கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

0 194

றிப்தி அலி

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.

இத­னா­லேயே கிழக்கு மாகாணம் வடக்­குடன் இணைக்­கப்­ப­டாது தனி மாகா­ண­மாக இயங்க வேண்டும் என்று பெரும்­பா­லான கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு உயர் நீதி­மன்­றத்­தினால் வழங்­கப்­பட்ட தீர்ப்­பினை அடுத்து கிழக்கு மாகாணம் தனி மாகா­ண­மா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. அன்­றி­லி­ருந்து இந்த மாகா­ணத்தின் அனைத்து முக்­கிய பத­வி­களும் இன விகி­தி­சார அடிப்­ப­டை­யி­லேயே பகி­ரப்­பட்டு வரு­கின்­றமை முக்­கிய விட­ய­மாகும்.
குறிப்­பாக இந்த மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து அமைச்­சுக்­களின் செய­லாளர் பத­வி­க­ளுக்கு இரண்டு முஸ்­லிம்­களும், இரண்டு தமி­ழர்­களும், ஒரு சிங்­க­ள­வரும் நிய­மிக்­கப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

இதற்கு மேல­தி­க­மாக ஆளு­நரின் செய­லா­ள­ராக சிங்­கள சமூ­கத்­தினைச் சேர்ந்த ஒரு­வரே செயற்­ப­டுவார். அத்­துடன், கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள திணைக்­க­ளங்­களின் தலைவர் பத­வி­களும் இன விகி­தா­சார அடிப்­ப­டையில் நிரப்­பப்­ப­டு­வது வழ­மை­யாகும்.

இவ்­வா­றான நிலையில், கிழக்கு ஆளு­ந­ராக செந்தில் தொண்­டமான் நிய­மிக்­கப்­பட்ட பின்னர் சிவில் சேவை­யினைச் சேர்ந்த முஸ்­லிம்­க­ளுக்கு முக்­கிய எந்தப் பத­வி­களும் வழங்­கப்­ப­டாமல் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. இது குறித்த கடந்த வாரம் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கும் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாண முத­ல­மைச்சின் செய­லா­ள­ராக யூ.எல்.ஏ. அஸீஸ் மற்றும் மாகாண சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ராக ஏ.எச்.எம். அன்சார் ஆகியோர் கட­மை­யாற்றி ஓய்­வு­பெற்­றனர்.

இவர்கள் இரு­வ­ரி­னதும் ஓய்­வினை அடுத்து அவர்­க­ளது இடத்­திற்கு வேறு முஸ்லிம் அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.
கிழக்கு மாகாண ஆளு­ந­ராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ் நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள தமிழ் அர­சி­யல்­வா­திகள் பாரிய எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர்.

“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு அமைச்சிற்கு முஸ்லிம் சிவில் அதிகாரியை நியமிக்க முடியாத இந்த முஸ்லிம் எம்.பிக்கள், எப்படி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருவார்கள் என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.”

 

ஆனால், கிழக்கு மாகா­ணத்தின் முத­லா­வது தமிழ் ஆளு­ந­ராக செந்தில் தொண்­டமான் நிய­மிக்­கப்­பட்ட போது கிழக்கு வாழ் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மக்­களும் அவரின் நிய­ம­னத்­தினை வர­வேற்­றனர். எனினும், அவர் கட­மை­களை பொறுப்­பேற்ற பின்னர் கிழக்கு மாகாண சபையில் கட­மை­யாற்­றிய முஸ்லிம் சிவில் அதி­கா­ரி­க­ளுக்கு உரிய இடத்தை வழங்க தவ­றி­யமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், ஆளு­ந­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற முக்­கிய பத­விகள் எதிலும் முஸ்­லிம்கள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இதற்கு எதி­ராக கண்­ட­னங்கள் வெளி­யி­டப்­பட்­டன. குறிப்­பாக ஐக்­கிய மக்கள் சக்­தியின் திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தொடர்ச்­சி­யாக இது விட­ய­மாக கண்­ட­னத்தை வெளி­யிட்டு வரு­கின்றார்.

