றி­ருந்­தது. அங்கு கயிறு இழுப்­பது போன்ற சப்­தமும் கேட்­டது. அப்­போது நான் கொலை செய்­யப்­படப் போகி­றேனோ என்று நினைத்தேன். பின்பு அவர்கள் கண்­ணாடி போத்­த­லொன்­றினை உடைத்­தார்கள்.அக் கண்­ணா­டியின் மூலம் எனது காலை வெட்­டி­னார்கள். இரத்தம் பீறிட்டுப் பாய்ந்­தது. பின்பு ஒரு டாக்­ட­ரையும் அழைத்து வந்து அருகில் நிறுத்­தி­னார்கள் என்றார்.

ஆனால் இஸ்­ரே­லிய பாது­காப்பு படை­யினர் இந்தக் குற்­றச்­சாட்­டுகள் அனைத்­தையும் மறுத்­தார்கள். தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த மூவர் கூட்­டாக பிபி­சி­யிடம் தங்­க­ளுக்கு நடந்­ததைத் தெரி­வித்­தார்கள். நாங்கள் இரா­ணுவ வாக­னத்­துக்குள் பல­வந்­த­மாக ஏற்­றப்­பட்டு தாக்­கப்­பட்டோம். பெரும் எண்­ணிக்­கை­யானோர் இவ்­வாறு தாக்­கப்­பட்­டார்கள் என்று தெரி­வித்­தார்கள்.

நாங்கள் நிர்­வா­ண­மாக்­கப்­பட்டோம். ஒருவர் மீது ஒருவர் ஏற்­றப்­பட்டு காஸா­வுக்கு வெளியில் அழைத்துச் செல்­லப்­பட்டோம். அவர்கள் எம்மைத் தாக்கி குளிர்ந்த நீரினை எம்­மீது வார்த்­தார்கள் என்றார்.

டாக்டர் அபு­சபா தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ‘ இஸ்­ரே­லிய படை­யினர் எம்மைத் தாக்கி அழைத்துச் செல்­கையில் கிரவல் கற்கள் நிறைந்த திட­லொன்­றுக்கு எம்மை கொண்டு சென்­றார்கள். எமது கண்­களைக் கட்டி அங்கு முழங்­காலில் நிற்­கு­மாறு பல­வந்­தப்­ப­டுத்­தி­னார்கள். எம்மை அங்கு கொலை செய்து புதைப்­பார்கள் என்றே நாம் நினைத்தோம். நாங்கள் எல்­லோரும் அப்­போது இறை­வனை பிரார்த்­தித்தோம். எனது கைகள் பின்னால் கட்­டப்­பட்­டி­ருந்­தன.

என்னை தண்­டனை வழங்­கு­வ­தற்கு கொண்டு சென்­றார்கள். கைகளை கால்­க­ளாகப் பாவித்து நிற்க வைத்­தார்கள். ஒரு வீரர் என்னை அப்­ப­டியே அவ­ரிடம் நகர்ந்து வரு­மாறு கூறினார். எனது கைகளை உடை­யும்­வரை தாக்­கி­னார்கள் என்றார் டாக்டர் அபு­சபா.

இவ்­வாறு தாக்­கப்­பட்ட டாக்டர் அபு­சபா பின்பு எக்ஸ்ரே எடுத்து தனது உடைந்த கைக­ளுக்கு காஸா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்றார் என்­பதை பிபிசி உறு­திப்­ப­டுத்­தி­யது.

இதே­வேளை நாசர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வரும் நோயா­ளி­களை பரா­ம­ரிப்­ப­தற்கு சில சுகா­தார ஊழி­யர்­க­ளுக்கே அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இஸ்ரேல் நாசர் வைத்­தி­ய­சா­லையை ஆக்­கி­ர­மிப்பு செய்த போது சில நோயா­ளர்­களைத் தடுத்து வைத்­துள்­ளது.

