சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு 50 தொன் பேரீத்தம் பழம் அன்பளிப்பு

0 67

(ஏ.ஆர்.ஏ.பரீல்,ஏ.எஸ்.எம்.ஜாவித்)
சவூதி அரே­பியா அரசு ரமழான் நன்­கொ­டை­யாக இல­ங்கை முஸ்­லிம்­க­ளுக்­கென 50 தொன் (50 ஆயிரம் கிலோ) பேரீத்தம் பழங்­களை வழங்­கி­யுள்­ளது. பேரீத்தம் பழங்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்கும் நிகழ்வு நேற்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது.

கிடைக்­கப்­பெற்­றுள்ள பேரீத்தம் பழங்கள் எதிர்­வரும் 8ஆம் திகதி முதல் நாடெங்­கு­முள்ள 2500 பதிவு செய்­யப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் எனவும், பள்­ளி­வாசல் நிர்­வா­கங்கள் தங்­க­ளது ஜமா­அத்­தி­ன­ருக்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­வார்­க­ளெ­னவும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் ஆலா அஹமட் தெரி­வித்தார்.

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு வரு­டாந்தம் ரம­ழானில் சவூதி அரே­பியா அரசு நன்­கொ­டை­யாக பேரீத்தம் பழங்­களை வழங்கி வரு­கின்­ற­மைக்கு சவூதி அரே­பியா அர­சுக்கும் மன்­னர் மற்­றும் இள­வ­ரசர் சல்மான், இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர், சல்மான் நிலைய அதி­கா­ரிகள் உட்­பட தொடர்­பு­பட்ட அனை­வ­ருக்கும் உத­விப்­ப­ணிப்­பாளர் என்.நிலோபர் நன்­றி­களைத் தெரி­வித்தார்.

நிகழ்வில் இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்­தானி, சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்­கைத்­தூ­துவர் அமீர் அஜ்வத், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல், புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உட்பட திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.