பாரா­ளு­மன்­றத்­திலும் இது விட­ய­மாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­துடன், கடிதம் மூலம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­விற்கும் அறி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே இலங்கை சிவில் சேவையில் சிரேஷ்ட அதி­கா­ரி­யான சம்­மாந்­து­றையைச் சேர்ந்த ஏ.மன்சூர், கிழக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். அத்­துடன் சம்­மாந்­துறை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பினர் ரனுஸ் இஸ்­மாயில், மாகாண வீட­மைப்பு அதி­கார சபையின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

கிழக்கு மாகா­ணத்தில் பொதுச் சேவைகள் ஆணைக்­குழு, சுற்­றுலா பணி­யகம், வீட­மைப்பு அதி­கார சபை, கூட்­டு­றவு ஆணைக்­குழு மற்றும் போக்­கு­வ­ரத்து அதி­கார சபை என ஐந்து திணைக்­க­ளங்கள் காணப்­ப­டு­கின்­றன.

இதில் பெரும்­பா­லான நிறு­வ­னங்­களின் தலை­வர்கள் கிழக்கு மாகா­ணத்­திற்கு வெளி­யி­லி­ருந்தே நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். அது மாத்­தி­ர­மல்­லாமல், ஒரே­யொரு நிறு­வ­னத்தின் தலைவர் மாத்­தி­ரமே முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து நிய­மனம் செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலையில், கிழக்கு மாகாண வீதி அபி­வி­ருத்தி அமைச்சின் செய­லா­ள­ராக செயற்­பட்ட மன்சூர், திடீ­ரென குறித்த பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழுவின் செய­லா­ள­ராக ஆளுநர் செந்தில் தொண்­ட­மா­னினால் நிய­மிக்­கப்­பட்டார். எனினும், இவ­ருடன் கனிஷ்ட நிலை­யி­லுள்­ள­வர்கள் மாகாண அமைச்­சுக்­களின் பதில் செய­லா­ளர்­க­ளா­கவும், சில நிறு­வ­னங்­களின் ஆணை­யா­ளர்­க­ளா­கவும் செயற்­ப­டு­கின்­றனர்.
இதே­வேளை, மேற்­படி தரத்­தினைச் சேர்ந்த ஏ.எல்.எம். அஸ்­மிக்கு எந்­த­வித உயர் பத­வி­களும் வழங்­கப்­ப­டாமல், கல்­முனை மாந­கர சபையின் ஆணை­யாளர் பதவி மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகாண அமைச்­சுக்­களின் பதில் செய­லா­ள­ராக செயற்­ப­டு­வர்­களை விட சிரேஷ்ட நிலை­யி­லுள்ள எம்.எம். நசீர் மற்றும் றிபா அப்துல் ஜெலீல் ஆகி­யோ­ருக்கு எந்­த­வித அதி­கா­ர­மு­மற்ற பிரதிப் பிர­தம செய­லாளர் பத­வி­களே வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு மேல­தி­க­மாக நிதிக்­கான பிரதிப் பிர­தம செய­லா­ள­ராக ஏ.எம்.எம். றபீக், பல்­வேறு போராட்­டங்­களின் பின்­னரே நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கிழக்கு ஆளு­ந­ரினால் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் சிவில் அதி­கா­ரிகள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்ற விடயம் தொடர்பில் அம்­பாறை மாவட்ட பாரா­ளுன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம். முஷா­ர­பிடம் அண்­மையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றின் போது கேள்வி எழுப்­பப்­பட்­டது. கிழக்கு ஆளு­ந­ருடன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷாரப் மிகவும் நெருங்கிச் செயற்­பட்டு வரு­கிறார்.

இக் கேள்­விக்கு பதி­ல­ளித்த முஷாரப் எம்.பி. “ கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள சிவில் அதி­கா­ரி­க­ளுக்கு போதிய மொழி அறி­வில்லை. இத­னா­லேயே அவர்கள் மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­ட­வில்லை” என குறிப்­பிட்­டி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மல்­லாமல், சில முஸ்லிம் சிவில் அதி­கா­ரி­களின் பெயர்­க­ளையும் இந்த ஊடக மாநாட்டில் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார். இத­னை­ய­டுத்து இக் கூற்று தொடர்பில் பாரி­ய­ள­வி­லான விமர்­ச­னங்கள் முஷாரப் எம்.பிக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­ட­துடன் நேரடி விவாத்­தத்­திற்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.
எனினும், இந்த விமர்­ச­னத்­திற்கோ, விவாத அழைப்­பிற்கோ இது­வரை முஷாரப் எம்.பியி­ட­மி­ருந்து எந்­த­வித பதிலும் வெளி­யா­க­வில்லை.