நோயா­ளிகள் வைத்­தி­ய­சா­லை­யினுள் அவர்­க­ளது கைகள் கட்­டிலில் கட்­டப்­பட்­ட­வாறு வைக்­கப்­பட்­டி­ருக்கும் வீடியோ பதி­வுகள் வெளி­யா­கி­யுள்­ளன. இவர்கள் நோயா­ளி­களா இன்றேல் வேறு எவ­ருமா என்­பதை அறிய முடி­யா­துள்­ளது.
தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்கள் இவ்­வா­றான நிலை­மையில் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­ய­ளிக்­கப்­ப­டு­வ­தாக இஸ்­ரே­லிய பாது­காப்பு படை தெரி­வித்­துள்­ளது.

பிபிசி நாசர் வைத்­தி­ய­சா­லையின் நிலைமை பற்றி பல வாரங்­க­ளாக ஆராய்ந்து டாக்­டர்கள், தாதியர், மருந்­த­கர்­க­ளிடம் தக­வல்­களைச் சேக­ரித்­துள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் நாசர் வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய சேவை­யா­ளர்கள் இஸ்­ரே­லினால் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளது பெயர் விப­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களில் 3 வைத்­தி­யர்கள் விடு­விக்­கப்­பட்­டனர். அவர்­களில் டாக்டர் அபு­ச­பாவும் ஒரு­வ­ராவார்.

இஸ்ரேல் படை­யினர் வைத்­தி­ய­சாலை கட்­டி­டத்தை விட்டும் வெளி­யேறக் கூடாது என உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளனர். இதனால் டாக்­டர்கள் உத்­த­ர­வினை மீறினால் தாம் துப்­பாக்கி சூட்­டுக்கு ஆளா­கலாம் என அச்­சத்­தி­லுள்­ளனர் என அல் நாசர் வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­றிய டாக்டர் ஹாத்திம் ரபா தெரி­வித்­துள்ளார். பிபி­சிக்கு தொலை­பே­சி­யூ­டாக இத்­த­க­வலை அவர் வழங்­கி­யுள்ளார்.

‘மக்கள் தாகத்­தினால் இறக்­கி­றார்கள். நான் எனது தோளில் மூன்று கலன் தண்­ணீரை சுமந்து சென்று மக்­க­ளுக்கு வழங்­கினேன். வேறு என்­னதான் என்னால் செய்ய முடியும்’ என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அல் நாசர் வைத்­தி­ய­சா­லையை இஸ்ரேல் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கிய போது பலி­யான நோயா­ளி­களின் உடல்­களை அகற்­று­வ­தற்கோ அடக்கம் செய்­வ­தற்கோ இஸ்ரேல் பாது­காப்பு படை அனு­மதி வழங்­க­வில்லை. இதனால் சட­லங்கள் வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரி­ப­வர்கள் மற்றும் நோயா­ளிகள் மத்­தியில் கிடந்­தன என்றும் அவர் பிபி­சிக்குக் கூறி­யுள்ளார்.

கொடூ­ர­மான குற்­றங்­களை முடிவுக்கு கொண்டு வாருங்கள்

ஐந்து மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் காஸா மீது போர் என்ற பெயரில் புரிந்து வரும் கொடூரமான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு சவூதி அரேபிய மன்னர் சல்மான் அறைகூவல் விடுத்துள்ளார். இந்த அழைப்பு சவூதி மன்னர் சல்மானின் ரமழான் வாழ்த்துச் செய்தி ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலினால் முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவில் நடக்கும் போர் புனித மாதமான நோன்பு மற்றும் பிரார்த்தனைகள் மீது ஓர் நிழலை ஏற்படுத்தும் என்னும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் புனித ரம­ழானை வர­வேற்கும் நாம் காஸாவில் தொடர்ச்­சி­யான தாக்­கு­தல்கள் ஆக்­கி­ர­மிப்­பு­களை எதிர்­கொள்ளும் பலஸ்­தீன சகோ­த­ரர்­களின் துன்­பங்­க­ளுக்­காக கவ­லை­யு­று­கிறோம். இதயம் துக்­கத்­தினால் கனக்­கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.