தமிழ் – முஸ்லிம் நல்லுறவின் சின்னமாக மட்டக்களப்பு நகர பள்ளிவாசல் திகழ்கிறது

மெளலவி எம்.எச்.எம்.புஹாரி

0 214

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தென்­னிந்­திய பெரு­மக்கள் மட்­டக்­க­ளப்பு நகர முகப்பாய் கம்­பீ­ரமாய் அமைந்­தி­ருக்கும் ஜாமி­யுஸ்­ஸலாம் பள்­ளி­வா­சலை அமைத்துத் தந்து தமிழ் முஸ்லிம் உற­வுக்கும் இணைப்புப் பாலமாய் இருந்­தி­ருக்­கி­றார்கள் என்­பது வர­லாறு நெடு­கிலும் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது என காத்­தான்­குடி ஜாமி­யதுல் பலாஹ் அரபுக் கல்­லூ­ரியின் நிரு­வாக செய­லா­ளரும் ஹாபிழ்கள் ஒன்­றி­யத்தின் ஆலோ­ச­க­ரு­மான மெளலவி எம்.எச்.எம். புஹாரி தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்பு மாந­கர முஸ்லிம் சமூக சேவை இன நல்­லி­ணக்க அமைப்பின் கூட்­டமும் ஜும்ஆப் பள்­ளி­வாசல் ஜமா­அத்­தாரின் சங்க ஒன்று கூடலும் ஞாயி­றன்று காத்­தான்­குடி அல்­மனார் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது.

அமைப்பின் செய­லாளர் எம்.எஸ்.எம். அப்துல் காதர் தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் சட்­டத்­த­ர­ணிகள், மார்க்க அறி­ஞர்கள், சமூக சேவை­யா­ளர்கள், செயற்­பாட்­டாளர்கள், பிர­மு­கர்கள் உள்­ளிட்டோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

நிகழ்வில் அதி­தி­யாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரை­யாற்­றிய மெளலவி புஹாரி,
மட்­டக்­க­ளப்பில் ஆயுத முரண்­பா­டுகள் வன்­மு­றைகள் இடம்­பெற்­ற­போதும் கூட இந்தப் பள்­ளி­வாசல் தமிழ் முஸ்லிம் உறவின் முத்­தாய்ப்பாய் விளங்­கி­யது என்றால் அதன் சிறப்­பம்சம் தெளி­வாகத் தெரி­கி­றது.

மட்­டக்­க­ளப்பு நகர ஜாமி­யுஸ்­ஸலாம் நகர பள்­ளி­வா­சலை அமைத்து மிகச் சிறப்­பாக நிரு­வ­கித்து அதற்­காக மிகக் கடு­மை­யாக உழைத்­த­வர்கள் அனை­வரும் தென் இந்­திய காயல்­பட்­டி­னத்தைச் சேர்ந்த பெரு­மக்­க­ளே­யாகும்.

அவர்கள் என்­றென்றும் நினை­வு­கூ­ரப்­பட வேண்­டி­ய­வர்கள். அவர்கள் செய்த சிறப்­பான பணி இந்த அழ­கான பள்­ளி­வா­சலை மிகச் சிறப்­பான இடத்­திலே அமைத்­த­தாகும். இந்தப் பள்­ளி­வாசல் முஸ்­லிம்­க­ளுக்­கான வணக்க வழி­பாட்டுத் தல­மாக மட்­டு­மல்ல, இது தமிழ் முஸ்லிம் நல்­லு­றவின் சின்­ன­மா­கவும் திகழ்­கி­றது. மட்­டக்­க­ளப்பு மாந­க­ரிலே தமிழ் முஸ்லிம் நல்­லு­ற­வுக்­கான ஒரு இஸ்­லா­மிய சின்­னத்தைப் பார்க்க வேண்­டு­மானால் அது மட்­டக்­க­­ளப்பு நகர முகப்பாய் கம்­பீ­ரமாய் அமைந்­தி­ருக்கும் ஜாமி­யுஸ்­ஸலாம் பள்­ளி­வா­சல்தான்.

மட்­டக்­க­ளப்பில் ஆயுத முரண்­பா­டுகள் வன்­மு­றைகள் இடம்­பெற்­ற­போதும் கூட இந்தப் பள்­ளி­வாசல் தமிழ் முஸ்லிம் உறவின் முத்­தாய்ப்பாய் விளங்­கி­யது என்றால் அதன் சிறப்­பம்சம் தெளி­வாகத் தெரி­கி­றது.