இதே­வேளை, “மிக விரைவில் முஸ்லிம் சிவில் அதி­கா­ரிகள் கிழக்கு மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வார்கள்” எனவும் குறித்த ஊடக மாநாட்டில் முஷாரப் எம்.பி குறிப்­பிட்­டி­ருந்தார். எனினும், அந்த நிய­மனம் எப்­போது இடம்­பெறும் என அவர் கூற­வில்லை.

இவ்­வா­றான நிலையில், ஜனா­தி­பதி தலை­மையில் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஐந்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஆளுநர் செந்­தி­லுக்கும் இடை­யி­லான முக்­கிய சந்­திப்­பொன்று கடந்த 6ஆம் திகதி புதன்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­டிடத் தொகு­தியில் இடம்­பெற்­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஏ.எல்.எம். அதா­உல்லா, அலி ஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் எஸ்.எம்.எம். முஸாரப் ஆகியோர் இந்த கூட்­டத்தில் கலந்­து­கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாவர்.

“சுமார் 44 சத­வீத முஸ்­லிம்கள் வாழும் கிழக்கு மாகா­ணத்தில் எந்­த­வொரு மாகாண அமைச்சின் செய­லாளர் பத­விக்கும் முஸ்லிம் சிவில் அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை” என இக்­கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து இரண்டு மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக முஸ்லிம் சிவில் அதி­கா­ரி­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கிழக்கு ஆளு­ந­ருக்கு அறி­வு­றுத்­தினார்.

இதற்­க­மைய, சிரேஷ்ட தரத்­தி­லுள்ள மூன்று முஸ்லிம் சிவில் அதி­கா­ரி­களின் பெயர்கள் கிழக்கு ஆளு­ந­ரிடம் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் வழங்­கப்­பட்­டது.

துர­திஷ்­ட­வ­ச­மாக, குறித்த சந்­திப்பு இடம்­பெற்று ஒரு வாரங்கள் கழிந்­துள்ள நிலை­யிலும், கிழக்கு மாகாண அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக இது­வரை எந்­த­வொரு முஸ்­லிம்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றான நிலையில், கிழக்கு மாகாண விவ­சாய அமைச்சின் செய­லா­ள­ராக செயற்­ப­டு­கின்ற ஐ.கே.ஜீ. முத்து பண்­டார கடந்த வாரம் ஓய்­வு­பெற வேண்­டி­யி­ருந்­தது. எனினும், அவ­ரது சேவைக் காலம் மேலும் மூன்று மாத காலங்­க­ளிக்கு கிழக்கு மாகாண ஆளு­ந­ரினால் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட அம்­பாறை மாவட்ட ஆசி­ரி­யர்­களின் இட­மாற்­றத்­தினை நிறுத்­து­வ­தற்­கான கோரிக்­கைக்கு எந்­த­வி­த­மான சாதக தீர்­வு­களும் இது­வரை கிடைக்­க­வில்லை.

முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள ஒரு அமைச்­சிற்கு முஸ்லிம் சிவில் அதி­கா­ரியை நிய­மிக்க முடி­யாத இந்த முஸ்லிம் எம்.பி.க்கள், எப்­படி இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்றுத் தரு­வார்கள் என்ற நியா­ய­மான கேள்வி இன்று எல்லோர் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளது.

அர­சாங்­கத்­திற்கு இரகசியமாக ஆதரவளிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முஸ்லிம் சிவில் அதிகாரிகளை கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவர்களின் தலையாய கடமையாகும்.

கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை வைத்து அரசியல் செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோரும் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அது மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை்உணர்ந்து, ஜனாதிபதியின் உத்தரவுக்கிணங்க முஸ்லிம் சிவில் அதிகாரிகளை உடனடியாக கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே, கிழக்கில் வாழும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்துச் செல்வதற்கும் மாகாணத்தில் இன சௌஜன்யத்தை பேணுவதற்கும் முடியுமாகவிருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.