காஸாவில் அவலம் – பட்டினியால் சிறுவர்கள் பலி

0 75

ஏ.ஆர்.ஏ.பரீல்

காஸாவின் வட­ப­கு­தியில் பட்­டி­னியால் சிறு­வர்­களும், குழந்­தை­களும் இறந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் (WHO) தலைவர் Tedros Adhamom Ghebreyesus தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் அக்­டோபர் மாதம் முதல் இடம்­பெற்று வரும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்­க­ளை­ய­டுத்து முதற்­த­ட­வை­யாக கடந்த வார இறு­தியில் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பிர­தி­நி­திகள் அல் அவ்தா மற்றும் கமால் அத்வான் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு விஜ­யமொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த விஜ­யத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அவர் குறிப்­பிட்ட தக­வல்­களை வெளி­யிட்­டுள்ளார்.

வைத்­தி­ய­சாலை கட்­டி­டங்கள் தாக்­கு­தல்­களால் சிதைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அங்கு போஷாக்­கின்மை, உடலில் நீர் பற்­றாக்­குறை கார­ண­மாக 10 சிறு­வர்கள் இறந்­துள்­ளனர் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

இதே­வேளை காஸா­வி­லுள்ள ஹமாஸின் சுகா­தார அமைச்சு, காஸா­வி­லுள்ள கமால் அத்வான் வைத்­தி­ய­சா­லையில் மாத்­திரம் போஷாக்­கின்மை மற்றும் உடலில் நீர் பற்­றாக்­குறை கார­ண­மாக 15 சிறு­வர்கள் இறந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை 16ஆவது குழந்தை காஸாவின் தெற்கு நக­ரான ரஃபா வைத்­தி­ய­சா­லையில் இறந்­துள்­ள­தாக பலஸ்தீன் உத்­தி­யோ­க­பூர்வ செய்தி நிறு­வ­ன­மான வபா (WAFA) தெரி­வித்­துள்­ளது. இந்த 16ஆவது குழந்தை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இறந்­துள்­ளது.

போஷாக்­கின்மை மற்றும் பட்­டி­னியால் பிள்­ளைகள் இறந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். வட காஸா வைத்­தி­ய­சா­லை­களில் உணவு மற்றும் வைத்­திய உப­க­ர­ணங்கள், மருந்­து­க­ளுக்குத் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. எரி­பொருள் தட்­டுப்­பாடும் நில­வு­கி­றது. வைத்­தி­ய­சாலை கட்­டி­டங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன என டாக்டர் டெட்­ரோஸ்­கு­றிப்­பிட்­டுள்ளார். மூன்று இலட்சம் மக்கள் சிறிது உணவு மற்றும் குடி­நீ­ருடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.
காஸாவில் பட்­டினி தவிர்க்க முடி­யா­த­தாக மாறி­யுள்­ளது என ஐக்­கிய நாடுகள் கடந்த வாரம் எச்­ச­ரித்திருந்­த­து.

காஸாவின் சனத்­தொ­கையில் ¼ வீத­மான மக்கள் மிகவும் மோச­மான உணவுப் பற்­றாக்­கு­றைக்­குள்­ளா­கி­யுள்­ளனர் என்றும் ஐ.நாவின் அதி­கா­ரிகள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். காஸாவின் வட­ப­கு­தியில் 6 சிறு­வர்­க­ளுக்கு ஒருவர் வீதம் இரண்டு வய­துக்­குட்­பட்­ட­வர்கள் போஷாக்­கின்­மையால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

போஷாக்­கின்மை கார­ண­மாக நிகழும் சிறுவர் மர­ணங்கள் பெரும் பீதியை இப்­பி­ராந்­தி­யத்தில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என யுனி­செப்பின் பிராந்­தியப் பணிப்­பாளர் தெரி­வித்­துள்ளார். போஷாக்­கின்மை காஸாவில் குழந்­தை­க­ளையும் சிறு­வர்­க­ளையும் பலி­யெ­டுத்து வரு­கி­றது என்றும் அவர் கவலை வெளி­யிட்­டுள்ளார்.

அமெ­ரிக்­காவின் வான்­வ­ழி­யான உணவு விநி­யோகம்
அமெ­ரிக்கா கடந்த சனிக்­கி­ழமை உணவுப் பொருட்கள் மற்றும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களை வான்­வ­ழி­யாக தரை­யி­றக்­கி­யது. கடந்த சனிக்­கி­ழமை 38ஆயிரம் உணவுப் பொதிகள் காஸாவில் தரை­யி­றக்­கப்­பட்­டது.
ஏற்­க­னவே இதற்கு முன்பு ஐக்­கிய இராச்­சியம், பிரான்ஸ், எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் காஸா மக்­க­ளுக்கு வான் வழி­யாக உதவிப் பொருட்­களை தரை­யி­றக்­கின என உதவி நிவா­ரண நிறு­வ­னங்கள் தெரி­வித்­தன. ஆனால் இந்த நிவா­ரண உத­வி­களை பெற்றுக் கொள்­வதில் மக்கள் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர்.

இவ்­வா­றான விநி­யோ­கங்கள் சில வேளை­களில் உயிர் பலிக்கும் கார­ண­மாகி விடு­கின்­றன.

