“நிக்காஹ்’ பயான்களை செவிமடுக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்

விவாகரத்துகளை தடுப்பது குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்து

0 87

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்து வரும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து உட்­பட ஏனைய விவா­க­ரத்­துகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பில் இடம்­பெற்­றது.

கொழும்பு சிலிடா (SLIDA) கல்வி நிறு­வ­னத்தில் இடம்­பெற்ற குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலை சிலிடா கல்வி நிறு­வ­னத்தின் கல்வி ஆலோ­சகர் அப்துல் ரஸாக் ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

கலந்­து­ரை­யா­டலில் நாட்டில் அதி­க­ரித்துவரும் விவா­க­ரத்­து­களை எவ்­வாறு குறைக்க முடியும் என்­பது பற்­றியும் திரு­மண பந்­தத்தில் இணை­ய­வுள்ள தம்­ப­தி­க­ளுக்கு விவா­கத்­துக்கு முன்பு விவாகம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடாத்­து­வது பற்­றியும் கருத்­துகள் பரி­மா­றப்­பட்­டன.

பாட­சாலை மட்­டத்­திலும், பள்­ளி­வா­சல்கள் உட்­பட மத நிலை­யங்­க­ளிலும் இவ்­வா­றான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சி­களை நடாத்தத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அப்துல் ரஸாக் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்­களில் நிக்காஹ் பயான்கள் இடம்­பெறும்போது அந்­நி­கழ்­வுக்கு பெண்­களும் அழைக்­கப்­பட வேண்டும் எனவும் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­டது. ‘வொலி’யின் சம்­ம­த­மின்றி விவாகம் செய்து கொள்­வ­தற்­காக வீட்டை விட்டு வெளி­யேறிச் செல்லும் முஸ்லிம் பெண்கள் ‘வொலி’ அனு­ம­திப்­பத்­திரம் பெற்றுக் கொள்­வ­தற்­காக காதி­நீ­தி­மன்­றங்­களை நாடும்­போது அவர்­க­ளுக்கும் திரு­மண வாழ்க்கை தொடர்­பான கவுன்­சலிங் வழங்­கப்­பட வேண்டும் என்றும் ஆலோ­சனை முன்­வைக்­கப்­பட்­ட­தாக பாணந்­துறை முஸ்லிம் விவாக பதி­வாளர் குவாமி பாரூக் தெரி­வித்தார்.

நாட்டில் விவா­க­ரத்­து­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­ட­மொன்­றினைத் தயா­ரித்து அர­சாங்கம் மற்றும் ஏனைய நிறு­வ­னங்­களின் அனு­ச­ர­ணை­யுடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் அப்துல் ரஸாக் தெரி­வித்தார்.
குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை விவாகம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் சங்கத்தின் தலைவர் துஷ்மன்த கருணாநாயக்க உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் பொது விவாக பதிவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.