புண்­ணிய தலமான பள்­ளி­வாசல் அமைந்­தி­ருக்­கின்ற இடம் முக்­கி­ய­மான மத்­திய இடமாகும். கச்­சேரி, நீதி­மன்றம், மாந­கர சபை, பொது­நூலகம் பிர­ப­ல­மான பாட­சா­லைகள், பிர­ப­ல­மான மைதானம், கிழக்கு மாகாண அஞ்சல் தலை­மை­யகம், வங்­கிகள், நகர கடைத்­தொ­கு­திகள் என்­ப­ன­வற்­றுக்கு மத்­தியில் இந்தப் பள்­ளி­வாசல் அமைந்திருக்கின்றது. அத­னால்தான் இது இன நல்­லு­றவின் சின்­ன­மாகத் திகழ்­கி­றது என்று கூறு­கின்றோம்.

அதையும் விட இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கு இன்­னொரு சிறப்பும் உண்டு. இந்த நாட்­டிலே இஸ்­லா­மிய மார்க்க அறி­ஞர்கள் உரு­வாக, அல்­குர்­ஆனை மிகச் சிறு­வ­ய­திலே மன­ன­மிட்டு இந்தப் பள்­ளி­வா­ச­லிலே தலைமை தாங்கி தொழுகை நடத்­திய ஒரு சிறு­வனின் செயலால் இந்தப் பள்­ளி­வாசல் 1969 இல் முன்­னோ­டி­யாகத் திகழ்ந்­தி­ருக்­கி­றது.

அந்தச் சின்னப் பையன்தான் பின்­னாட்­களில் ஹாபிஸ் எனப் பட்­டத்தைச் சுமந்த கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரா­கவும் சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரா­கவும் இருந்த ஹாபிஸ் செய்­னு­லாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்கள்.

அவரின் செயலால் தூண்­டப்­பட்­டதன் கார­ண­மா­கத்தான் வைராக்­கியம் கொண்டு காத்­தான்­கு­டி­யில் 1971ஆம் ஆண்டில் அல்­குர்ஆன் மனன வகுப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

மட்­டக்­க­ளப்பு நகர பள்­ளி­வா­சலில் 1971ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் மிகச் சிறிய வய­திலே புனித ரமழான் மாதத்தில் ஒரு சின்னப் பையன் அரு­மை­யாக சிறப்­பாக தொழுகை நடத்­தினார். இதனை அவ­தா­னித்த தென்­னிந்­திய பேர­றிஞர் சேஹ் அலி ஹாபிஸ் இருந்த சந்­தர்ப்­பத்­திலே அங்­கி­ருந்த தொழு­கை­யா­ளிகள் மத்­தியில் உருக்­க­மாகப் பேசினார். இந்த சின்னப் பையன் ஹாபி­ஸாக இவ்­வ­ளவு நேர்த்­தி­யாக தலை­மை­யேற்றுத் தொழுகை நடத்­தும்­போது ஏன் காத்­தான்­கு­டி­யி­லி­ருந்து ஹாபிஸ்கள் உரு­வா­க­வில்லை என்று அவர் கேள்வி எழுப்­பினார்.

அந்த வைராக்­கி­யம்தான் காத்­தான்குடியில் 1971ஆம் ஆண்­டிலே முத்­து­வாப்பா ஆலிம் அவர்­களால் அல்­குர்ஆன் மனன வகுப்பு ஆரம்­பிக்க வழி­வ­குத்­த­தோடு இந்த நாட்­டிலே ஹாபிஸ்கள் உரு­வா­வ­தற்கு கார­ண­மாக இருந்­தது மட்­டக்­க­ளப்பு பள்­ளி­வா­சல்தான்.

இது வர­லாற்­றிலே பொன்­னெ­ழுத்­துக்­களால் பொறிக்­கப்­ப­ட­வேண்­டியது. இப்­பொ­ழுது ஆயி­ரக்­க­ணக்­கான ஹாபிஸ்­களை நாம் உரு­வாக்கி உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் சிறந்த விரு­துகள், பாராட்­டுகள், கௌரவங்கள் பெற வழி சமைத்திருக்கிறோம்” என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.