உதவிப் பொருட்கள் விநி­யோ­கத்தின் போது உதவிப் பொருட்­க­ளுடன் காஸா­வுக்குள் நுழைந்த லொறி­களைச் சூழ்ந்து பெருந்­தி­ர­ளான மக்கள் சூழ்ந்து கொண்­டதால் அங்­கி­ருந்த இஸ்­ரே­லிய யுத்த தாங்­கிகள் அவர்­களை நோக்கி தாக்­குதல் நடத்­தி­யதால் அண்­மையில்112 பலஸ்­தீ­னர்கள் பலி­யா­னார்கள்.
எச்­ச­ரிக்கை வேட்­டுக்­களே தீர்க்­கப்­பட்­ட­தா­கவும், உதவிப் பொருள் உள்­ள­டங்­கிய லொறி மீது தாக்­குதல் நடத்­த­வில்லை எனவும் இஸ்ரேல் தெரி­வித்­துள்­ளது. அதி­க­மானோர் அங்­கி­ருந்து பயத்தில் ஓடி­யதால் நெருக்­க­டியில் சிக்கி மிதி­யுண்டு பலி­யாகி இருக்­கி­றார்கள் என்றும் இஸ்ரேல் குறிப்­பிட்­டுள்­ளது.
இஸ்­ரேலின் கூற்­றினை ஹமாஸ் இயக்கம் கடு­மை­யாக எதிர்த்­துள்­ளது. இஸ்ரேல் உதவிப் பொருட்­களை பெற்றுக் கொள்ள கூடி­யி­ருந்த மக்கள் மீதே வேட்­டுக்­களைத் தீர்த்­துள்­ளது. இதற்­கான சாட்­சி­யங்கள் உள்­ளன என ஹமாஸ் தெரி­வித்­துள்­ளது.

உதவி விநி­யோ­கங்கள் துரி­தப்­ப­டுத்­தப்­படும்
காஸா பிராந்­தி­யத்­தி­லுள்ள மக்கள் பட்­டி­னியால் வாடு­வ­தாகத் தெரி­வித்­துள்ள அமெ­ரிக்க உப ஜனா­தி­பதி கமலா ஹரிஸ், அந்தப் பிராந்­தி­யத்­துக்­கான உதவி விநி­யோ­கங்­களை அதி­க­ரிப்­ப­தற்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அல­பாமா பிராந்­தி­யத்தில் இடம் பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் அங்கு தெரி­விக்­கையில்,
நாளாந்தம் காஸா அழி­வ­டைந்து வரு­வதை நாம் பார்க்­கிறோம். அங்­குள்ள மக்கள் இலை­க­ளையும் மிரு­கங்­க­ளையும் உண­வாகக் கொள்­வ­தாக அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. பெண்கள் போஷாக்­கற்ற குழந்­தை­களைப் பிர­ச­விக்­கி­றார்கள். குழந்­தைகள், சிறு­வர்கள் ஆரோக்­கிய கவ­னிப்­பின்­றியும் போஷாக்­கின்மை, நீரி­ழப்பு கார­ண­மாக இறப்­ப­தா­கவும் அறிக்­கைகள் கூறு­கின்­றன. காஸாவில் எதிர்­வரும் 6 வார காலப் பகு­திக்கு உட­னடி யுத்த நிறுத்தம் அவ­சியம். அத்­தோடு இஸ்­ரே­லிய பணயக் கைதி­களை விடு­விக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். காஸாவில் அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்டு வரு­கி­றார்கள் என்றார்.

காஸாவில் போர் நிறுத்தம் வேண்டும் –ஜெனி­வாவில் இலங்கை
காஸாவில் உட­ன­டி­யாக போர் நிறுத்தம் அவ­சியம் என்­ப­துடன், மனி­தா­பி­மான உத­விகள் தேவைப்­படும் அனை­வ­ருக்கும் உத­விகள் வழங்­கப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு உத­விகள் உரிய முறையில் சென்­ற­டைய வேண்டும். இதே­வேளை இத்­த­கைய மிக மோச­மான மீறலைக் கருத்தில் எடுக்கத் தவ­று­வது சர்­வ­தேச மனித உரி­மைகள் தொடர்­பாக இயங்கும் கட்­ட­மைப்பின் நேர்­மைத்­தன்­மையைக் கேள்­விக்­குள்­ளாக்கும் என ஜெனி­வாவில் நடை­பெறும் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 55ஆவது அமர்வில் இலங்கை தெரி­வித்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற 55ஆவது கூட்டத் தொடரின் 13ஆவது அமர்வில் உறுப்பு நாடு­களின் கருத்­து­க­ளுக்குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய இலங்­கையின் பிர­தி­நிதி ஹிமாலி அரு­ண­தி­லக மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு தெரிவிக்கையில்,
ஒரே சீனா கொள்கைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும் மனித உரிமைகள் சார் விவகாரங்களைக் கையாள்வதில் சீனா வழங்கி வரும் ஒத்துழைப்பை பெரிதும் வரவேற்பதாகவும் கூறினார்.

மேலும் உலகளாவிய ரீதியில் இடம்பெறக் கூடிய மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடுகளின் இயலுமை மற்றும் செல்வாக்கு என்பவற்றுக்கு அப்பால் நியாயமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். குறிப்பாக தற்போது காஸாவில் சர்வதேச சட்டங்களும் மனித உரிமைகளும் மிக மோசமாக மீறப்பட்டு வருகின்றன என்றும் கூறினார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.